உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பண்ருட்டி நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ருட்டி நகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 13, 2012

பண்ருட்டியில் கொசு ஒழிப்புக்கு 4 புதிய இயந்திரங்கள்

பண்ருட்டி:

பண்ருட்டி நகர பகுதியில் கொசுக்களை அழிக்க நான்கு புதிய கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கொசு புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர நிர்வாகம் சார்பில் 4 கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, அனைத்து வார்டு பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொசு புகை மருந்து அடிக்கும் பணியை திங்கள்கிழமை துவக்கி வைத்தார். அதிமுக நகர செயலர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, சுகாதார அலுவலர் பி.குமார், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், திண்ணாயிரமூர்த்தி, வட்டப் பிரதிநிதி கருப்பையா, சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




Read more »

சனி, மே 12, 2012

பண்ருட்டி நகராட்சியில் ரூ.1.38 கோடி செலவில் சாலைப் பணி தொடக்கம்

பண்ருட்டி:


பண்ருட்டி நகராட்சியால் ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இணைப்புச் சாலைப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறவழிச் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பகோணம் சாலை அரசு மருத்துவமனையில் இருந்து சத்தியமூர்த்தி வீதி வழியாக டைவர்ஷன் சாலையை இணைக்கும் தார் சாலை 1295 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.1.10 கோடி செலவிலும், இந்திரா காந்தி சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகளுடன் 150 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.28 லட்சத்தில் தார் சாலையும் அமைக்கப்பட உள்ளது.


இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பூஜையில், நகராட்சி அணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, கவுன்சிலர்கள் ராஜதுரை, வழக்குரைஞர் வடிவேலன், முருகன், வச்சலாசெல்வமணி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், ஒப்பந்ததாரர்கள் கடலூர் ராமகிருஷ்ணன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















Read more »

சனி, அக்டோபர் 22, 2011

பண்ருட்டி நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் வெற்றி

பண்ருட்டி நகராட்சியில் அ.தி.மு.க.வேட்பாளர் பி.பன்னீர்செல்வம் வெற்றி




District Name:  CUDDALORE     Municipality Name:  PANRUTI
Sl.No Name Party Name Votes Secured Status
1 அறிவொளி எஸ் DMDK 4680 Deposit Lost
2 ஆனந்தி எஸ் DMK 6469 NotElected
3 சண்முகம் எஸ் PT 136 Deposit Lost
4 சிவசங்கர் பி MDMK 168 Deposit Lost
5 நிர்மலா எஸ் Independent 56 Deposit Lost
6 பஞ்சவர்ணம் ஆர் INC 6160 NotElected
7 பன்னீர்செல்வம் பி AIADMK 14790 Elected
8 லட்சுமணன் அ VCK 232 Deposit Lost
9 வரதராஜன் ஆர் Others 141 Deposit Lost















Read more »

செவ்வாய், அக்டோபர் 18, 2011

சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன

சிதம்பரம் : 

                     சிதம்பரம் மற்றும் பண்ருட்டியில் தபால் ஓட்டு போட 675 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (17ம் தேதி) நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (19ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தபால் ஓட்டுகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

                 அதன்படி சிதம்பரம் நகர மன்ற தேர்தலில் ஓட்டு போட 370 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிடம் விடுபட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் என 20 பேர் நீக்கப்பட்டு 350 பேருக்கு ஓட்டுச் சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. 

பண்ருட்டி:

                ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 325 பேருக்கு வீட்டின் முகவரிக்கு ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணி நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. துணை பி.டி.ஓ., தனுசு தலைமையில் ஊழியர்கள் ஊராட்சி வாரியாக தபால் ஓட்டுச்சீட்டுகளை பிரித்து அனுப்பினர். ஓட்டு சீட்டு பெற்றவர்கள் ஓட்டுப்பதிவு செய்து ஓட்டு எண்ணும் நாளான 21ம் தேதி காலை 7 மணிக்குள் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் மற்றும் பண்ருட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும்.















Read more »

புதன், அக்டோபர் 12, 2011

பண்ருட்டியில் வாக்காளர்களுக்கு சேலை கொடுக்க சென்ற தே.மு.தி.க. பெண் வேட்பாளர்

பண்ருட்டி
           பண்ருட்டியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக புதுவை மாநில பதிவு எண்ணுடன் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் சேலையால் கட்டப்பட்டிருந்த 10 மூட்டைகளை பிரித்து பார்த்த போது 182 சேலைகளும், 335 சட்டைகளும் இருந்தன.  

              ஆட்டோவில் பயணம் செய்து வந்த பெண்ணிடம் விசாரித்தனர். இதில் அவர் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி சவுமியா என்பதும், பண்ருட்டி நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க அந்த சேலைகள், சட்டைகளை அவர் ஆட்டோவில் கொண்டு வந்தது தெரிய வந்தது.  அந்த துணிகளின் மதிப்பு சுமார் ரூ.19 ஆயிரம் ஆகும்.   அதைத்தொடர்ந்து சவுமியாவும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், அக்டோபர் 03, 2011

பண்ருட்டி நகரம், ஒன்றியத்தில் மனுக்கள் பரிசீலனை : 3,541 வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்

பண்ருட்டி:

            வேட்பாளர் மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி பகுதியில் 3,541 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி நகராட்சி: 

             பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சனிக்கிழமை இருவர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 12 பேர் களத்தில் உள்ளனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு 239 பேர் மனு செய்ததில் வேட்பு மனு பரிசீலனையின் போது 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சனிக்கிழமை 23 பேர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து 211 களத்தில் உள்ளனர்.

தொரப்பாடி பேரூராட்சி: 

            தொரப்பாடி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு 8 பேர் மனு செய்தனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 57 பேரில் 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 49 பேர் களத்தில் உள்ளனர்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்: 

           பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேர் மனு தாக்கல் செய்ததில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 201 பேரில் பரிசீலனையின் போது 5 தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 244 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 4 தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,138 பேர் மனு தாக்கல் செய்ததில், 15 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,123 பேர் உள்ளனர்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: 

             அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேர் மனு தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனு செய்த 161 பேரில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு 318 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 1177 பேரில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு களத்தில் 1,169 பேர் உள்ளனர்

              .வெள்ளிக்கிழமை வேட்பு மனு பரிசீலனை முடிந்த நிலையில் பண்ருட்டி நகராட்சி, பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், தொரப்பாடி பேரூராட்சி ஆகியவற்றில் 3,541 பேர் களத்தில் உள்ளனர். இதில் மேலும் பலர் அக்டோபர் 3-ம் தேதி வாபஸ் பெறுவர் என எதிர்பாக்கப்படுகிறது.












Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior