உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செம்மை நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மை நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 04, 2010

டெல்டா பாசனப் பகுதிகளில் செம்மை நெல் சாகுபடிக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை


நாற்று நடும் இயந்திரம்.
 
கடலூர்:

              நவீன அறிவியல் வேளாண்மையில் டெல்டா பாசனப் பகுதிகளில், செம்மை நெல் சாகுபடிக்குத் தேவையான இயந்திரங்கள் இந்த சம்பா பருவத்தில் கிடைக்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

                 தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனத்தை நம்பி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், டெல்டா பாசனப் பகுதிகள். சம்பா சாகுபடிக்கு ஜூலை 29-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி கொள்ளிடம் கீழணை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் பிபிடி, வெள்ளைப் பொன்னி, சின்னப்பொன்னி, பொன்மணி, ஏடிடி 38, சிஆர். 1009 உள்ளிட்ட நடுத்தர நெல் ரகங்களைச் சாகுபடி செய்ய இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பகுதிகளில் மேட்டுப் பாங்கான சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் செம்மை நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.வேளாண் தொழில்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், செம்மை நெல் சாகுபடியை வரவேற்கும் விவசாயிகள், அதற்குத் தேவையான இயந்திரங்கள் இல்லையே என்று கவலை தெரிவிக்கிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் 30 விவசாயிகளிடம் மட்டுமே நடவு இயந்திரங்கள் (ரூ.2.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை) இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 166 வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் 5-ல் கடந்த ஆண்டு நடவு இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இந்த ஆண்டு மேலும் 7 கூட்டுறவு சங்கங்களுக்கு நடவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

                செப்டம்பர் இறுதிக்குள் இயந்திரங்கள் வாங்கப்பட்டுவிடும். வேளாண் கருவிகளை இயக்க சுயஉதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று, கூட்டுறவு இணை இயக்குநர் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சம்பா நெல் விதைகள் மொத்த தேவையில் 17 சதவீதத்தை அரசு விநியோகிக்க வேண்டும் என்பது விதி. வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் தேவையான விதை நெல் இருப்பு வைத்து இருப்பதாக வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் விலை கிலோ பிபிடி ரகம் ரூ.23-36, சிஆர்.1009 ரூ.18-75, வெள்ளைப் பொன்னி ரூ.20-40. விதை நெல்லுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது. 

இதுபற்றி பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           "செம்மை நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவிட்டனர். ஆனால் அதற்குத் தேவையான இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ள இயந்திரங்களைக் கொண்டு 10 சதவீத வேளாண் பணிகளைத்தான் செய்ய முடியும். நடவு இயந்திரம் மட்டும் இந்த மாவட்டத்துக்கு 800க்கும் மேல் தேவைப்படுகிறது. அரசு தேவையான இயந்திரங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.கடந்த ஆண்டு வழங்கியதுபோல் இந்த ஆண்டும், விதை நெல்லுக்கு மத்திய அரசு மானியம் கிலோவுக்கு ரூ.2 வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விநியோகிக்கும் விதை நெல்லுக்கும் மாநில அரசு மானியம் ரூ.5 வழங்க வேண்டும். மேட்டூர் அணை ஜூலை 29-ம் தேதி திறக்கப்பட்டும், திறக்கப்படும் நீரின் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் வேளாண் பணிகளுக்கு நீர் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

                   வடகிழக்குப் பருவமழை செப்டம்பர் 20-ல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பாசனத்துக்கு போதிய தண்ணீரைத் திறக்காமல், மேட்டூர் அணையில் தொடர்ந்து நீரைத் தேக்கி வைப்பதால் என்ன பயன்? பராமரிப்புப் பணிகள் முடிவடையாததே போதிய தண்ணீர் திறக்கப்படாமைக்குக் காரணம்' என்றார்.

Read more »

திங்கள், ஜூலை 19, 2010

செம்மை நெல் சாகு​ப​டிக்கு மாற​லாமே!

செம்மை நெல் சாகு​படி முறை​யில் நாற்று நடப்​ப​டும் வயல்.​ செம்மை நெல் சாகு​ப​டி​யால் ஒரு நாற்று பல்​வேறு கிளை​க​ளாக செழித்து வளர்ந்து இருக்​கும் வயல்.

கட​லூர்:
               அகில இந்​திய அள​வில் வேளாண் உற்​பத்தி குறைந்து வரு​வ​தாக புள்ளி விவ​ரங்​கள் தெரி​விக்​கின்​றன.​ தமி​ழ​கத்​தின் பிர​தான சாகு​ப​டிப் பயிர் நெல்.​ 
               நெல் உற்​பத்​தி​யில்,​​ இந்​தி​யா​வில் 7-வது இடத்​தில் தமி​ழ​கம் உள்​ளது.​ ​ ​இந்த நிலை​யில் கிரா​மப்​புற வேலை உறு​தித்​திட்​டம் செயல்​ப​டத் தொடங்​கியதும்,​​ விவ​சாய வேலை​க​ளுக்கு ஆட்​கள் கிடைப்​பது இல்லை என்ற நிலை உரு​வாகி விட்​டது.​ எனவே விவ​சா​யம் காப்​பாற்​றப்​பட வேண்​டு​மா​னால்,​​ இயந்திர மய​மாக்​கல் மற்​றும் நவீன தொழில் நுட்​பங்​கள் மூலம் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​த​லைத் தவிர வேறு வழி​யில்லை.​ ​இ​யந்​தி​ரங்​க​ளைப் பயன்​ப​டுத்தி,​​ நெல் உற்​பத்​தி​யைப் பெருக்​கு​வ​தில் சாதனை ஏற்​ப​டுத்​தி​வ​ரும் திட்​டம்,​​ செம்​மை​நெல் சாகு​ப​டித் திட்​டம் ஆகும்.​ 2000க்கு முன்​னால் தென்​னாப்​பி​ரிக்கா அருகே மட​காஸ்​கர் தீவில் செயல்​ப​டுத்​தப்பட்​டது இத்​திட்​டம்.​ 
                   பின்​னர் இந்​தி​யா​வி​லும்,​​ 2003-க்குப் பின்​னர் தமி​ழ​கத்​தி​லும் இத்​திட்​டம் செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ ​பா​ரம்​ப​ரிய விவ​சா​யத்​தில் ஒரு கிலோ நெல் உற்​பத்தி செய்ய 3 ஆயி​ரம் லிட்​டர் தண்​ணீர் தேவைப்​ப​டு​கி​றது.​ வேலை ஆட்​க​ளும் அதி​கம் தேவை.​ ​உற் ​பத்​தி​யைப் பெருக்க,​​ இடு​பொ​ருள் செல​வு​க​ளைக் குறைக்க,​​ நீர்​தே​வை​யைக் குறைக்க,​​ களை​களை உர​மாக மாற்ற,​​ நுண்​ணு​யி​ரி​க​ளின் செயல்​பாட்டை அதி​க​ரிக்க,​​ தழைச்​சத்து தேவை​யைக் குறைக்க,​​ அனைத்​தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகு​ப​டித் திட்​டம் உத​வு​கி​றது.​ ​இத் ​திட்​டத்​தில் விதை நெல் அளவு,​​ ஏக்​க​ருக்கு 30 கிலோ​வில் இருந்து 3 கிலோ​வா​கக் குறை​கி​றது.​ ஏக்​க​ருக்கு நாற்​றங்​கால் ஒரு சென்ட் என்ற அள​வுக்​கும் நாற்​றுக்​க​ளின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்​க​ளா​க​வும் குறை​கி​றது.​ ​வ​ழக்​க​மான விதை​நேர்த்தி முறை​கள் பின்​பற்​றப் படு​கின்​றன.​ நடவு வய​லில் ஒரு குத்​துக்கு ஒரு நாற்று மட்​டுமே நடப்​ப​டு​கி​றது.​ 22.5 க்கு 22.5 செ.மீ.​ சது​ரத்​துக்கு ஒரு நாற்று நடப்​பட வேண்​டும்.​ இதற்​காக அள​வுச் சட்​டம் ஒன்றை வேளாண் துறையே வழங்​கு​கி​றது.​ ​இ​யந்​தி​ரம் மூல​மாகோ வேலை​ஆள்​க​ளைக் கொண்டோ நடவு செய்​ய​லாம்.​ கோனோ​வீ​டர் இயந்​தி​ரம் மூலம் களை​களை அகற்றி,​​ அங்​கேயே மடித்​துப்​போட்டு உர​மாக்​கும் உத்தி இதில் கையா​ளப்​ப​டு​கி​றது.​ ​நீர்​ம​றைய நீர் கட்டி,​​ பாசன நீர் அள​வைக் குறைக்க ஆலோ​சனை தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​ குறிப்​பிட்ட பயி​ருக்கு,​​ பச்சை வண்ண அட்​டை​மூ​லம் தழைச் சத்து நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது.​ நடப்​பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடி​கள் வரை கிளைத்து அவற்​றில் கதிர்​கள் தோன்​று​வ​து​தான் இம்​முறை நெல் சாகு​ப​டி​யின் சிறப்பு அம்​சம்.​ ​கட​லூர் மாவட்​டத்​தில் நெல் உற்​பத்தி சரா​சரி அளவு,​​ ஏக்​க​ருக்கு 2800 கிலோ.​ தமி​ழ​கத்​தின் சரா​சரி நெல் உற்​பத்​தி​யும் அது​தான்.​ ஆனால் செம்​மை​நெல் சாகு​படி மூலம் ஏக்​க​ருக்கு 5 ஆயி​ரம் கிலோ நெல் உற்​பத்தி செய்ய முடி​யும் என்​கி​றார்​கள் வேளாண் அலு​வ​லர்​கள்.​ எனி​னும் இதன் இலக்கு ஏக்​க​ருக்கு 7 ஆயி​ரம் கிலோ என​வும் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​க​ டந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக,​​ செம்மை நெல் சாகு​படி திட்​டம் விவ​சா​யி​க​ளி​டம் பெரு​ம​ள​வுக்​குப் பிர​சா​ரம் செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ வட்ட வாரி​யாக செயல்​முறை விளக்க வயல்​கள் அமைக்​கப்​ப​டு​கின்​றன.​ ​இத்​திட்​டத்​தைச் செயல்​ப​டுத்​தும் விவ​சா​யிக்கு,​​ ஏக்​க​ருக்கு ரூ.​ 2,700 மதிப்​புள்ள வேளாண் கரு​வி​க​ளும்,​​ ரூ.​ 700 மதிப்​புள்ள இடு​பொ​ருள்​க​ளும் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கி​றது.​ ஆனா​லும் இத்​திட்​டம் 35 முதல் 40 சத​வீத விவ​சா​யி​க​ளி​டம் மட்​டுமே சென்​ற​டைந்து இருப்​ப​தாக வேளாண் துறை அதி​கா​ரி​களே தெரி​விக்​கி​றார்​கள்.​ எனவே இத்​திட்​டம் மேலும் பல விவ​சா​யி​க​ளைச் சென்​ற​டைய வேண்​டும்.​
​
யோச​னை​கள்:​​  
திட்டம் குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் தெரி​விக்​கும் ஆலோ​ச​னை​கள்:​ 
                  காவிரி டெல்டா பாச​னக் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் ஒற்றை நாற்​று​நடவு,​​ சற்று பின்​ன​டைவை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ 3 நாற்​று​கள் வரை நடு​கி​றோம்.​ கார​ணம் கடை​ம​டைப் பகு​தி​க​ளில் வயல்​க​ளில் தண்​ணீர் தேங்​கு​தைக் கட்​டு​படுத்த முடி​யாது.​ இத​னால் இயந்​தி​ரம் மூலம் நடவு சிர​ம​மா​கி​றது.​ மேலும் ஒற்றை நாற்று எளி​தில் வீணாகி விடு​கி​றது.​ ​​ நாற்று நடு​வோ​ரும் பாரம்​ப​ரிய முறை​யில்,​​ ஒப்​பந்த அடிப்​ப​டை​யில் நடவு செய்​வ​தால்,​​ அவ​சர அவ​ச​ர​மாக நடும்​போது நாற்​றுக்​க​ளின் வேர்ப்​ப​கு​தியை பெரும்​பா​லும் மடித்து நட்​டு​வி​டு​கி​றார்​கள்.​ இத​னால் முளைப்​புத் திறன் குறைந்து விடு​கி​றது.​ எனவே இத்​திட்​டத்​தில் விவ​சா​யி​க​ளுக்கு பயிற்சி அளிப்​பது போல் நாற்று நடும் பெண்​க​ளுக்​கும் சிறப்​புப் பயிற்சி அளிக்க வேண்​டும்.​ ​நி​தா​ன​மாக நாற்று நட்​டால்​தான் ஒற்றை நாற்று முறை வெற்​றி​பெ​றும்.​ எனவே நாற்று நடும் பணிக்​கான செல​வில் ஒரு பகு​தியை விவ​சா​யி​க​ளுக்கு மானி​ய​மாக அரசு வழங்​க​லாம்.​ காவிரி டெல்டா கடை​ம​டைப் பகு​தி​க​ளில் இத்​திட்​டம் வெற்றி பெற வடி​கால் வச​தியை மேம்​ப​டுத்த வேண்​டும் என்​றார் ரவீந்​தி​ரன்.​

Read more »

வியாழன், ஜூலை 15, 2010

செம்மை நெல் சாகுபடி காலத்தில் இடு பொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடலூர்: 

            செம்மை நெல் சாகுபடி நேரத்தில் இடு பொருட்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் செம்மண்டலம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட் புக் கூட்டம் நடந்தது. இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் அண்ணாகிராம பகுதியைச் சேர்ந்த விவசாயி வரதன், 

               'உளுந்து பயிருக்கு காலத்தில் மானியம் வழங்க வேண்டும். காலத்தில் வழங்காததால் விவசாயிகளுக்கு திட்டம் பயனற்று போகிறது. எனவே, மானியத்தை விரை வாக வழங்க வேண்டும்' என தெரிவித்தார்.

மேல்பட்டாம்பாக்கம் விவசாயி சேகர், 

             "செம்மை நெல் சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் இடு பொருட்கள் வழங்காததால் விவசாயம் பாதிக்கும். எனவே, சாகுபடி நேரத்தில் வழங்க வேண் டும்' என்றார்.

திருக்கண்டேஸ்வரம் விவசாயி கோபிநாத், 

              "குறைந்த விதையில் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செம்மை நெல் சாகுபடி முறை அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதற் கான விதை ஏக்கருக்கு 5 கிலோ மட்டும் தேவை எனக் கேட்டால் 50 கிலோ தான் உள்ளது என வழங்குகின்றனர். தேவையான அளவு விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் கோனோவீடர் கருவி


பண்ருட்டி : 

                   விவசாயிகளுக்கு மானி யத்தில் ஜிப்சம், களையெடுக்கும் கருவிகள் விற் பனை செய்யப்பட்டு வருவதாக பண்ருட்டி வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எக்டேருக்கு மூவாயிரம் ரூபாய் மானியத்தில் களையெடுக்கும் கோனோவீடர் கருவி ஒன்றும், வரிசை நடவிற்கு உதவிடும் மார்க்கர் கருவி ஒன்றும், உரம் மற்றும் உயிரியல் காரணிகளும் வழங்கப்படுகிறது.

                 நெல், சிறுதானியங்கள், உளுந்து, மணிலா, எள் பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில்  ஜிப்சம் மற்றும் ஜிங்சல்பேட் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மூட்டைக்கு 61 ரூபாய் மானியம் வழங் கப்படுகிறது. ஜிங்க் சல்பேட் எக்டேருக்கு 25 கிலோ வீதம், கிலோ 18 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யும் நெல், கரும்பு, மணிலா பயிர் வகைகள், தென்னை, பருத்தி முதலான பயிர்களுக்கும் கந்தக சத்து தேவை அதிகம் உள் ளது. ஆனால் மண்ணில் தவையான கந்தகசத்து இல்லாததால் மகசூல் குறைகிறது.இதனை தவிர்த்திட  ஜிப்சம் எக்டேருக்கு பயிறுவகை பயிர்களுக்கு 110 கிலோவும், மணிலா மற்றும் நெல் பயிர்க்கு 400 கிலோவும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
                     ஜிப்சம் மற்றும் ஜிங்சல் பேட் பயிருக்கு அடியுரமாக இடுவதால் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் அமைக்க எக்டேருக்கு 7,500 ரூபாய் மானியத்திலும், தார்பாய் மற்றும் விதை ஊன்றும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஐசோபாம் திட்டத்தில் மணிலா டி.எம்.வி.2 ரகம் மற்றும் உளுந்து டி.9 ரகம் பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்தில் விவசாயிகள் வாங்கி பயன்பெற அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior