உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திருமானிக்குழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமானிக்குழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 24, 2011

கடலூரில் சூறாவளி காற்றுடன் மழை

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/5101597f-cd0d-48d8-964e-77e0f763ebf8_S_secvpf.gif
 
               கடலூரில் கடந்த 3 நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் திங்கட்கிழமை  மாலை 5 மணி அளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழையும் பெய்தது. சுமார் 15 நிமிடமே இந்த மழை நீடித்தது. முன்னதாக சூறாவளி காற்றால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் மற்றும் பேனர்கள் கீழே விழுந்து சேதமடைந்தன.

                சாலைகள் புழுதி மண்டலமானதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். சூறாவளி காற்றால் நகர் முழுவதும் சுமார் 1/2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நடுவீரப் பட்டு, திருமாணிக்குழி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசியது. இதனால் அந்த பகுதிகளில் ஒரு சில மரங்கள் சாய்ந்தன.

              பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருமாணிக்குழியில் பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை செய்தனர். இரவு 9 மணி அளவில் அந்த பகுதிகளில் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியது.
 
 
 

Read more »

சனி, மே 29, 2010

திறக்காத ரேஷன் கடை 3 பேர் "சஸ்பெண்ட்'

கடலூர் : 

                 ரேஷன் கடைகளில் கண்காணிப்பு சிறப்பு குழு ஆய்வின் போது வேலை நேரத்தில் முடியிருந்த கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                        கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் ரேஷன் கடைகள் அலுவலக நேரத்தில் செயல்படுகின்றதா என கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அப்போது திருமானிக்குழி, பெரியகுப்பம் மற்றும் கொளப்பாக்கம் ரேஷன் கடைகள் வேலை நேரத்தில் மூடியிருந்ததால் கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திங்கள், ஏப்ரல் 12, 2010

திருமானிக்குழியில் உயர்மட்ட பாலம் : சட்டசபையில் அமைச்சர் உறுதி

 நெல்லிக்குப்பம் :

                 திருமானிக்குழி கெடிலம் ஆற்றில் பாலம் கட்டப்படுமா? என எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில்  கேள்வி எழுப்பினார்.
                நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழி கெடிலம் ஆற்று தரைப்பாலம் ஆண்டு தோறும்  மழையால் பாதிக் கப்படுகிறது. இதனால்  50 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பல கி. மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தற்காலிகமாக பாலத்தை சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.  இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீண் செலவாகிறது. அங்கு மேம்பாலம் கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என கடந்த வாரம் 'அமைச் சர் சொன் னது காற்றோடு போச்சு' என தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் சட்டசபையில் பேசுகையில்

                'திருமானிக்குழி தரைப் பாலம் ஆண்டுதோறும் மழை, வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது. இரண்டு ஆண்டில் தற்காலிகமாக சரி செய்ய 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.  2008ஆம் ஆண்டு நெடுஞ்சாலை த்துறை அமைச்சர் பார்வையிட்டு மேம்பாலம் கட்டித் தரப்படும் என கூறினார். 50  கிராம மக்கள் நலன் கருதி மேம்பாலம் கட்ட வேண்டும்' என பேசினார். இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசுகையில் 'நான் அப்பகுதியை நேரில் பார்வையிட்டேன். எம்.எல்.ஏ., கோரிக்கை நியாயமானது. நபார்டு வங்கியில் கடன் பெற்று மாநில அரசின் பங்களிப்பையும் செலுத்தி இதுபோன்ற பாலங்கள் உயர் மட்ட பாலங்களாக கட்டப் படுகிறது. திருமானிக்குழி பாலம் நபார்டு வங்கியில் கடன் பெறும் பட்டியலில் அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

தீயில் கருகி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணை

நடுவீரப்பட்டு : 

               தீயில் கருகி இளம் பெண் இறந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டுள்ளார். கடலூர் அடுத்த திருமானிக்குழியை சேர்ந்தவர் சுரேஷ் என்கிற தென்கோவன். இவரது மனைவி பரிமளா என்கிற விஜயலட்சுமி (20). திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த 14ம் தேதி பரிமளா தனது வீட்டில் சுவற்றின் மீது இருந்த பூ பொட்டலத்தை எடுக்க முயன்ற போது, சுவற்றில் வைத்திருந்த மண்ணெண்ணெய் விளக்கு தவறி பரிமளா மீது விழுந்ததில் உடல் முழுவதும் தீ பரவியது. அதில் படுகாயமடைந்த பரிமளாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பரிந்துரை செய்ததன் பேரில் கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ், வரதட்சணை கொடுமையினால் இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior