உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தொழுதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழுதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 15, 2012

தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்க

திட்டக்குடி :

     தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

       நாவலர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், கல்லூரி முதல்வர் நீலமேகம் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் திருமாவளவன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, ஆலோசகர் ஜீவா எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே பேசினர். கருத்தரங்கில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்செல்வன் நன்றி கூறினார்.









Read more »

திங்கள், பிப்ரவரி 28, 2011

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல், தொடர்பியல் துறை தேசிய கருத்தரங்கம்

திட்டக்குடி : 
 
           தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மின் அணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. 

               நிர்வாக இயக்குநர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் மணிகண்டன் வரவேற்றார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பொன்செல்வராஜ் வாழ்த்திப்பேசினர். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

புதுச்சேரி பொறியியல் கல்லூரி இயக்குனர் டாக்டர் தனஞ்செழியன் பேசியது: 

            மாணவர்கள் உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியாவில் தற்போது தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைக்கற்றை மூலம் செய்திகளை தங்கு தடையின்றி உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பரிமாறிக்கொள்ள முடியும். இதுபோல மூன்று மற்றும் நான்காம் தலைமுறை அலைக் கற்றையினை நாம் இந்தியாவிலும் பயன்படுத்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

               விழாவில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக் கழகம், செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி, பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனுவாசன் பொறியியல் கல்லூரிகள் சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அனைத்துத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விரிவுரையாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்

Read more »

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

திட்டக்குடி அருகே பாலம் பழுதால் போக்குவரத்து துண்டிப்பு: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாதிப்பு

திட்டக்குடி:

                திட்டக்குடி அருகே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஓடைப்பாலம் பழுடைந்து உடையும் நிலையில் இருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

                திட்டக்குடி அடுத்த புதுக்குளம் கிராமம் வழியாகச் செல்லும் வெள்ளவாரி ஓடை மீது பிரிட்டிஷ் காலத்தில் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டது. திட்டக்குடி முதல் பெருமுளை, சிறுமுளை, புதுக்குளம், நாவலூர், குமாரை, நெடுங்குளம் வழியாக வேப்பூர் மற்றும் விருத்தாசலம் வரை இணைப்பு சாலை செல்கிறது. இவ்வழியாக திட்டக்குடிக்கு பள்ளி மாணவ, மாணவிகளும் விருத்தாசலம், தொழுதூர், பெரம்பலூர் பகுதிகளுக்கு பொறியியல் கல்லூரி  மாணவ, மாணவிகள் மட்டுமின்றி தினசரி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்வோர், கிராம மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் செல்கின்றனர். 

                கடந்த ஆண்டு திட்டக்குடி முதல் நாவலூர் வரை 83 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வெள்ளவாரி ஓடைப்பாலத்தை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து புதுக்குளம் உள் ளிட்ட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக பாலம் முற்றிலும் வலுவிழந்து உடைந்து சரிந்தது. தற்காலிகமாக இரு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள் மட்டும் சென்று வரும் அளவிற்கு சீரமைக்கப்பட்டது. 

               பாலம் முற்றிலுமாக உடைந்து விடும் நிலையில் இருப்பதால் கடந்த 10 நாட்களாக பஸ் போக்குவரத்து உட்பட கனரக வாகனங்கள் செல் வது நிறுத்தப்பட்டது. திட் டக்குடியிலிருந்து நாவலூர் வரை செல்லும் தடம் எண் 4 அரசு டவுன் பஸ் புதுக்குளம் கிராமத்திலேயே நிறுத்தப்படுகிறது. பாலத்தின் மறுமுனையிலுள்ள கிராம மக்கள் மூன்று முதல் நான்கு கி.மீ., தூரம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

                      இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பழுதான பிரிட் டிஷ் காலத்தில் கட்டிய ஓடை பாலத்தை முழுமையாக அகற்றி, போதிய நிதி ஒதுக்கீடு செய்து போர்க் கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித்தர  மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read more »

வெள்ளி, ஜூலை 16, 2010

திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலி இடங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கை

திட்டக்குடி : 

               திட்டக்குடி தாலுகாவிலுள்ள விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேற்று மாலை தேர்வுக் குழு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

                திட்டக்குடி தாலுக்காவிலுள்ள கீழ்ச்செருவாய், தொழுதூர், புடையூர், பெண்ணாடம், சிறுபாக்கம், சேப்பாக்கம் உள்ளிட்ட பத்து அரசு மாணவர் விடுதிகள் உள்ளது. அதில் காலியாக உள்ள இடங்களில் புதிதாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் கணபதி தலைமை தாங்கினார். தனி தாசில்தார் அன்பழகன் முன்னிலை வகித்தார். தாசில்தார் கண்ணன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பரமகுரு, தேவேந்திரன், விடுதி காப்பாளர்கள் புதிய மாணவர்களை தேர்வு செய்தனர். இதில் பத்து விடுதிகளிலும் 230 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

புதன், ஜூன் 02, 2010

ரூ. 24 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டும் 6 மாதமாக தொடங்கவில்லை: விவசாயிகள் புகார்

கடலூர்:

               ரூ.24.20 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் கடலூர் மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                  திட்டக்குடி வட்டம் தொழுதூரில் இருந்து விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வரை பழுதான பழைய தார்ச் சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க ரூ.24.20 கோடியில், நெடுஞ்சாலைத் துறையில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. பெண்ணாடம் சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தும் இச்சாலை, மிகமோசமாகப் பழுதடைந்துள்ளது. விரைவில் பணி தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

திங்கள், மே 03, 2010

போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் ரவுடிகள் பெரும் அட்டகாசம்: மூவர் கைது


திட்டக்குடி : 

             திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

            திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அப்போது அந்த ஓட்டலில் குடிபோதையில் வந்த ஆறு பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வந்த இண்டிகா காரை அரியலூர் - திட் டக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுமாறு போலீஸ்காரர் முருகானந்தம் கூறினார்.

               ஆத்திரமடைந்த ஆறு பேரும் முருகானந்தத்திடம் தகராறு செய்து தாக்கினர். காரிலிருந்து வீச்சரிவாளை எடுத்து கொலை வெறியுடன் வெட்ட முயன்றனர். முருகானந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கும்பலை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோட முயன்றனர். அதில் மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற மூன்று பேரும் காரில் தப்பிச் சென்றனர். டி.எஸ்.பி., இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொழுதூர் புதிய காலனியைச் சேர்ந்த பாக்கியராஜ்(28), பிரபா என்ற பிரபாகரன்(24) லக்கூர் காலனி கார்த்தி என்ற கார்த்திகேயன் (23) என தெரிந்தது. போலீஸ்காரர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜ், பிரபாகரன், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மேலும் தலைமறைவான பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறை விமல் என்ற விமல்ராஜ், பென்னகோணம் வாசு, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர். காருக்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior