உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நெல்லிக்குப்பம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லிக்குப்பம் நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி

நெல்லிக்குப்பம்:


நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க ஆள் இல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய பிட்டர் இளங்கோ இரண்டு மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.நகரம் முழுவதும் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். நடப்பு ஆண்டு அந்த டெண்டரும் விட வில்லை. கடந்த ஒரு வாரமாக 10வது வார்டு கந்தசாமி தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குளம்போல தேங்கி நிற்கிறது.கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளதால் நோய் பரவும் சூழல் உள்ளது. நோய்  பரவும் முன் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சியில் குடிநீர் குழாய்கள் உடைந்தால்  ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. மக்களின் அடிப்படை தே வையான குடிநீர்   குழாய்களை பராமரிக்க ஆட்கள் நியமிப்பதில் கவனம் செலுத்த வே ண்டும்.



.

Read more »

திங்கள், மே 28, 2012

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 290 பேர்தேர்வு

நெல்லிக்குப்பம்,:

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு நாள் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடந்தது. இதில் சி.எஸ்.சி. கம்ப்யூட்டர், எஸ்.ஆர்.எம். இன்போடெக், டிரிமென்ட்ஸ் டெக்னாலஜிஸ், மார்டன் எஜூகேஷன் சோசியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த 5784 பேர் கலந்துக் கொண்டனர். கம்ப்யூட்டர், அழகுகலை, போட்டோகிராபி உட்பட பல பிரிவுகளில் பயிற்சி பெற 290 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். கமிஷனர் ”ரேந்திர ஷா முயற்சியில் 150 பேர் மட்டுமே தேர்வு செய்ய வேண் டிய முகாமில் 290 பேர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Read more »

திங்கள், அக்டோபர் 24, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சுயேச்சை வெற்றி

நெல்லிக்குப்பம்:

        நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.

           நெல்லிக்குப்பம் நகராட்சியில் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும், சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர் போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230 ஓட்டு பெற்று ஒரே ஒரு ஓட்டு குறைவால் தோல்வியடைந்து வருத்தத்துடன் வெளியேறினார்.















Read more »

வெள்ளி, அக்டோபர் 21, 2011

நெல்லிக்குப்பம் நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் சுதாகர் வெற்றி

நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகரமன்ற தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

District Name:  CUDDALORE     Municipality Name:  நெல்லிக்குப்பம்

Sl.No Name Party Name Votes Secured Status
1 ஆரோக்கியராஜ் ச VCK 2939 Deposit Lost
2 கவிதா இ DMDK 2580 Deposit Lost
3 காமராஜ் ஜெ BSP 227 Deposit Lost
4 சுதாகர் சு AIADMK 9730 Elected
5 பழனிவேலு சி Independent 3314 Deposit Lost
6 பாலன் ம MDMK 438 Deposit Lost
7 புகழேந்தி சு DMK 5431 NotElected
8 மீண்டசெல்வம் வீ INC 1055 Deposit Lost










Read more »

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. போட்டி


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/a492d73a-1284-41c1-a33c-241f5f91dfeb_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

            நெல்லிக்குப்பம் நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட பொருளாளர் வேலு தலைமையில் நடந்தது. நகர செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் :-

     பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்திய பொதுச் செயலாளர் வைகோவுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

      வருகிற 15-ந்தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது.  

          வருகிற உள்ளாட்சி தேர்தலில் நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை நிறுத்துவது. 

           அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடி யேற்றுவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

              கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசங்கர், நிர்வாகிகள் மாரிமுத்து, கே.என். முருகன், பிரகாஷ், ராமு, பாலன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத்தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.



Read more »

வியாழன், நவம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு, தமிழக அரசு ரூ. 16.15 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
  
கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலைத் திட்டத்தில் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் சிமென்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க ரூ. 16.15 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

                கடலூரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தி உள்ள பகுதிகளில், முதல் கட்டமாக 40 சாலைகள் அமைக்க ரூ. 10.18 கோடியும், 2-ம் கட்டமாக 75 சாலைகள் அமைக்க ரூ. 10.32 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி ஆணைகளை நகராட்சித் தலைவர் து.தங்கராசு வழங்கினார். பணிகளை உடனே தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

               மழை காலமாக இருப்பதால் தார்ச் சாலைப் பணிகள் 15-12-2010-க்கு பிறகு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் ரூ. 1.33 கோடியில் தார்ச் சாலைகளும், ரூ. 1.39 கோடியில் சிமென்ட் சாலைகளும் அமைக்க பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. பணிகளை உடனே தொடங்க உத்தரவிடப்பட்டது தார்ச் சாலைப் பணிகள் டிசம்பர் 15-க்கு மேல் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

                  விருத்தாசாலம் நகராட்சியில் சிமென்ட் சாலைகள் ரூ. 80.10 லட்சத்திலும், தார்ச் சாலைகள் ரூ. 150.23 லட்சத்திலும் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ. 1.02 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.சிதம்பரம் நகாரட்சியில் சி.ஆர்.ஐ.பி.சி. திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 65  லட்சத்தில் மேலரத வீதி, சாலைப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. 

                   மேலும் இதே திட்டத்தில் சாலைப் பணி மற்றும் ரவுண்டானா மேம்பட்டுப் பணிகள் ரூ. 2.5 கோடியில் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் 31-3-2011-க்குள் நிறைவடையும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior