உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 29, 2010

நுகர்வோர் சேவை மையத்தின் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் :

                வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது பற்றி நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் இணைய தளத்தின் சேவை வாயிலாக நுகர்வோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள், நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களுக்கு ஆலோனைகள் வழங்கப்படுகிறது. நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று மாநில நுகர்வோர் சேவை மையம் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைப் பெறும் முன்னர் நுகர்வோர்களுக்கு எழும் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை தொலைபேசி வாயிலாக அளித்து வருகிறது.

                         நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நுகர்வோர் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெறும் முறை மற்றும் அதற்காக விண்ணப்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் கூறப்பட்டது. அப்போது வங்கியில் கல்விக்கடன் பெறும்போது நுகர்வோர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான உரிய விளக்கங்களை நுகர்வோர்கள், மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 044-28592828 மூலம் தொடர்பு கொள்ளும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அலுவலர்களும், நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசகர்  விளக்கம் வழங்குவர். நுகர்வோர்கள் இம் மையத்தின் சேவையினை பயன்படுத்தி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

வக்கீல் சங்கத்தில் ஸ்டாம்ப் விற்பனை நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

             கோர்ட் ஸ்டாம்புகளை வக்கீல் சங்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை செயலாளர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

            தமிழ்நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளுக்காக 1,2,5,10 ரூபாய்க் கான கோர்ட் ஸ்டாம்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். கோர்ட் ஸ்டாம்புகளை விற்பனை செய்யும் உரிமம் பெற்றவர்களில் ஒரு சிலர் செயற்கையான தட்டுப் பாட்டை உருவாக்கி அரசு நிர்ணயம் செய்த விலையை விட 50 பைசா முதல் 3 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அரசு உரிமம் பெற்றவர்களிடம் ஒரு சில வியாபாரிகள், சட்ட விதிகளை மீறி கோர்ட் ஸ்டாம்புகள் மற்றும் முத்திரை தாள்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் அப்பாவி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே முத்திரை தாள்கள் மற்றும் கோர்ட் ஸ்டாம்புகளை கூடுதல் விலைக்கு விற் பனை செய்வதை தடுக்க வக்கீல்கள் சங்கத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


நெய்வேலி : 

                  மந்தாரக்குப்பம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
 
                     நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை, மக்கள் மையம் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை பவர் சிட்டி அரிமா சங்க தலைவர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் ஆனந்தன், தியாகராஜன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி டி.எஸ். பி., மணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். நுகர் வோர் சம்மேளன பொது செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பு தலைவர் செந்தமிழ்செல் வன், நெய்வேலி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் தங்கம், வர்த்தக சங்க பொது செயலாளர் பன் னீர்செல்வம், கெங்கைகொண்டான் நூலகர் வேல்முருகன் வாழ்த்தி பேசினர்.

Read more »

திங்கள், பிப்ரவரி 22, 2010

புவனகிரிக்கு கூடுதல் போலீஸ் நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :

           புவனகிரி பகுதியில் தொடரும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
 
இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரியில் 1993ம்  ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நியமிக்கப்பட்ட போலீசாரே பணி புரிந்து வருகின்றனர். தற்போதைய கணக்குப்படி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 20 பேர் மட்டுமே உள்ளனர். போலீசார் குறைவாக உள்ளதால் புவனகிரி பகுதியில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்திட புவனகிரி போலீஸ் ஸடேஷனுக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior