உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தொரப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொரப்பாடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

புதுப்பேட்டையில் ஆறு மணிநேர மின் தடை: போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு

பண்ருட்டி: 

                    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் மின்தடை காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் பாரத ஸ்டேட் வங்கி, கூட்டுறவு வங்கி, சார் பதிவாளர் அலுவலகம், பள்ளிக் கூடங்கள், பாரி கரும்பு அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், மாடர்ன் ரைஸ் மில்கள், ஆயில் மில், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

                     நகராட்சிக்கு இணையாக இப்பகுதி குடியிருப்பு மக்கள் தொரப்பாடி பேரூராட்சியில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கும் முறையே புதுப் பேட்டைக்கும் வழங்கப்படுகிறது. அதன் படி தினமும் பகலில் குறைந்தது 6 மணிநேரம் மின்நிறுத்தம் செய்வதால் இப் பகுதி வணிகர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வியாபார சங்க நிர்வாகிகள், நகரத்திற்கு இணையாக மின்சாரம் வழங்க வேண்டும், இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை தொரப்பாடியில் விழிப்புணர்வு கூட்டம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
 
               ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தொரப்பாடி சேர்மன் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார்.  துணை சேர்மன் அருணாசலம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி வரவேற்றார். மாவட்ட மக்கள் கல்வி அலுவலர் சதாசிவம், விரிவாக்க கல்வியாளர் கேத்தரின்,  சுகாதார ஆய்வாளர் ஜெயகுமார், வட்டார விரிவாக்க கல்வியாளர் விக்டோரியா, செவிலியர்கள் சாந்தி, சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior