உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நகராட்சி நிர்வாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகராட்சி நிர்வாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 21, 2011

குப்பைமேடாகி வரும் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம்

கடலூர்:

         கடலூர் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததன் காரணமாக தொன்மை வாய்ந்த கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் தொடர்ந்து அசுத்தமாகி வருகிறது. 

           கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மஞ்சக்குப்பம் மைதானம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், புல்வெளிகள் நிறைந்த கோல்ஃப் மைதானமாக இருந்ததாகவும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதில் கோல்ஃப் விளையாடியதாகவும் சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று அதில் புல்வெளிகளும் இல்லை. கோல்ஃப் விளையாட்டும் இல்லை என்றாலும், நகரின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், நகரம் முழுமைக்கும் கடல் காற்றோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக, இந்த மைதானம் அமைந்து உள்ளது. 

            மாலை நேரங்களில் பலர் காற்று வாங்க இந்த மைதானத்தில் வந்து அமர்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மைதானத்தின் ஓரங்களில் அழகிய தென்னை மரங்களும் அவற்றின் அருகே சிமென்ட் இருக்கைகளும் இருந்தன. ஆனால் அவைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நகராட்சி நிர்வாகத்துக்கும், அதில் அங்கம் வகிக்கும் தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் உருவாகாமல் போனது கடலூர் மக்களின் துரதிருஷ்டம் என்றுதான் கூறமுடியும். இந்த அழகான மைதானத்தை அழகுபடுத்தாவிட்டாலும், அழுக்குப்படுத்தாமல் சுத்தமாகவாவது வைத்திருக்க, நகராட்சி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் கடலூர் மக்களின் ஆசை.

             இந்த மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக மைதானத்தின் ஒரு பகுதியில் சுமார் 80 கழிவறைகளை நகராட்சி நிதியில் இருந்து கட்டி, அசுத்தத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு போய்விட்டது கடலூர் நகராட்சி. இன்று அக் கழிவறைகள் எல்லாம் பொதுக் கழிவறைகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அவற்றை யாரும் பயன்படுத்தாமல், வெறும் நினைவுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கின்றன. அப் பகுதி முழுவதும் நகரின் குப்பகளைச் சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தம் இடமாக மாற்றப்பட்டு துர்நாற்றத்தின் உறைவிடமாக மாறியிருக்கிறது. 

             மன்னன் வழியில் குடிமக்கள் என்பதுபோல், நகராட்சியே மைதானத்தை அசுத்தம் செய்யும்போது, நாமும் நமது பங்குக்கு அசுத்தப்படுத்துவோமே என்ற உயர்ந்த எண்ணத்தில், நகர மக்கள் பலரும், மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளைக் கொட்டி வருகிறார்கள். இதையும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. அதுமட்டுன்றி குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் இந்த மைதானத்தில், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நிறுத்துவோர், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். 

             அதைப் பற்றியோ ஏனைய அசுத்தங்களைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாத நகராட்சி நிர்வாகம், லாரிகளை நிறுத்தும் இடத்தில் ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கு வசதியாக, அவர்களின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில் அழகான சிமென்ட சிலாப்கள் பதித்து, நடைபாதையை ஏற்படுத்தி இருப்பதுதான் எதற்காக என்று தெரியவில்லை. தொன்மை வாய்ந்த மஞ்சக்குப்பம் மைதானத்தை, அழகுடனும் தூய்மை கெடாமலும், முறையாகப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?



Read more »

வியாழன், மார்ச் 11, 2010

சீரழிகிறது கடலூர் நகராட்சி மைதானம்

கடலூர் : 

              கடலூர் நகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள நகராட்சி மைதானம் மண் மற்றும் காரைகள் கொட்டி சீரழிக்கப் பட்டு வருகிறது.
 
                  கடலூர் நகர மக்களுக்கு பொழுது போக்கு இடமாக சில்வர் பீச் மற் றும் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானம் விளங்கி வருகிறது. பீச்சிற்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் வயதானவர்கள் தினசரி மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள நகராட்சி மைதானத்திற்கு வருகின்றனர். திறந்த வெளியாக உள்ள இந்த திடலில் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாலை நேரங்களில் கூடி பேசி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் நகராட்சி மைதானம் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் கூட்டம் அதிகரிக்க துங்கியுள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாக உள்ள இந்த மைதானத்தை சமீப காலமாக மண் மற்றும் சிமென்ட் காரைகளை கொட்டி பாழாக்கி வருகின்றனர். இவ்வழியே தினசரி நகராட்சி அதிகாரிகள் பலர் கடந்து சென்று வந்த போதிலும், இதனை கண்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நேற்று மஞ்சக்குப்பத்தில் பாதாள சாக்கடைக்காக  தோண்டிய மண் மற்றும் கற்களை டிராக்டரில் ஏற்றி வந்து மைதானத்தில் கொட்டினர். இனியும் நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ளவில்லை எனில் மிக விரைவில் இந்த மைதானம் குப்பை கொட் டும் திடலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 16, 2010

சுகாதார சீர்கெடு, ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதிகடலூர் பஸ் ஸ்டேண்டில் தொடரும் அவலநிலை

கடலூர் :

           கடலூர் பஸ் ஸ்டேண்டில் சுகாதார சீர்கெடு மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் தவித்து வருகின்றனர்.கடலூர் பஸ் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் விரிவுப்படுத்தி அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

               நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் தற்போது பஸ் நிலையத்தின் பெரும் பகுதி அப்பகுதி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக டவுன் பஸ்கள் நிற் கும் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நடைபாதையை முற்றிலுமாக ஆக் கிரமித்துக் கொண்டுள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் நிறுத்த கட்டைகளில் நிற்பதால் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.பஸ் நிலையத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் அடைத்துக் கொண்டுள்ளன.இதனால் அங்குள்ள ஓட்டல் மற்றும் டீ கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
                   பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பஸ் நிலையத்தை சுற்றி வந்து பயணிகளை அச்சறுத்தி வருகிறது. பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் இலவச கழிவறை பராமரிப்பின்றி தூர்நாற்றம் வீசுவதால், அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடிவில்லை. இதனால் இந்த கழிவறை அமைந்துள்ள பகுதியே தற்போது திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் தலைநகரான கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுகாதார சீர்கேடுகளை நீக்கிட நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

மஞ்சள் நிற குடிநீர் : நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதில்லை என புகார்

கடலூர் :

               கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் நிறமாக வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை நேற்று ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதுக்கும் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நீரேற்று உந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.இத்தொட்டியை பராமரிக்க கான் டராக்ட் விடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்கின்றனர். அதுவும் ஒவ்வொரு முறையும் குடிநீர் மஞ்சள் கலரில் வருகிறது என புகார் அளித்த பிறகுதான் சுத்தம் செய் கின் றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
              கடந்த ஒரு மாதமாக மஞ்சக்குப் பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் கலரில் வந்துள்ளது. நகராட்சியில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று குடிநீர் தொட் டியை சுத்தம் செய்தனர். அப்போது தொட்டியில் பாசி படிந்து இரும்பு துகள்களுடன் மஞ்சள் கலரில் தண் ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
 
                இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் சுணக்கம் காட்டினால் காலரா உள்ளிட்ட கொடிய நோய் தாக்க கூடும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிந்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது வேதனையான விஷயம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior