உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பள்ளிக் கல்வித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிக் கல்வித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 28, 2012

தமிழக அரசின் மாணவர்களுக்கான சலுகைகள் தகவல் பலகையில் எழுதும் பணி


பண்ருட்டி:


    பள்ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரப் பலகைகளில் எழுதும் பணி நடந்தது.தமிழக அரசு மாணவி, மாணவிகள் படிப்பறிவு அதிகப்படுத்த அரசு பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசின் சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

            இதில் விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, மதிய உணவு திட்டம், காலணி, இலவச பஸ் பாஸ், பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி, 1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு வண்ண பென்சில்கள், 6ம் வகுப்புகளுக்கு கணித உபகரணப் பெட்டி, விலையில்லா புவியியல் வரைபட நூல்கள். 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 இடைநின்றல் குறைப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்தவர் குடும்ப குழந்தைகளுக்கு நிதியுதவி என அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனைபள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவல் பலகை எழுதும் பணி நடந்தது

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு

             மாணவர்களின் முழு விவரங்கள் பதிவுசெய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:  

         மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டில் ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பிறப்பு, பள்ளிச் சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, பெற்றோர் பெயர், பெற்றோர் வருமானம் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இதன்மூலம் மாணவர்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.  இதன் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்க வழிவகை செய்யப்படும். 

 ஸ்மார்ட் வகுப்புகள்:

               முதல்கட்டமாக, 5 அரசுப் பள்ளிகளில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். வகுப்பறையில் கணினி முறையில் பாடம் நடத்தப்படும். இதயம் குறித்து பாடம் நடத்தும்போது, ஒலி, ஒளி அமைப்பில் வெண் திரையில் இதயம் தோன்றும். இதன்மூலம், பாடங்கள் மாணவர்கள் மனதில் நீண்ட நாள்கள் நிற்கும். 

கல்வித் தகவல் மேலாண்மை: 

            கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அமைப்பு, அமைவிடம், கட்டட வசதி போன்றவை பதிவு செய்யப்படும். அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் பெயர், பணி, பணியில் சேர்ந்த நாள், வயது, ஓய்வு பெறும் நாள் போன்ற எல்லா விவரங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்படும்.  இந்த முறையில் பள்ளிக் கல்வித் துறையில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, இடைநிற்றல், தேர்வுகள், தேர்ச்சி போன்றவை பதிவு செய்யப்படும். இதில் பள்ளியில் பயிலும் மாணவர் ஒவ்வொருவருக்கும் தர எண் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் அந்த மாணவரின் நிலை கண்காணிக்கப்படும்.








Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படுகிறது

                  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். 

                 அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் மட்டும், அதிகபட்சமாக 12 பள்ளிகள் நிலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.  நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  

எந்தெந்த மாவட்டங்கள்: 

                தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 

               இந்த மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

            இதேபோன்று, காஞ்சிபுரத்தில் ஆறு பள்ளிகளும், 

             திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூரில் தலா 2 பள்ளிகளும், 

          கடலூரில் நான்கு பள்ளிகளும், வேலூரில் ஏழு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன.  

              திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரையில் தலா நான்கும், 

தருமபுரியில் ஐந்து பள்ளிகளும், 

கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல்லில் தலா மூன்று பள்ளிகளும், 

சேலத்தில் ஐந்து பள்ளிகளும், 

நாமக்கல், திருப்பூரில் தலா ஒரு பள்ளியும், 

கோவையில் ஆறு பள்ளிகளும் நிலை உயர்த்தப்படுகின்றன. 

 தேனியில் நான்கு பள்ளிகளும், 

சிவகங்கையில் இரண்டு பள்ளிகளும், 

விருதுநகர், தூத்துக்குடியில் தலா ஒரு பள்ளியும்,

திருநெல்வேலியில் மூன்று பள்ளிகளும்,  

கன்னியாகுமரியில் ஒரு பள்ளியும் மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்படுகின்றன. 

 900 புதிய ஆசிரியர்கள் நியமனம்: 

            நிலை உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இந்தப் பள்ளிகளில் ரூ.9,300-ரூ.34,800 மற்றும் நிலை ஊதியம் ரூ.4,800 என்ற ஊதிய விகிதத்தில் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

       அவை நிரப்பப்படும் நாளில் இருந்து ஓராண்டு காலத்துக்கு தாற்காலிகமாக அந்தப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. 

 எந்தெந்தப் பாடங்களுக்கு நியமனம்: 

                 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிகள் நிலை உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதன் மூலம், புதிதாக படித்த பட்டதாரி மாணவ-மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. நிலை உயர்த்தப்படும் பள்ளிகளில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளவை என்பதால், அங்குள்ள மாணவர்களும் பயன்பெறுவர்.  








Read more »

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

கடலூர் மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி மாணவன் அன்பசரனுக்கு பாராட்டு விழா

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் இளம் விஞ்சானிக்கு பாராட்டு விழா நடந்தது. 

              தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களை அறிவியல் மற்றும் கணிதத்துறையில் ஆர்வத்தை தூண்டிட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி மாணவன் அன்பசரன் மாவட்ட அளவில் இளம் விஞ்சானி விருது பெற்றுள்ளார்.கடலூரில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் அவரது படைப்பை வெளிபடுத்த சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி வழங்கினார்.

             பள்ளியில் மாணவனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் வேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். ஆசிரியர்கள் சிவகுருநாதன், மணிமொழி சரவணாஸ்ரீ, ஜான்சி முன்னிலை வகித்தனர். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சரஸ்வதிலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்ற மாணவனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பின்னர் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்ற மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.





Read more »

சனி, ஜூன் 18, 2011

தனியார் பள்ளி கல்விக் கட்டணம் இணைய தளத்தில் வெளியீடு

             திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

              இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

            சென்னை சீதாபதி நகரில் உள்ள சன்ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ. 24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

           இதற்கு அடுத்தபடியாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ. 20,150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

             அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்-2 வகுப்புக்கு சென்னையிலேயே அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

             இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 15,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

          சூளைமேட்டில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 17,150 கட்டணமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,100 கட்டணமும் நிர்ணியக்கப்பட்டுள்ளது. 


           இதுபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம் 


            இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.




Read more »

திங்கள், மே 02, 2011

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படுகிறது

                 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.  
              மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  "மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துவிட்டன. கம்ப்யூட்டரில் பதிவான மதிப்பெண்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 8-ல் தான் முடிவடையும். எனவே வரும் திங்கள்கிழமை (மே 9-ம் தேதி) முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று அமைச்சர் அறிவித்துள்ளார். 
                 பிளஸ் 2 தேர்வு முடிவு மே 14-ம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 25-ம் தேதியும் வெளியிடப்படலாம் என்று பள்ளி கல்வித்துறை செயலர் டி. சபிதா கடந்த வாரம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசைக் கலந்து ஆலோசிக்காமல் பள்ளிக் கல்வித்துறையே தன்னிச்சையாக அறிவித்தது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.  "தேர்வு முடிவு தேதிகளை அறிவிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள், அதன் அமைச்சரைக் கலந்து ஆலோசித்து விட்டு முதல்வரின் ஒப்புதலைப் பெறுவர். அவர் அனுமதி அளித்த பிறகு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மூலமாகத் தேர்வு முடிவு தேதி அறிவிக்கப்படும். 
               இதுவே நடைமுறை. ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை செயலரே தேர்வு முடிவு தேதியை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தேர்தல் தேதி முடிவு அறிவிப்புக்கும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கும் தொடர்பில்லை'' என்று அமைச்சர் தெரிவித்தார்.  அமைச்சரின் எதிர்ப்பால், பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் தேதியை முடிவு செய்வதில் குழப்பம் நிலவியது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென அறிவித்துள்ளார்.
 
 10 வகுப்புத் தேர்வு முடிவு:  
                 பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இப்போது நடைபெற்றுவருகிறது. பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior