உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

விருத்தாசலத்தில் எழுத்தாளர் செ. கலைச்செல்வி எழுதிய நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலம்:

            எழுத்தாளர் செ. கலைச்செல்வி எழுதிய 'வைரம்' மற்றும் "முள்சேலைகள்' புதின நூல் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.  

              இதில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் புதினங்களை வெளியிட மருத்துவர் தெய்வசிகாமணி, நகைக்கடை உரிமையாளர் அகர்சந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  நிகழ்ச்சியில் வழக்குரைஞர் செல்வராசு வரவேற்றார். சென்னை அப்பலோ மருத்துவமனை இதய நிபணர் மருத்துவர் அர்த்தநாரி தலைமை ஏற்று நாவல்களின் சிறப்பு குறித்து பேசினார். கவிஞர் பட்டி.செங்குட்டுவன், வழக்குரைஞர்கள் மெய்கண்டநாதன், அம்பேத்கர், சந்திரசேகரன், மணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர்கள் கண்மணிகுணசேகரன், தெய்வசிகாமணி, சி. சுந்தரபாண்டியன், ஆறு. இளங்கோவன், புதூர்சாமி, அரங்கநாதன், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

"ஓய்வூதியர் களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

               "ஓய்வூதியர் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவும், நூலாசிரியருக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.

                நிகழ்ச்சிக்கு, மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்க கடலூர் வட்டத் தலைவர் வை.இராசவேலு தலைமை வகித்தார். வட்டச் செயலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பொறியாளர் சா.வேல்முருகன் எழுதிய, ஓய்வூதியர் களஞ்சியம் நூலை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.வானசுந்தரம் வெளியிட, முதல் பிரதியை சக்தி ஐ.டி.ஐ. தாளாளர் ஆர்.சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். நூலைத் திறனாய்வு செய்து மாநிலப் பொதுச் செயலர் பெ.கருப்பையா பேசினார். பொறியாளர் வேல்முருகன் ஏற்புரை நிகழ்த்தினார்.

                பொறியாளர் செந்தமிழ்சேய் எழுதிய, தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற செம்பியன் தமிழவேள் வரலாற்று காவியத்தைத் திறனாய்வு செய்தும், நூலாசிரியரைப் பாராட்டியும் சங்கத்தின் உயர்நிலைக் குழுத் தலைவர் கோவிந்தசாமி பேசினார். நூலாசிரியர் பொறியாளர் சி.செந்தமிழ்சேய் ஏற்புரை நிகழ்த்தினார். வட்டப் பொருளர் சு.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.





Read more »

அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

              அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடந்தது. 

                    கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்த நூலை எழுதி இருக்கிறார்.  கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் இந்த நூலின் வெளியீட்டு விழா கடலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி வரவேற்றார்.  நூலை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் வெளியிட முதல் பிரதியை சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் பெற்றுக் கொண்டார்.  நூலைத் திறனாய்வு செய்து, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் வந்தியத்தேவன், மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் பொறியாளர் ஆர்.ஸ்ரீதர், புதுவை எழுத்தாளர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் பேசினர்.






Read more »

செவ்வாய், மே 31, 2011

இனி எல்லாமே இன்பம் - நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம் : 

         சிதம்பரத்தில் இனி எல்லாமே இன்பம் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகர் திருநாவுக்கரசு என்பவர் எழுதிய நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன் வெளியிட்டார். வீனஸ் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பொருளாரத்துறை சிவப்பிரகாசம், வெங்கடாஜலபதி, விஸ்வநாதன், நடராஜ், ரங்கநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கினார்.



Read more »

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

நூல் வெளியீட்டு விழா

கடலூர்:

           கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் இளங்கோ, தமிழ் ஒளி இயக்க நிறுவனர் கதிர் முத்தையன் ஆகியோர் நிகழ்த்தினர். வளவ. துரையன் ஏற்புரை நிகழ்த்தினார்.

Read more »

திங்கள், அக்டோபர் 25, 2010

பண்ருட்டியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

பண்ருட்டி:
                 
                    "மரபில் மலர்ந்த மகரந்தப் பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா பண்ருட்டியில் சனிக்கிழமை நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை நூலை வெளியிட, விழாவுக்கு தலைமை தாங்கிய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபா.இராஜேந்திரன் முதற்படியை பெற்றுக்கொண்டார்.

                    முன்னதாக கல்லைக்கவி தேவ.இராமதாசன் தலைமையில் "நான் பேசினால்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிக்காளமேகம் சக்தி, கவிஞர் வான்மதி கல்லைக்கண்ணன், ஆசுகவி ஆராவமுதன், தேனிசைக் கவிஞர் பரிக்கல் ந.சந்திரன், காரை பழ.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் வரவேற்றார். எழுத்தாளர் இமயம், நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் கல்லைக் கவிஞர் வீ.கோவிந்தராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior