உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தமிழக அரசின் இணைய வழிச் சேவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசின் இணைய வழிச் சேவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 20, 2011

ராகிங், ஈவ் டீசிங் புகார்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி

             கல்லூரிகளில் ராகிங், ஈவ் டீசிங்கை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புகார்களைத் தெரிவிக்க தனி மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன'' என, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக சட்டம்  ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 


           தமிழக போலீசின், www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில், ராகிங் மற்றும் ஈவ் டீசிங் ஆகிய புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் தெரிவிப்பவர் குறித்த விவரங்கள், வெளியிடப்பட மாட்டாது. ராகிங் புகார்களைப் பெற, போலீஸ் அதிகாரிகளுக்கு தனி மொபைல்போன் எண்கள் அளிக்கப்படுகின்றன.

              போலீஸ் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய புகார்கள் இருப்பின், அவற்றை மாணவர்கள் தெரியப்படுத்த, கல்வி நிலையங்களில் புகார்ப் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தனி நபர்கள், மொபைல்போன் மூலம் குறுந்தகவல்களை அனுப்ப, போன் எண்களை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 











Read more »

சனி, ஆகஸ்ட் 06, 2011

இணையதளம் மூலம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நூலகங்கள்

           மாணவர்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் உள்ள 90 உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  

               சென்னை அறிவியல் நகரம் இப்பணியை மேற்கொண்டு வருகிறது.  நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு சேர்க்கிறது. உலகின் எந்தப் பகுதியில் உள்ள தகவல்களையும் மக்கள் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் அறியக்கூடிய வகையில் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.  இந்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை நூலகங்களிலும் அமல்படுத்தும் முயற்சியை தமிழக பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது.  

               அதாவது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள மைய நூலகங்களை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இணைய தளம் மூலம் இணைக்கும் பணியை பொது நூலகத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பகுதியில் இருந்து கொண்டே, மாநிலத்தின் 32 மைய நூலகங்களிலும் என்னென்ன நூல்கள் மற்றும் அரிய தகவல்கள் உள்ளன என்பதை மக்கள் அறிய முடியும்.  

                  இதுபோல், உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் பணியையும் சென்னை அறிவியல் நகரம் மேற்கொண்டுள்ளது.  அதாவது, சென்னையில் உள்ள ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய கணித அறிவியல் நிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் என 90 உயர் கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் நூலகங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.  

இதுகுறித்து அறிவியல் நகர துணைத் தலைவர் வி.கே. சுப்புராஜ் கூறியது:  

              சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் நூலகங்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  புத்தகங்களை மாணவர்கள் தேடி அலையவேண்டிய அவசியம் இனி இருக்காது. குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் என்னென்ன நூல்கள் உள்ளன என்பதை இணையதளம் மூலமே மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்றார்.





Read more »

வெள்ளி, டிசம்பர் 31, 2010

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்

சிதம்பரம் : 

            மின் கட்டணத்தை இனி இணைய தளம் மூலம் செலுத்தி பயனடையலாம் என சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              தமிழ்நாடு மின் துறை, நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு இணைய தளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே நுகர்வோர் இந்த வசதியை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி பயனடையலாம். மின்வாரிய அலுவலகங்கள் மூலமும் மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், அக்டோபர் 21, 2010

தமிழக அரசின் ஆன்-லைன் சேவைகளுக்கு வரவேற்பு இல்லை

                   ஆன்-லைன் வழியே ஜாதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற அரசின் சேவைகள் மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், இந்தச் சேவை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையும் முறை அமலில் உள்ளது. 

                    இந்த நிலையில், வருவாய்த் துறையைச் சார்ந்த பணிகளான ஜாதிச் சான்றிதழ், வருமான வரிச் சான்றிதழ், ஆதரவற்ற பெண்களுக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல், பட்டதாரியில்லா குடும்பம் எனும் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.  இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. திட்டம் தொடக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இதுவரை 15 பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விழிப்புணர்வு பிரசாரம்:

                  "ஆன்-லைன் மூலம் அரசு சேவைகளைப் பெறலாம்' என்று பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு அதன் பிறகு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.   இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது போன்று அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் ஆன்-லைன் மூலம் அரசு சேவைகள் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.   இந்த மாவட்டங்களில் திட்டத்தை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior