உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

கடலூர் மாவட்ட பந்த் -90% :பொதுமக்கள் அவதி

              என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அறிவித்த பந்த் 90% நடந்து வருகிறது. என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                இவர்களுக்கு ஆதரவாகவும், இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தியும் அதிமுக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளன. 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன்,  

                         நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                 இந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இன்று பொது வேலை நிறுத்தம் செய்து ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளன. தொழிலாளர் அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதையடுத்து, இந்தப்பொது வேலை நிறுத்தத்தின் போது கடையடைப்பு செய்து ஆதரவு தருவது என்று எமது பேரவை முடிவு எடுத்துள்ளது’’ என்று அறிவித்தார்.

               இதையடுத்து இன்று எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்தையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பென்னாடம் , பன்ரூட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் அருளழகன் தனது ஆதரவாளர்களுடன் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்தார்.  போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்தவர்களை களைத்தனர்.

                 போலீஸ் பாதுகாப்புடன் அவ்வப்போது அரசு பேருந்துகள் இயங்குகின்றன.  இதனால் குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் ஊழியர்களும், பொதுமக்களூம் அவதிப்படுகின்றனர். 90% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  90% பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Read more »

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மறியல்: 650 பேர் கைது


 
நெய்வேலி:
 
             என்எல்சி 2-ம் சுரங்கம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 650 ஒப்பந்தத் தொழிலாளர்களை மந்தாரக்குப்பம் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 19-ம் தேதி இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
                 இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை 3 முறை நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தம் நடவடிக்கைகளில் இறங்கினர். ஏஐடியுசி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை 2-ம் சுரங்கம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
               இதன்படி திங்கள்கிழமை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு, 2-ம் சுரங்க வாயிற்பகுதிக்குச் சென்றதும் அங்கு மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி மணி தலைமையிலான போலீஸôர் தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்தனர்.மறியல் போராட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். 
 
                      சங்கத்தின் ஏனைய நிர்வாகிகள், இளஞ்செழியன், குப்புசாமி, பொன்னுசாமி  உள்ளிட்டோர் ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும்  மாலையில் விடுவிக்கப்பட்டனர்.இதேபோன்று தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி நகரின் முக்கிய வீதிகளில் மனிதசங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 
 
இன்று மீண்டும் பேச்சு:
 
                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், சென்னையில் திங்கள்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் ஜகன்நாதராவ் முன்னிலையில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 இரவுப்பணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
               இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆணையர் எம்.எம்.ஜகன்நாதராவ் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பங்கேற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில், உடனடியாக ஸ்டிரைக்கை வாபஸ் பெறுங்கள், பின்னர் பேசித் தீர்வுகாணலாம் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்தார்.
 
                          பேச்சுவார்த்தையின் போது நிர்வாகத் தரப்பில்  துணைப் பொதுமேலாளர் பெரியசாமி, கூடுதல் முதன்மை மேலாளர் அறிவு, முதுநிலை மேலாளர் சோமு உள்ளிட்டோர் இருந்தனர்.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டம்: மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்


   
                நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டத்துக்கு தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கே.எஸ். அழகிரி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.  
 
                      கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அழகிரி, மத்திய நிலக்கரி துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை தில்லியில் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி  மனு அளித்தார்.   
 
மனுவில் கூறியுள்ளதாவது: 
 
                        என்.எல்.சி. நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் பரிசீலிக்காததால், தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். கடந்த 15.5.2002 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையில் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.   
                இதை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் தொழிலாளர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது.  எனினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முன்வராத என்.எல்.சி. நிர்வாகம், தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.  காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, ஏழைகள் முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 
 
                தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் என நாட்டின் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி. நிர்வாகம், மத்திய அரசின் ஏழைகள் நலன் சார்ந்த அணுகுமுறைக்கு எதிராக செயல்படுகிறது.  எனவே, மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் இந்தப் பிரச்னையில் நேரடியாக தலையிட வேண்டும். 
 
                     என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அழகிரி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஜெய்ஸ்வால் உறுதி அளித்துள்ளார் என்று அழகிரி தெரிவித்தார்.

Read more »

வியாழன், செப்டம்பர் 16, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து 20 முதல் ஸ்டிரைக்

நெய்வேலி:

                   என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், செப்டம்பர் 20-ம் தேதி இரவுப் பணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

                    சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் என்எல்சி நிர்வாகத்திடம் ஆகஸ்ட் 19-ல் வேலைநிறுத்தக் கடிதம் அளிக்கப்பட்டது.இதையடுத்து இம்மாதம் 2-ம் தேதி புதுச்சேரியில் உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதைத்தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவுசெய்து, அதுபற்றி விவாதிக்க சங்க பேரவைக் கூட்டத்தை செப்டம்பர் 14-ல் நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க வளாகத்தில் கூட்டியது.

                          இக் கூட்டத்தில், "புதுச்சேரியில் உதவித் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் வியாழக்கிழமை (செப். 16) நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது என்றும், பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்தால் 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது' எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு: 19-ந் தேதி ஊர்வலம்

நெய்வேலி:
 
              நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியது:-
 
           நெய்வேலி என்.எல்.சி.யில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தில் 9 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 
              சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் என்.எல்.சி. நிறுவனம் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
 
             எனவே வருகிற 19-ந்தேதி மாலை 3 மணிக்கு நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் எப்போது ஈடுபடுவது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior