உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தமிழ் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 14, 2012

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர்:

          தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

           கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தங்க கவசம் அணிந்தும், மாலை 6 மணிக்கு பெரியநாயகி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

         திருப்பாதிரிப்புலியூர்,  செம்மண்டலம், சாலக்கரை, முதுநகர், நத்தப்பட்டு, அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்களில் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பஞ்சாங்கம் படித்தல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 26 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புது வஸ்திரம், துளசி, பூ, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு லட்சதீப உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சிதம்பரம்:

        நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பஞ்சாங்க படனம் நடந்தது. தில்லை காளியம்மன், கீழரத வீதி வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

பரங்கிப்பேட்டை:

        சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தச்சக்காடு அய்யனர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிள்ளை:

           பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. தில்லை விடங்கன் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொõண்டனர்.

சேத்தியாத்தோப்பு:

          வரசித்தி விநாயகர் கோவில், மேட்டுத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில், காளியம்மன் கோவில், பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில், வடிவுடையம்மன் கோவில், வீரமுடையாநத்தம் மகாதி மாரியம்மன் கோவில், வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம்: 

          வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கனி தரிசன விழா நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: 

        பூவராக சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நடுவீரப்பட்டு:

            சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொக்கநாதர் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.








Read more »

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




"உலக தமிழர்கள் அனைவருக்கும் எமது உளம் 

கனிந்த தமிழ் புத்தாண்டு (சித்திரை 1 - ஏப்ரல் 14 ) 

நல்வாழ்த்துக்கள்"

 

Read more »

சனி, ஜனவரி 08, 2011

தமிழ் நாள்காட்டி வெளியிட அரசுக்கு கோரிக்கை

கடலூர்:

          தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்து இருப்பதால், தமிழ் நாள்காட்டியை வெளியிட வேண்டும் என்று உலகத் தமிழ்க் கழகம் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளது.  உலகத் தமிழ்க் கழக கடலூர் கிளை செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

               தைத் திங்கள் முதல் நாளில் பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. போகி திருநாளன்று, கடலூர் நகரம் முழுவதும் ஊர்திகளில் சுற்றி வந்து, புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மக்களுக்குத் தெரிவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.  தமிழ் புத்தாண்டை பின்பற்றும் வகையில், தமிழ் நாள்காட்டி, நாள் குறிப்புகளை தமிழக அரசு வெளியிட வேண்டும். அனைத்து  மாவட்டத் தலைநகரங்களிலும் திருவள்ளுவர் அரங்கங்களை அமைக்கவேண்டும். தமிழ் இணைய ஒருங்கு குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.    கூட்டத்துக்கு கிளைத் தலைவர் காத்தப்பன் தலைமை தாங்கினார். 

                 உலகத் தமிழ்க் கழக தலைமையகத் துணைத் தலைவர் கதிர் முத்தையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். செயலாளர் பழநிவேல் வரவேற்றார். அ.தென்னவன், குமரப்பன், சீனுவாசன், தமிழன்பன், த.பாலு,  இளஞ்செழியன் முத்திரை முத்துக்குமரன், கவிஞர் வெ.கி.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குமரன் நன்றி கூறினார்.

Read more »

வெள்ளி, டிசம்பர் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் 6 1/2 லட்சம் பேருக்கு இலவச பொங்கல் பொருட்கள்: ஜனவரி 1-ந்தேதி முதல் கிடைக்கும்

கடலூர்:
  
கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

             தைதிங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட அறிவித்துள்ள தமிழக அரசு இந்த தமிழ் புத்தாண்டுக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளது.  
 
                      அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 189 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் விதத்தில் பச்சரிசி 1/2 கிலோ, வெல்லம் 1/2 கிலோ, பாசிப்பயிறு 100 கிராம், மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் 20 கிராம், போன்ற நான்கு பொருட்கள் அடங்கிய தனி பைகளை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி(சனிக்கிழமை) முதல் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரையில் அந்தந்த நியாயவிலை கடைகளில் ஒவ்வொரு பகுதி வார்டு வாரியாக தனித்தனியாக நாள் ஒதுக்கப்பட்டு இந்த இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

               மேலும் எந்த நாளில் எந்தபகுதி அல்லது வார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு நியாயவிலை கடைகளில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. இதில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் சர்க்கரை மட்டும் பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டை என அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் என ஒருவர் கூட விடு படாமல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

                 எனவே குடும்ப அட்டை தாரர்கள் கூட்டம், கூட்டமாக சூழ்ந்து நெரிசலில் சிக்காமல் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தேதியில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று தமிழக அரசின் இலவச பொங்கல் பொருள் பைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior