உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தே.மு.தி.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தே.மு.தி.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 11, 2012

திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் மீது நிலப்பறிப்பு புகார்

விருத்தாசலம்:

                   திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ மீது நிலப் பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.


         விருத்தாசலத்தை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிலம் பெண்ணாடம் ரயில்வே கேட் அருகில் பெ.பொன்னேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகிறாராம்.



இதுதொடர்பாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் விவசாயி கொடுத்த புகார் மனு விவரம்: 

                        பெ.பொன்னேரி கிராமத்தில் 68 சென்ட் இடத்தின் ஒரு பகுதியை தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். எனது போர்குழாயை மூடி, அதன் மேல் கொட்டகைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இன்றி உள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

               

Read more »

புதன், பிப்ரவரி 22, 2012

விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினர் மோதல்: கட்சி அலுவலகம் சூறை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/9d4cdf20-0b31-4b4b-b64b-d725ce437b62_S_secvpf.gif
விருத்தாசலம்:
       விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி நியமிக்கப்பட்டனர். இது சங்கரின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
          புதிய நிர்வாகிகள் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் தான் நியமிக்கப்பட்டதாக சங்கரின் ஆதரவாளர்கள் எண்ணினர். இதனால் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் முத்துகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் ஜன்னலை உடைத்தனர்.
     இதுகுறித்து முத்துக்குமார் எம்.எல்.ஏ. விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை சங்கரின் ஆதரவாளரான ஜல்லி செந்தில் என்பவர் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த முத்துகுமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான ஆசிரியர் பாஸ்கர், பாலமுருகன், சரவணன், ஜானகி ஆகியோர் ஜல்லி செந்திலை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
          மேலும் சங்கரின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவரின் காரையும் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அருகே செயல்பட்டு வந்த சங்கரின் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து அங்கிருந்த டி.வி., நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களையும் கிழித்து எறிந்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை இதனை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர்.
        போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

Read more »

வியாழன், பிப்ரவரி 09, 2012

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/6b576a00-aa1b-42bb-927f-547ccadfd448_S_secvpf.gif
 
குறிஞ்சிப்பாடி:
 
          குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் அண்மையில்  நடைபெற்றது.
 
        தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.  
 
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியது:-
 
         இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.
 
         இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
 
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது 
 
          தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
             மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், டிசம்பர் 22, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை : விருத்தாசலத்தில் தேமுதிக பேச்சாளர் சேகர் தற்கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/812155ee-6d27-404b-9df5-015e2dde744c_S_secvpf.gif



விருத்தாசலம் :

            தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பஸ் நிலையப் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு வயது 30. தேமுதிக தலைமைக் கழக பேச்சாளரான இவர், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் வந்தார். பின்னர் அவர் தனக்கு ஒரு அறை எடுத்துக்கொடுக்குமாறு நகர செயலாளர் சங்கரிடம் போனில் தெரிவித்தார்.

        அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் சென்று தங்கினார். பின்னர் நேற்று காலை சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு அறைக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று இரவு நகர செயலாளர் சங்கருக்கு, போனில் பேசிய சேகர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் உடனே அறைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி சங்கர் அங்கு சென்று பார்த்தபோது, சேகர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

         உடநே அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சேகர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு விஷப்பாட்டிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எழுதிய உருக்கமான கடிதமும் கிடைத்தது.

             அதில் ஒரு கடிதத்தில், மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதிக்கொண்டது. முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொளகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாலசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தேமுதிகவுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால் தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். 









Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.

           நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230 ஓட்டு பெற்று ஒரே ஒரு ஓட்டு குறைவால் தோல்வியடைந்து வருத்தத்துடன் வெளியேறினார்.















Read more »

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் பட்டியல்

கடலூர்:

         கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னையில் வெளியிட்டார்.

கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 29 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வார்டு வாரியான விவரம்:

1 - ராயல், 
2 - அம்பிகா சரவணன்,
3 - கருணாகரன், 
4 - ஷகிலா, 
5 - முத்துகுமரன், 
6 - கிருஷ்ணமூர்த்தி, 
7 - உமா மகேஸ்வரி, 
8 - இளவரசி, 
9 - லட்சுமி,
10 - அஞ்சுகம், 
11 - வைத்தியநாதன், 
12 - ராஜி என்கிற பெரிய நாகராஜ், 
13 - தென்னவன், 
14 - ஆறுமுகம், 
15 - விஜயா, 
16 - ஆறுமுகம்,
17 - ரவி, 
18 - அன்னசெல்வி, 
19 - முரளி,
20 - லூர்துசாமி, 
21 - மாலதி, 
22 - கணேசன், 
23 - ராஜா, 
24 - முகமது அய்யூப்,
25 - கதிர்வேல், 
26 - விஜயசம்பத் என்கிற திருஞானசம்பந்தம், 
27 - ஷீலா, 
28 - தேவி, 
29 - பாலமுருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior