உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தமிழக சட்டசபை தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக சட்டசபை தேர்தல் 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 11, 2011

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 62 அதிரடிப்படை குழு அமைப்பு

கடலூர் : 

          தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 62 அதிரடிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 600 துணை ராணுவ வீரர்களும், 110 தமிழ்நாடு சிறப்பு படைபோலீசார் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களை கொண்டு தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

                அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், ஓட்டுப்பதிவு முடிந்த பின் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரவதற்காக 188 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

              மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு மண்டலக் குழுவிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 துணை ராணுவ வீரர்கள், 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 58 அதிரடிப்படை குழுஅமைக்கப்பட்டுள்ளது.
                 இக்குழுவில் துணை ராணுவம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் தலா இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் விரைந்து செல்ல நடவடிக்கையாக துணை ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 10 பேர் கொண்ட நான்கு அதிரடிப்படை மாவட்ட தலைநகரான கடலூரில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read more »

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1,20,000 கோடி தேவை

             தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காக தி.மு.க. வும், அ.தி.மு.க.வும் போட்டி போட்டு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அனைவருக்கும் மிக்சி அல்லது கிரைண்டர் இலவசமாக தரப்படும் என்று தி.மு.க. கூறி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் வீடு தோறும் மிக்சி, கிரைண்டர், பேன் மூன்றும் இலவசமாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

               மாணவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் தருவதாக தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இந்த இலவச திட்டங்களை அமல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். அ.தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளது. ரேசன் கார்டு வைத்துள்ள 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி கொடுத்தால் ஆண்டுக்கு கூடுதலாக 360 கோடி ரூபாய் செலவாகும்.
 
             தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வண்ண இலவச தொலைக்காட்சி திட்டத்துக்கு ரூ. 3742 கோடி செலவிடப்பட்டது. மிக்சி, கிரைண்டர், பேன் இலவசமாக கொடுக்க இதே அளவு பணம் தேவைப்படும். மிக்சி அல்லது கிரைண்டர் வழங்க ரூ. 860 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டால் ரூ. 1720 கோடி தேவைப்படும். பேன் வழங்க ரூ. 500 கோடி செலவாகும்.
 
                3 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்துக்கு அரசு ரூ. 75 ஆயிரம் கொடுத்து உதவுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ. 2250 கோடி செலவாகிறது. ரூ. 75 ஆயிரம் மானியத்தை ரூ. 1 லட்சமாக உயர்த்தினால் கூடுதலாக ரூ. 705 கோடி செலவாகும். அ.தி.மு.க. இந்த உதவித் தொகையை 1.80 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  
 
               தமிழ்நாட்டில் கலை கல்லூரிகளில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தொழில் கல்லூரிகளில் சுமார் 3 லட்சம் பேர் படிக்கிறார்கள். பிளஸ்-2 படிக்கும் மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை 12 லட்சம் பேர். இவர்களுக்கு இலவசமாக லேப்-டாப் கொடுக்க ஆயிரம் கோடி ரூபாய் செல வாகும். கட்சியினர் போட்டி போட்டு அறிவித்துள்ள இலவச திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். தமிழக அரசுக்கு வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. டாஸ்மாக் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

Read more »

புதன், ஏப்ரல் 06, 2011

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகள் 3 நாள் மூடல்

கடலூர்:

            சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 11-ம் தேதி மாலை முதல், வாக்குப் பதிவு நடைபெறும் 13-ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.  

இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையொட்டி மதுபானக் கடைகள் அனைத்தையும், 11-ம் தேதி மாலை 5 மணி முதல், 13-ம் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13-ம் தேதியும் மூடிவிட தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. 

              இதனால், டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக் கடைகள், ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்தும், மேற்கண்ட தேதிகளில் மூடப்பட்டு இருக்கும்.  இந்த நாள்களில் மதுபானக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்களும் மூடப்பட்டு இருப்பதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள்,  ஹோட்டல் உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். 

               இந்த உத்தரவை மீறி மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் ஹோட்டலில் மது அருந்தும் பார்களை திறந்து வைத்து இருந்தாலோ, அவற்றில் மது விற்பனை நடைபெற்றாலோ, கடை மேற்பார்வையாளர்கள், ஹோட்டல், பார் உரிமையாளார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

Read more »

புதன், மார்ச் 23, 2011

கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார் முதல் அமைச்சர் கருணாநிதி

             
              தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் புதன்கிழமை (23.03.2011) மாலை தொடங்கி வைக்கிறார். இதற்காக திருவாரூர் தெற்கு வீதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு    ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

             தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக முதல் அமைச்சர் கருணாநிதி புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு அவர் புதுச்சேரி, கடலூர் வழியாக திருவாரூர் செல்கிறார். மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தொடங்குகிறது. அதில் முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். வியாழக்கிழமை காலை திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.


Read more »

புதன், மார்ச் 16, 2011

கடலூர் மாவட்ட தேர்தல் இணையத்தளம்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடலூர் மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கடலூர் மாவட்ட  இணையத்தளத்தில் தேர்தலுக்கென ஒரு வலைப்பக்கதினை தொடங்கி உள்ளது. 

இந்த தேர்தல் இணையதளத்தில் கடலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி விவரங்கள், வாக்காளர்கள் எண்ணிக்கை, பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 



மேலும் அதிக விபரங்களுக்கு 
 
 
 பார்க்கவும்.

Read more »

கடலூர் சோதனை சாவடியில் காரில் ரூ.2 லட்சம் சிக்கியது


கடலூர்

            சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான பணம் சிக்கியது.

              அதேபோல் நேற்று மாலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தொகுதி தேர்தல் உதவி அதிகாரி அசோகன், அலுவலர்கள் பழனி, சிவா மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். இதில், திண்டிவனத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் தனவேந்தன் (வயது 40), டிரைவர் செங்குட்டுவன் (28) ஆகியோர் சேர்ந்து வந்த காரில் ரூ.2 லட்சம் சிக்கியது.

              இதுபற்றி அதிகாரிகள் விசாரணை செய்தபோது, கடலூரில் புதிய கார் வாங்குவதற்காக புதுவையில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கி வந்ததாக 2 பேரும் தெரிவித்தனர். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior