உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தோட்டக்கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோட்டக்கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 15, 2011

சிதம்பரம் வட்டத்தில் வாழைக்கு இன்சூரன்ஸ் திட்டம்


சிதம்பரம் : 
 
            வாழைப் பயிருக்கு இன்ஸ்சூரன்ஸ் திட்டம் உள்ளதால் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு, பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
                 வாழைப் பயிர் அதிக வருமானம் தரும் தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றாகும்.விவசாயிகள் செலவு செய்து சிறந்த முறையில் பயிரிடப்படும் வாழைப் பயிரானது வருமானம் தரும் நேரத்தில் திடீரென ஏற்படும் இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம் ஆகியவற்றால் மிக எளிதில் பாதிக்கப்பட்டு பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது.
 
               இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள வாழைப் பயிரை இத்தருணத்தில் காப்பீடு செய்து புயல், வெள்ளத்தால் ஏற்படும் சேதத்துக்கு நஷ்டஈடு பெறலாம்.வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகள், கடன் பெறாத விவசாயிகள் ஆகிய இருசாராரும் வாழைப் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தாங்கள் பெறும் கடன் தொகையில் 7.40 சதவீதத்தை பிரீமயமாக செலுத்த வேண்டும். இதில் 50 சதவீதம் (3.70) அரசு மானியம் போக மீதி 50 சதவீதம் பிரீமியம் செலுத்தினால் போதும்.கடன் தொகைக்கும் கூடுதலான தொகைக்கு பிரீமியம் செலுத்த விரும்பினாலும் செலுத்தலாம்.
 
              சிதம்பரம் வட்டத்தில் உள்ள வாழை விவசாயிகள் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம், பூவாலை, சாத்தப்பாடி, கீழமணக்குடி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களிலும், பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி மற்றும் பு.முட்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளிலும் பிரீமியத் தொகையை செலுத்தலாம் என பா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

தோட்டக்கலை துறையின் வளர்ச்சித் திட்டங்கள்

         தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
           ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணைத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், தேசிய மூலிகை பயிர்கள் இயக்கம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்: 

           இத் திட்டத்தின்கீழ் காய்கறி விதைகளில் கத்திரி, வெண்டை, செடிமுருங்கை, மிளகாய் விதைகளும், பழமரக் கன்றுகளான மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, பெருநெல்லி, புளியன் கன்றுகளும் 50 சதவீத மானிய விலையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

நுண்ணீர் பாசன திட்டம்: 

          இத் திட்டத்தின்கீழ் பழமரங்கள், காய்கறி பயிர்களுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்பாசனம் செய்வதால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரை கொண்டு 2.50 ஏக்கர் வரை நீர்பாசனம் சிக்கனமாக செய்ய முடியும். 

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், துல்லிய பண்ணை திட்டம்: 

           துல்லிய பண்ணை திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஒரு வருவாய் கிராமத்திலோ அல்லது அருகாமையில் உள்ள ஒன்று முதல் மூன்று வரையிலான வருவாய் கிராமங்களிலிருந்தோ 20 ஹெக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகளை ஒன்று சேர்த்து அதை கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்து இத் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். 

            மேலும் இந்த திட்டத்தின்கீழ் ஓராண்டு வரை வயதுள்ள தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கி, வயல்களில் பொருத்தும் பணியும் செய்து தரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான உரங்களும் சங்கம் மூலம் தெரிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

             தேசிய தோட்டக்கலை இயக்கம்: இந்த திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்களான மா, வாழை, திசுவாழை, கொய்யா, சம்பங்கி, கனகாம்பரம், மல்லி, முந்திரி, கோகோ, மிளகாய் போன்ற பயிர்களுக்கான விதையின் இடுபொருள்கள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறு, குறு விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 4 ஹெக்டேர் வரையிலும் மானியமாக அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

               மேலும் மா, முந்திரி பயிர்களை அடர்நடவு முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தரமான வீரிய ஒட்டுரக மா, முந்திரி கன்றுகள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறிய விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரப்பளவில் அரசு விதிமுறைகளின்படி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திடவும் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 

             எனவே தோட்டக்கலைப் பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Read more »

வியாழன், நவம்பர் 25, 2010

தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளம்தரும் புதிய பாசனமுறை

பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் நீர்ப்பாசனமுறை. (உள்படம்) இம்முறையை செயல்படுத்தி வெற்றி கண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ரங்கராமானுஜம்

சிதம்பரம்: 

             தோட்டக்கலை பயிர்கள் அருகில் பிளாஸ்டிக் குழாய்களை சொருகி, அதில் நீர் ஊற்றி செய்யப்படும் புதிய பாசனமுறை, சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 

               மழை இல்லாத காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மண் பானை வாயிலான நீர்ப் பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையில் நடைமுறைப் பிரச்சனைகள் காணப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை பிரிவு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கராமானுஜம், பெரியப்பட்டு கிராமத்தில் இந்த புதிய நீர்ப்பாசன முறையை தனது ரங்கா உயர் தொழில்நுட்ப பண்ணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.

               இந்த புதிய நீர்ப் பாசன முறையில் பானைகளுக்கு பதிலாக நீண்ட பிளாஸ்டிக் குழாய்கள் (குழாய்களின் அடியில் சிறிதாக பல ஓட்டைகள் போடப்பட்டுள்ளன) தோட்டக்கலை பயிர்களுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைக்கப்படும் குழாய்களில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. சிறிய ஓட்டைகள் வாயிலாக தண்ணீர் மெதுவாக தோட்டக்கலை பயிர்களின் வேர்ப் பகுதிக்கு சென்று சேர்வதால் மரங்கள் கடுமையான இயற்கை சீற்றங்களையும் தாண்டி வளர முடிகிறது.

                அதிகளவு மழை பெய்யும் சமயத்தில் ஒருவரே எளிதாக இந்த பிளாஸ்டிக் குழாய்களை தங்களின் கைகளால் வெளியே எடுத்து விடலாம். இந்த பாசன முறையில் அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் தேவையில்லை. பிளாஸ்டிக் குழாய்கள் எளிதாக உடைந்து விடாது. எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை கடுமையான வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் மீண்டும் பொருத்தலாம்.பிற பயன்கள்: பழைய பிளாஸ்டிக் குழாய்கள், உடைந்த குழாய்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்று நீர்ப்பாசன முறையை நடைமுறைப்படுத்தலாம். 

                   பிளாஸ்டிக் வாயிலாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்த்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் சிறந்த பாசன முறை வாயிலாக இயற்கை சீற்றங்களில் இருந்து நீண்டகால தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கவும், மகசூலைப் பெருக்கவும் முடியும். எனவே தமிழக விவசாயிகள் தங்களது தோட்டக்கலை பயிர்களுக்கு இப் புதிய நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார் ராஜ்பிரவீன்.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரக விதை

சிதம்பரம் : 

                புவனகிரி பகுதி விவசாயிகளுக்கு மிளகாய் வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப் பட்டது.
 
               தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2009-2010 ஆண்டிற்கு புவனகிரி வட்டாரத்தில் மிளகாய் புதிய பரப்பு 10 எக்டர், வாழை புதிய பரப்பு 10 எக்டேர், கொய் மலர்கள் புதிய பரப்பு 2 எக்டர், மா புதிய பரப்பு 1 எக்டர், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் 20 எக்டர் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியமாக ஒரு எக்டருக்கு வாழைக்கு 7500, மிளகாய்க்கு 11,250, கொய்மலர்களுக்கு 12,000 ரூபாயில் இடு பொருட் கள் வழங்கப்படுகிறது. புவனகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மிளகாய் புதிய பரப்பின் கீழ் புவனகிரி வட்டார விவசாயிகள் 53 பேருக்கு வீரிய ஒட்டு ரகம் யுஎஸ் 622 விதை வழங்கப்பட்டது. தோட் டக் கலை உதவி இயக்குனர் சந்திரமோகன் வழங் கினார். நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் பாரி, வினோத், விவசாயிகள் அண்ணாமலை, ராஜேந்திரன், தமிழ்மணி, வீரமுத்து, அரிகரன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior