உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 11, 2012

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

கடலூர்:
 
              திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் நின்றுச் செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.÷கடலூர் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
 
          இதையொட்டி திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்ததும், தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், துணைத் தலைவர்கள் பால்கி, பாபு, நல்லதம்பி, பொருளர் அருள்செல்வன், பேராசிரியை சாந்தி, ஆசிரியை வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

சிதம்பரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றது

சிதம்பரம்:
 
          திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. இன்று காலை 6.25 மணிக்கு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய இந்த ரெயில் 6.55 மணிக்கு தாமதமாக வந்தது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயில் என்ஜினில் இருந்து பெரும் புகை கிளம்பியது.

            ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பார்த்தபோது என்ஜின் வால்வு பகுதியில் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலை புதுசத்திரத்தில் நிறுத்தி அதில் இருந்த என்ஜினை கொண்டு வந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொறுத்தினர். இதைத்தொடர்ந்து 7.40 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சுமார் 2 மணி நேரம் ரெயில் என்ஜின் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், மே 13, 2010

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல கோரிக்கை

விருத்தாசலம் : 

            சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நிற்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: 

                திருச்சி ரயில்வே கோட்டத்தில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் முக்கியமானது. விருத்தாசலத்திலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லவும், கடலூரில் இருந்து விருத்தாசலம், சேலம் வழியாக பெங்களூர் மற்றும் கோயமுத்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்க வேண்டும். கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் திருச்சி சென்றவுடன் எண் மாற்றம் செய்யப்பட்டு திருச்சி - பாலக்காடு டவுன் என்று பாசஞ்சர் ரயிலாக சென்று வருகிறது. அந்த ரயிலை கடலூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை இரு மார்க்கத்திலும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனின் முன்புறம் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior