உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தாட்கோ திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாட்கோ திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 540 ஆதிதிராவிட மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகள்

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் இவ்வாண்டு, ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு ரூ. 53.50 லட்சத்தில், பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார். 

            கடலூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தில் 55 மாணவ மாணவியருக்கு பஅககவ கணினி பயிற்சி, தனியார் நிறுவனம் மூலம் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி 4 மாதங்கள் நடைபெறும். இப்பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகை வழங்கப் படுகிறது. இப்பயிற்சிக்காக அரசு, மாணவர்களுக்குத் தலா ரூ. 2,090 செலவு செய்கிறது.  பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி குத்து விளக்கேற்றி, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். 

ஆட்சியர் பேசுகையில், 

              கணினி பயிற்சி அளிக்க 55 மாணவர்களுக்கு அரசு ரூ. 2,47,500 செலவிடுகிறது. இதுதவிர இவ்வாண்டு ஆதிதிராவிட மாணவ மாணவியர் 540 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் ரூ. 53.50 லட்சம் செலவில் வழங்கப்பட்டு வருகிறது,  எனவே இத்தகைய பயிற்திகளைப் பெறும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் ஒவ்வொருவரும் திறம்பட பயிற்சி பெற்று, தாங்கள் மேலும் பலருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கிறமை பெற்று சுயதொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும். அவ்வாறு தொழில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு தாட்கோ திட்டத்தில் வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் ஆட்சியர்.  நிகழ்ச்சியில் தாட்கோ மாவட்ட மேலாளர் எஸ். ரங்கநாதன் வரவேற்றார்.







Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

கடலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் இலவச தொழிற்பயிற்சி

கடலூர்:

            தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, 540 மாணவ மாணவியருக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார். 

 இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            மேற்கண்ட இலவச தொழிற்பயிற்சிகளை அளிக்க, கடலூர் மாவட்டத்துக்கு ரூ. 33.54 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி இருக்கிறது. கீழ்காணும் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை.  

பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்: 

         ஏ.சி.டி இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் ஆப் ஐ.டி. டெக்னாலஜிஸ், 

         சிதம்பரம். மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் பயிற்சி. 6  மாதம். கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு.

           ஸ்ரீ விருத்தாம்பிகை குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், விருத்தாசலம். எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. 

            கிரியேட்டிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்ட்ன்ஸி, கடலூர். ரீடெய்ல் மேனேஜ்மெண்ட் பயிற்சி. 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

            நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல். காட்டுமன்னார்கோயில். ஏ.சி. மெகானிக். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

           ஸ்ரீ சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வண்டிகேட் ,சிதம்பரம். ஏ.சி. மெகானிக்,  ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

             வள்ளலார் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வளையமாதேவி. ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. 

           மகாலட்சுமி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல், மஞ்சக்குப்பம், கடலூர். ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி. 

             சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் எஜுக்கேஷன், திருப்பாப்புலியூர், கடலூர். டேலி இ.ஆர்.பி. 9. பயிற்சி காலம் 4 மாதம். 12-ம் வகுப்பு தேர்ச்சி. 

           மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர், சாதிச்சான்று, ஆண்டு வருமானச் சான்று (ரூ. 2 லட்சத்துக்குள்), ரேஷன் அட்டை, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன், 

மேற்கண்ட நிறுவனம் அல்லது 

கடலூர் மாவட்ட மேலாளர்,
  
தாட்கோவிடம் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, பூர்த்தி செய்து,  29-7-2011 மாலை 5 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






Read more »

புதன், ஜனவரி 05, 2011

கடலூரில் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க ரூ.45 லட்சம் கடனுதவி

கடலூர் : 

              கடலூரில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 16 பேருக்கு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்க கலெக்டர் கடனுதவி வழங்கினார். 

             கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்டோ, வேன், கார் ஆகியவை வாங்கி தொழில் செய்ய மானித்துடன் கூடிய வங்கிக் கடனாக 45 லட்சத்து 6 ஆயிரத்து 32 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். 

              தேசிய அறக்கட்டளை கடலூர் மாவட்ட குழு மூலம் மன வளர்ச்சி குன்றிய சிதம்பர வட்டத்தைச் சேர்ந்த 28 மாற்றுத் திறனாளிகளுக்கு 67 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிரமைய காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன் பங்கேற்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior