உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சேத்தியாத்தோப்பு பேரூராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேத்தியாத்தோப்பு பேரூராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 05, 2011

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்

சேத்தியாத்தோப்பு : 

          சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 4 பேரும் உறுப்பினர் பதவிக்கு 60 பேரும் களத்தில் உள்ளனர்.

                   சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., இளஞ்செழியன், தி.மு.க., மனோகரன், காங்., பிச்சப்பிள்ளை, தே.மு.தி.க., மதிவாணன் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர். 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 58 பேர் போட்டியிடுகின்றனர்.

வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்: 

1-பேபி, செந்தமிழ்ச்செல்வி, ஜெயா, லலிதா.

2-ராமலிங்கம், கருணாநிதி,

3-நன்மாறன், பாலசுந்தரம். 

4-குணசேகரன், செந்தில். 

5-ஸ்ரீதர், ஜெயக்குமார், ராமன்.

6-ராஜகுரு, ராஜேந்திரன், அசோக். 

7-செந்தாமரை, சுசிலா, தெய்வநாயகி, கசப்பாயாள். 

8-அஞ்சாபுலி, தணிகாசலம், சத்தியராஜ், தமிழ்மணி, மகேந்திரன், சவுந்தரராஜன், முருகேசன், பழனிசாமி, பாக்கியராஜ், கிருஷ்ணபெருமாள், சம்பத், மணி, மாயவன், 

9-ஜெயலட்சுமி, ஷியமளாதேவி, தையல்நாயகி, லட்சுமி. 
 10-சுதா, ரேவதி, லதா. 

11-கோவிந்தசாமி,சீத்தாராமன், ராமச்சந்திரன், சுப்ரமணியன். 

12-ராஜவேல், மகாலிங்கம், மணிகண்டன், ரமேஷ், கனகராசன், தட்சணாமூர்த்தி, அருளரசன்.

13-தமிழரசி, செந்தமிழ்ச்செல்வி, சாந்தி. 

14-ஜபருல்லாகான், கலைவாணன், நெடுஞ்செழியன், தமிழ்மணி. 

15-எழிலரசி, சரவணகுமார்.





Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:

           சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

            சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு சென்னிநத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஊராட்சி சாலையும், நெடுஞ்சாலையும் சேருமிடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை சந்திக்கும் பகுதியில் வடபுறம் மற்றும் தென்புறம் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பஸ் ஏறவும், இறங்கவும் 2 கி.மீ., தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பபட்டுள்ளது.

Read more »

திங்கள், ஜூன் 07, 2010

8 ஆண்டுகளாக ஒரே வண்டியுடன் வசதிகளின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம்

சேத்தியாத்தோப்பு: 

                     அடிப்படை வசதியின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் கடந்த 92ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக அலுவலக கட்டடம், ஒயர்லஸ் கட்டடம், ஓய்வு அறை, எழுத்தர் அறை என்று நான்கு தடுப்பு சுவர் கொண்ட கட்டடத்தில் பெயரளவுக்கு ஆஷ் பெஸ்டாஸ் ஷீட்போடப்பட்டுள்ளது.

                      ஓட்டை உள்ள இடங்களின் சம்மந்தட்டிகளைக் கொண்டு மறைத்துள்ளனர். வெயிலின் கொடுமைக்கும் மழையின் தூறலுக்கும் பயந்து தீயணைப்பு வண்டிக்கு அடியில் அமர்ந்து தனது எழுத் துப்பணிகளை கவனித்து வருகின்றனர். 17 பேர் பணிபுரியும் தீயணைப்பு துறையினரின் ஓய்வு அறையும் மோசமான நிலையில் உள்ளது. 

                       இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் 18 ஆண்டுகளாக ஒரே ஒரு தீயணைப்பு வண்டி தான் உள்ளது. அதுவும் அடிக்கடி மக்கர் செய்து விடுவதால் அதை சீரமைக்கவே தீயணைப்பு படையினர் படாத பாடுபடுகின்றனர். ஆயிரம் காலன் கொள்ளளவு கொண்ட தீயணைப்பு வண்டிக்கு தண்ணீர் பிடிக்க படாதபாடுபடுகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கக் கூடிய வகையில் நீர் வெளியேற்று குழாய் அமைக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் பலமுறை முறையிட்டும் பலனில்லாமல் தற்போது சர்க்கரை ஆலையில் உள்ள தரை கிணற்றுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் தேவையான வசதிகளை தற்போது இருக்கும் இடத்திலேயே செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior