உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தேர்ச்சி சதவீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்ச்சி சதவீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 01, 2013

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்





நெய்வேலி:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். 

அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு-

தமிழ்-99

ஆங்கிலம்-99

கணிதம்-99

அறிவியல்-100

சமூக அறிவியல்-100

மொத்தம்-497.

மாணவி ஆர்த்தி வடலூர் புதுநகர் பகுதியில் வசிக்கிறார். அப்பா அசோகன் இந்தியன் வங்கியில் நகை ஆய்வாளர். அம்மா சியாமளா. 

மாணவி ஆர்த்தி கூறியது:-
நான் சிறு வயது முதல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்து வந்தேன். தேர்வில் அதிகமதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தலைமை ஆசிரியை சுகிதா மற்றும் ஆசிரியர்கள் அதிக ஊக்கம் அளித்தனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படித்து பொதுமக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். மாணவி ஆர்த்திக்கு பரதநாட்டியம் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உண்டு.

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை








கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

மாணவிகளுக்கு பரிசு

நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி துர்கா மாநில அளவில் முதல் இடத்தையும், மாணவிகள் ஆர்த்தி, நிலா, பவித்ரா ஆகியோர் 2–வது இடத்தையும், மாணவிகள் ஜெசிமா, சங்கீதா, வசுமித்ரா ஆகியோர் 3–வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை புரிந்த மாணவிகள் அனைவரும் நேற்று காலையில் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் கிர்லோஷ்குமார் விடுமுறையில் சென்று இருப்பதால் அவருக்கு பதிலாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகனசந்திரன் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் முதன்மை கல்வி அதிகாரி ஜோசப்அந்தோணிராஜ், சமூகபாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் அளித்த பேட்டி 

நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு மாணவி முதல் இடத்தையும், 3 மாணவிகள் 2–வது இடத்தையும், 3– மாணவிகள் 3–வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை முதன்மை செயலாளரின் வழிகாட்டுதல் படி, பள்ளி கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் சமச்சீர் கல்வியில் புதிய பாடங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாக மாநில அளவில் 3 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக்காட்டிலும் 6 சதவீதம் குறைவாகும். அடுத்த ஆண்டு இதை ஆண்டு நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுப்போம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் ஏதாவது ஒரு மாணவர் இடம் பிடிப்பார். ஆனால் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 7 மாணவிகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில் ஒருவர் கூட மாணவர் இல்லை. அதேபோல மாவட்ட அளவில் மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் யாரும் மாநில அளவில் இடம் பிடிக்கவில்லை. 1, 2 மார்க்குகளில் கோட்டை விட்டவர்களும் உண்டு. ஆனால் இந்த ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களையும் மாணவிகள் பிடித்து இருப்பது கடலூர் மாவட்டத்துக்கு பெருமையாக இருக்கிறது.  இதற்கு முன்பு கடந்த 2006–ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் மாநில அளவில் 3–வது இடத்தை பிடித்தார். அதன் பின்னர் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் 7 மாணவிகள் மாநில அளவில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

செவ்வாய், ஜூன் 05, 2012

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கடலூர்: 

தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாவட்டத்தில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.10 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

மாவட்ட அளவில் சாதனை: 

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும்,

 அதே பள்ளியை சேர்ந்த மாணவி கலைவாணி 493,

 நெய்வேலி குளூனி மெட்ரிக் பள்ளி மாணவி இளமதி, 

கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ்,

 சரண்யா, சேத்தியாத்தோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரவினா ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி மாணவர் செந்தில்ராஜ், சி.கே. பள்ளி மாணவர் பார்த்தசாரதி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஏழிசை, சஞ்சனா 492 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்தியில் முதலிடம்: 

இந்தியை மொழிப்படமாக எடுத்து படித்த கடலூர், லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி மாணவர் ஓன்கார் சிவாஜி கட்கார் 495 மதிப்பெண் பெற்று ஒட்டுமொத்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், இந்தியில் 99 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாணவிகள் தொடர் சாதனை: 

மாவட்டத்தில் 18 ஆயிரத்து 572 மாணவர்களும், 19 ஆயிரத்து 89 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 813 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.52 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் மாணவிகளை விட மாணவர்கள் 517 பேர் குறைவாக பங்கேற்றனர். முடிவில் மாணவிகளை விட 565 மாணவர்கள் அதிகமாக தோல்வி அடைந்துள்ளனர்.




Read more »

வியாழன், மே 24, 2012

தானே புயல் - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு


கடலூர் : 


கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், அதிகாரிகளின் தீவிர முயற்சியால், பிளஸ் 2 தேர்வில், ஆண்டுதோறும் முன்னேறி வந்த நிலையில், கடந்தாண்டு வீசிய, தானே புயல் பாதிப்பால், பின்தங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது

.24வது இடம்தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் மிகவும் பின்தங்கி இருந்தது. கடந்த 2008 - 09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில் 30வது இடத்தில் இம்மாவட்டம் இருந்தது.கல்வித் துறை அதிகாரிகள் முயற்சியில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதால், கடந்த 2009 -10 ஆண்டில், தேர்ச்சி சதவீதம் 78 ஆக உயர்ந்தோடு, மாநில அளவில் 26வது இடத்திற்கு முன்னேறியது. 2010 - 11ல், இது, 81.64 சதவீதமாக அதிகரித்து, மாநில அளவில், 24வது இடத்தை அடைந்தது.
தேர்ச்சி குறைவு

இதைத் தொடர்ந்து,2011 - 12 கல்வி ஆண்டிலும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக, கற்றலில் சற்று பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள் நடத்தினர்.இந்நிலையில், தற்போதுவெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய, 26,709பேரில், 81.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 0.39 சதவீதம் குறைந்து, மாநில அளவில், 25ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பின்தங்கவில்லை

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:


மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, பள்ளி துவங்கியதும், சிறப்பு கவனம் செலுத்தப் பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வீசிய, தானே புயல் காரணமாக,ஒட்டு மொத்த மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்ததால், மாணவர்களால்வர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.இதுதவிர, இந்தாண்டு மாநில அள விலேயே, மொத்த தேர்ச்சி, 0.8 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. இதனால், 14 மாவட்டங்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, கடலூர் மாவட்டம், தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ந்து முன்னேறித் தான் வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.





Read more »

புதன், மே 23, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் விபரம்

கடலூர்: 
 கடலூர் வருவாய் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். 

தமிழை முதன்மைப் பாடமாக கொண்டு படித்த கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஃபெனிட்டாஷெர்லி 1180 மதிப்பெண்களும், 

அதே பள்ளி மாணவி எஸ்.ஏ.சாஜிதாபானு 1179 மதிப்பெண்களும்,

 நெய்வேலி செயின்ட் குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ,கே.கவிப்பிரியா 1178 மதிப்பெண்களையும் பெற்று கடலூர் வருவாய் மாவட்ட அளவில் மூதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 

இதில் கடலூர் புனித மேரி மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

முதல் மூன்று இடங்களை

 எஸ்.ஃபெனிட்டா ஷெர்லி, 
எஸ்.ஏ.சாஜிதாபானு, 
ஏ.கே.கவிப்பிரியா ஆகியோர் பெற்றுள்ளனர். 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்

 ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.பிரேம்குமார் 1170 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஜெசிகா 1154 மதிப்பெண்களும்,

 காட்டுமன்னார்கோயில் கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரிச்வானாபேகம் 1148 மதிப்பெண்களை

 பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.


அரசுப் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் விவரம்: 

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

புவனகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.முல்லைகொடி 1142 மதிப்பெண்ணும், 

சிதம்பரம் என்.தமிழ்ச்செல்வி 1139 மதிப்பெண்ணும்,

 வடலூர் ஆர்.உதயராணி 1120 மதிப்பெண்ணும்,

 விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 

ஸ்ரீநெடுஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஏழிலரசி 1139 மதிப்பெண்ணும்,

 திட்டகுடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜே.புவனேஸ்வரி 1088 மதிப்பெண்ணும்,

 லால்பேட்டை பள்ளி மாணவன் எம்.இம்தியாஸ்ஹமீது 1069 மதிப்பெண்ணும் பெற்றும் கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.


நிதிஉதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள்: 

கடலூர் கல்வி மாவட்ட அளவில் 

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.மகேஷ் 1176 மதிப்பெண்ணும், 

கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஏ.வைத்தீஸ்வரி 1150 மதிப்பெண்ணும்,

ஆர்.கீத்துஅபிநயா 1149 மதிப்பெண்ணும் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.


விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில்

 காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ்.எம்.விக்னேஸ்வரன் 1140 மதிப்பெண்ணும்,

 எறுமனூர் வி.ஈ.டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.மனோகரன் 1135, 

பி.அபிநயா 1132 மதிப்பெண்களை பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.



Read more »

பிளஸ் 2 தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கடலூர்:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.

கடலூர் கல்வி மாவட்டத்தில் 

சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி, 
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும், 

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 

மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, 
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.



 40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்



 கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, 
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior