உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 14, 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

 

Tamil Nadu - Panruti
Result Declared
Candidate PartyVotes
P.SIVAKOLUNTHUDesiya Murpokku Dravida Kazhagam82187
SABA.RAJENDRANDravida Munnetra Kazhagam71471
R.SANKARIndiya Jananayaka Katchi1570
M.DEIVEEGADASPuratchi Bharatham1155
R.M.SELVAKUMARBharatiya Janata Party1064
N.S.VELMURUGANIndependent943
K.K.IYAPPANBahujan Samaj Party859
K.KUPPUSAMYIndependent761
D.GANGADHARANIndependent711
T.KUMARIndependent458
G.K.VENKATESANIndependent264

 

Read more »

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி: தி.மு.க.வேட்பாளர் சபா. ராஜேந்திரன் தோல்வி

http://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5C4889fcf5-ff69-4c68-8ce6-ef6cb3d8f27b-s_Nellikkuppam---Saba.jpg

http://img.dinamalar.com/data/thumb/thumb_212301.jpg


கடலூர்:


           பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 10,716 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் சபா. ராஜேந்திரன்    தோல்வியை தழுவினார்.


Read more »

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு



தொலைநோக்கு பார்வையில்

 

 திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி;

 

 தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம்:
             பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட விஸ்வாதபுரத்தில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார். பின்னர் வான்பாக்கம், கீழ்பட்டாம்பாக்கம், காமராஜர் நகர், அண்ணா நகர் உள்பட 15 வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.


அப்போது பண்ருட்டி தொகுதி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன்  பேசியது:- 



               தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சொன்னதையும், சொல்லாததையும் சேர்த்து திட்டப்பணிகளை செய்தவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தொலை நோக்கு பார்வையில் திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர் கலைஞர். நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிக்கு மட்டும் இதுவரை ரூ.10 கோடி நிதி உதவி திட்டங்களை செய்தவர் முதல்-அமைச்சர். தமிழ்நாட்டில் மீண்டும் திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற 6-வது முறையாக கலைஞர் முதல்-அமைச்சராகி பணிகள் செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு தி.மு.க. வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பேசினார்.



             வேட்பாளருடன் நகரமன்ற தலைவர்கள் கெய்க்வாட்பாபு, பச்சையப்பன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், காந்திராஜ், நகர தலைவர் திலகர், பா.ம.க. நகர செயலாளர் வேலாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பழனிசாமி, தி.மு.க. நிர்வாகிகள் ஜெயசீலன், முகமது அனீப், சம்பத், தனகோடி, நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், மார்ச் 31, 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்

பண்ருட்டி: 

ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ் (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 

சுயேச்சைகள் 

குப்புசாமி - தபால் பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட் மட்டை, 
வேல்முருகன் -அலமாரி.

Read more »

வியாழன், மார்ச் 24, 2011

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எதிராக காயத்திரி தேவி போட்டி

           எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பாமகவில் இணைந்தார். பாமக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

         பின்னர் பாமக தலைமைக்கும், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகியதுடன், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சியின் அவை தலைவரானார். 2006 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் தோல்வி அடைந்தார்.
  
             இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்திரி தேவி போட்டியிடுகிறார். காயத்திரி தேவி மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

சனி, மார்ச் 19, 2011

பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளர் சபா.ராஜேந்திரன் பிரசாரம் தொடக்கம்

பண்ருட்டி:

          பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன், திமுக, கூட்டணிக் கட்சி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

               பண்ருட்டி தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சபா.ராஜேந்திரன் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடலூர் மாவட்டச் செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரு பிரிவினராக செயல்பட்டு வந்தனர்.தொகுதி மறுசீரமைப்புக் காரணமாக நெல்லிக்குப்பம் தொகுதி பண்ருட்டி தொகுதியுடன் சேர்த்தும், பண்ருட்டி தொகுதியில் இருந்த 30 பஞ்சாயத்துக்களை புதிதாக உருவான நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டது.

                தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரனும், மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், அண்ணாகிராம ஒன்றியச் செயலர் வி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் விருப்ப மனு செய்தனர். இதில் கடும் போட்டிகளுக்கு இடையே சபா.ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்ததாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறினர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பண்ருட்டி வந்த திமுக வேட்பாளர் சபா.இராஜேந்திரன் அண்ணா, காமராஜர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior