உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தமிழக அரசு ஊழியர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசு ஊழியர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 21, 2010

சத்துணவு ஊழியர்கள் மனிதச்சங்கிலி

 கடலூர்:

            தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.  "25 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராமநாதன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் விளக்க உரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மருதவாணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு பாராட்டு

சிதம்பரம் : 
 
                   அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி அறிவித்த தமிழக முதல்வருக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளது. 
 
தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில், 
 
                  மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை எந்த அரசு ஊழியர் சங்கங்களும் கோரிக்கை வைக் காத நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எட்டு சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிட்டதுடன், ஜனவரி 2010 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். சிவஇளங்கோ அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக் கையில், மத்திய அரசு அறிவித்தது போல் மாநிலத்தில் 1-1-2010 முதல் 8 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி ரொக்கமாக வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக் கும் என கூறியுள்ளார்.

Read more »

புதன், பிப்ரவரி 24, 2010

அரசு ஊழியர் சங்கத்தினர் பிரசாரம்


திட்டக்குடி: 

                     திட்டக்குடி தாலுகாவில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை விளக்கி பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.

                      தமிழக அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊதிய குறைபாடுகளை களைந்திட நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையினை உடனடியாக வெளியிடவும், 2006 ஜனவரி முதல் ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகையை ஒரே தவணையில் வழங்கிட வேண்டும். காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் முறையான நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் கடந்த 15 முதல் 25 வரை நடந்து வருகிறது. திட்டக்குடி தாலுகா அலுவலக ஊழியர்களிடம் வட்டத்தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் பிரசாரம் செய்யப் பட்டது.வட்ட துணைத்தலைவர் அண்ணா துரை, மாவட்டத் தலைவர் காசிநாதன், இணை செயலாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் நாட்டுதுரை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior