உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தொழிலாளர் வைப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிலாளர் வைப்பு நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 29, 2011

3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாத பி.எப். கணக்குக்கு ஏப்ரல் 1 முதல் வட்டி கிடையாது

               தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.) செயல் படுத்தப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்ற பிறகு பி.எப். கணக்கை முடித்து பணம் பெறாமலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பி.எப். கணக்கை மாற்றாமலும் இருந்து வருகிறார்கள்.

              இருந்தாலும் பி.எப். கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி (9 1/2 சதவீதம்) சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பயன் படுத்தப்படாத மற்றும் வேறு கணக்குக்கு மாற்றப்படாத பி.எப். கணக்குகள் 1.4.2011 முதல் செயல்பாடு இல்லாமல் போய்விடும் என்றும், அந்த கணக்குகளுக்கு 1.4.2011-லிருந்து எவ்வித வட்டியும் வழங்கப்படாது என்றும் சென்னை மண்டல பி.எப். ஆணையாளர் கே.வி.சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

                 எனவே, 3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பி.எப். கணக்குகளை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு சந்தாதாரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

செவ்வாய், ஜனவரி 25, 2011

நாடு முழுவதும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகங்கள் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாகும்

             இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளர் வைப்பு நிதி (பி.எப்.,) நிறுவன அலுவலகங்களும், வரும் மார்ச் 31க்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். தொழிலாளர்களுக்கு தாமதம் இல்லாமல் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் தெரிவித்தார்.

விருதுநகரில் நடந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் உத்தரவு வழங்கும் விழாவில் மதுரை மண்டல கமிஷனர் விஜயக்குமார் பேசியது: 

             ஓய்வு பெற்ற பின், தொழிலாளரின் வைப்பு நிதி விண்ணப்பத்தில் மொபைல்போன் எண் பெறப்படும். இது இல்லையெனில் நிறுவனம், தொழிற்சங்க பிரதிநிதி, தொழிலாளர்களின் உறவினர் போன் எண் பெறப்படும். விண்ணப்பம் பெறப்பட்டு பதிவு செய்தவுடன், பதிவு எண்ணுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பின், கணக்கு முடிக்கப்பட்டு அந்த தொகை தயாரானவுடன், மீண்டும் செக் நம்பர், வங்கி, கணக்கு முடிக்கப்பட்ட தேதியுடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். 

              ஒரு தொழிலாளர், வைப்பு நிதி பெறும் காலம் ஒரு மாதத்திற்கு மேல் என இருந்த நிலை மாறி, உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பி.எப்., அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, "கோர் பேங்கிங்' வசதி செய்யப்படவுள்ளது. பி.எப்., பெறுவதற்கான விண்ணப்பத்தில், வங்கி பாஸ் புக் எண்ணுடன் நகல் எடுத்து இணைத்து அனுப்பினால், உடனடியாக தொழிலாளி கணக்கு வைத்துள்ள வங்கிக்கு, பணம் மாறுதல் செய்யப்படும். 

              மூன்று ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பி.எப்., கணக்குகளை முடித்து வட்டியில்லாமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு விஜயக்குமார் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior