உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தானே புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தானே புயல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 21, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






Read more »

வியாழன், மார்ச் 15, 2012

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் பாதித்தவர்களுக்கு சமூக மறுவாழ்வு பயிற்சி

கடலூர் :

       "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய முதன்மை பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

        "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

      இதற்காக முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மனநல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியது ு:


          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மறுவாழ்விற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்ட மக்கள் ஒன்பது வகையான பேரழிவுகளை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு பேரழிவும் ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தொடர் பேரழிவுகளால் மாவட்ட மக்கள் பொருளாதாரம், சமுதாயம், மனம் மற்றும் உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே உள்ள மன அழுத்தத்தைப் போக்கி மீண்டும் அவர்களை புத்துணர்வு ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உள்ள மன அழுத்தத்தை வெளிக் கொண்டு வர, பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார். நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

      அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 70 ஆசிரியர்களுக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மருத்துவக் கழக பேராசிரியர் சேகர் பயிற்சியளித்தார். இந்த முகாம் இன்றும் தொடர்கிறது. முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு உளவியல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் மன அழுத்தத்தைப் போக்க உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Read more »

புதன், மார்ச் 07, 2012

சிதம்பரம் அருகே தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி (முகத்தை மறைத்துக் கொண்டிருப்பவர்).

சிதம்பரம்:

        தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

           சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றியம், மேலபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசைதம்பி. இவர் தேமுதிக ஒன்றிய துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி தமயந்தி, 8-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்.  இவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ரூ.41 ஆயிரத்து 600 நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை பெறுவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கேட்டுள்ளார். பின்னர் ரூ.9 ஆயிரமாவது தருமாறு கோரியுள்ளார். இதையடுத்து ஆசைதம்பி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.  

        இந்நிலையில் போலீஸார் அறிவுறுத்தலின்படி ஆசைதம்பி, கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை சிதம்பரம் காந்தி சிலை அருகே வந்து செவ்வாய்க்கிழமை பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.  அதன்படி வீராசாமியிடம், ஆசைதம்பி ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்திலிருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீஸார் லஞ்சம் பெற்றதாக வீராசாமியை (55) கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.   

















Read more »

சனி, பிப்ரவரி 25, 2012

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:

         இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.

          "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் இன்று 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 35 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தை "தானே' புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளியிடுகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பங்கேற்கின்றனர்.












Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

பண்ருட்டியில் தானே புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலூர்:
 
            கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் தானே புயலினால் சேதமடைந்த முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் பயன்படுத்தி அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  
 
           புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் சேத நிவாரணத்தோடு, முந்திரி பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும், அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், 5 ஆண்டு காலத்திற்கு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
           மேலும் முந்திரி மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000 ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 
          இந்த மரங்களை வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
 
          இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால், அடிக்கட்டை அகற்றும் பணி எந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.  
 
          இதனடிப்படையில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேலிருப்பு ஊராட்சியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை அகற்றி, விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு முன்மாதிரி பணி நடைபெற்றது. முதல் நாளன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மரத்தில் உள்ள சிறு கிளைகள் அகற்றப்பட்டன.
 
        புதன் கிழமை  மேலிருப்பு கிராமத்தில் ராஜாராமன் என்பவரது முந்திரி தோப்பில் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ள முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் மூலம் வெட்டி எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior