உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பாட்டாளி ஊழியர்கள் நலச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாட்டாளி ஊழியர்கள் நலச் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 17, 2012

என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் 10 தொழிற்சங்கங்கள் போட்டி

நெய்வேலி:

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் நெய்வேலியில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

        என்.எல்.சி. தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறுவதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் தொழிற்சங்கங்களிடம் இருந்து விருப்பமனுவை மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் எ.ஜெகன்நாதராவ் பெற்றார். இதையடுத்து விருப்பமனு வழங்கிய தொழிற்சங்கங்களை பரிசீலித்தப் பின்னர் தேர்தலில் போட்டியிடக் கூடிய 10 தொழிற்சங்கங்களையும், அதற்குண்டான தேர்தல் எண்ணையும் வெளியிட்டார்.

அதன்படி 

ஏ.ஐ.டி.யூ.சி., 
அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், 
சி.ஐ.டி.யூ., 
தொழிற்சங்கக் கூட்டமைப்பு, 
.டி.யூ.சி., 
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், 
மூவேந்தர் முன்னேற்றத் தொழிற்சங்கம், 
என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம், 
பாட்டாளித் தொழிற்சங்கம், 
தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 

உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன.

          இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், எச்எம்எஸ் உள்ளிட்ட 4 தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரே அமைப்பாக போட்டியிடுகின்றன. இந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சனிக்கிழமை நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க வளாகத்தில் நடைபெறுகிறது.











Read more »

வியாழன், நவம்பர் 24, 2011

பா.ம.க. தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் பா.ம.க.வில் இருந்து விலகி புதியக் கட்சித் தொடங்குகிறார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/839e76c2-9045-48c3-b89f-988c816085d6_S_secvpf.gif
 

 
          பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார்.   அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் பதவியில் இருக்கும் ஞானசேகரன் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
இதுபற்றி அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் ஞானசேகரன் கூறியது:-

                  கொள்கை ரீதியாக பா.ம.க. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் வசதி வாய்ப்புகள் பெருக பெருக டாக்டர் ராமதாஸ் மாறிவிட்டார். பணம்தான் முக்கிய குறிக்கோளாகிவிட்டது. பணக்காரர்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வேலை செய்யும் அமைப்பாக பா.ம.க. மாறி விட்டது.
 
              உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.   கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இப்போது எங்கள் சங்கத்தில் 36 ஆயிரம் ரெயில்வே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக தொண்டர்களை திரட்டி உள்ளோம். பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர்களுக்கு சேவை செய்ய அம்பேத்கார் பெயரில் புதிய கட்சி தொடங்குகிறோம். 1-ந்தேதி தியாகராயநகர் பி.டி. தியாகராயர் அரங்கில் விழா நடக்கிறது. அப்போது கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். பா.ம.க.வில் இருந்து விலகியவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் உள்பட அனைவரையும் புதிய இயக்கத்தில் இணைய அழைத்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 

 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 28, 2010

முடிவுக்கு வந்தது என்எல்சி ஸ்டிரைக்

நெய்வேலி:

                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்திற்கும், அதன் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கமான தொமுசவிற்கும் இடையே சென்னையில் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொமுச, என்எல்சி நிர்வாகத்துடன் அக்டோபர் 10-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஆனால், இதர தொழிற்சங்கங்களான பாமக தொழிற்சங்கம், ஏஐடியுசி, அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கைத் தொடர்ந்தன.  

               போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பாமக எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.   இதையடுத்து முதல்வர் முயற்சி மேற்கொண்டு மத்திய அரசுடன் பேசி, என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததையடுத்து, புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

                      இப்பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு  ரூ. 40- ஆக இருந்த ஊதியம் ரூ. 60 ஆகவும், சிறப்பு போனஸ் ரூ. 500-லிருந்து ரூ. 1000-ஆகவும் உயர்த்தப்பட்டது. இதர கோரிக்கைகள் ஏற்கனவே தொமுசவுடன் செய்துகொண்டது தொடரும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 38 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சிஐடியு சங்கத் தலைவர் குப்புசாமி தெரிவித்தார். வேலைநிறுத்தம் வாபஸ் எனக் கூறப்பட்டாலும் 65 சதவீத தொழிலாளர்கள் ஏற்கெனவே பணிக்குத் திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more »

செவ்வாய், ஜூன் 01, 2010

என்.எல்.சி தொ.மு.ச,- பா.தொ.ச, வேலை நிறுத்த நோட்டீஸ்

நெய்வேலி : 

              என்.எல்.சி., நிர்வாகத்திடம் தொ.மு.ச.,வும், பா.தொ.ச.,வும் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர். புதிய ஊதிய மாற்று ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டு ஜனவரி முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்களும், 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தான் வழங்க முடியும் என என்.எல்.சி., நிர் வாகமும் கூறி வருகின்றனர்.

                  இந்த முரண்பாட்டிற்கு தீர்வு ஏற்படாவிட்டால் வரும் ஜூன் 14ம் தேதி இரவு பணி முதல் தொ. மு.ச.,வும் பா.தொ.ச.,வும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதில் உறுதியாக உள்ளது. இப்பிரச்னையில் இறுதி முடிவு ஏற்படாததால் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தொ.மு.ச.,வும் பா.தொ.ச.வும் நேற்று மாலை என்.எல்.சி., நிர்வாக பர்சனல் முதன்மை பொது மேலாளரிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கிடையே பேசி முடிக்கப்பட்டுள்ள ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து பகிரங்கமாக தெரியப்படுத்திய பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து சி.ஐ.டி.யூ.,- எச்.எம். எஸ்., - மூ.தொ.ச., - அ.தொ. ஊ.ச., உள்ளிட்ட அங்கீகாரம் பெறாத தொழிற் சங்கங்கள் நாளை 2ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கப் போவதாக சி.ஐ.டி.யூ., பொதுச் செயலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம்

                    பணி காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளான 20 பெண்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு என்.எல். சி.,யில் நிரந்தர வேலை வாய்ப்பை தொ.மு.ச., வினர் வாங்கி தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தொ.மு.ச., அலுவலக வளாகத்திற்குள்ளேயே நேற்று காலை திடீர் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது:​ பாமக

 நெய்வேலி:

               ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவதால் போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிறது என்றார் நெய்வேலி பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள். தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சில முரண்பாடான நிலை தொடர்வதால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.​ இதனால் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாமக தொழிற்சங்கத் தலைவர் கூறியது:​ 

                  நிர்வாகம் தொடர்ந்து காலம் தாழ்த்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.​ மேலும் அலவன்ஸ் விஷயத்திலும் பிடிவாதமாக இருந்து வருகிறது.​ இதனால் தொழிலாளர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறியும்,​​ அதனை ஏற்க மறுக்கிறது.​ எனவே தொழிற்சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகளுடனும்,​​ தொமுசவுடன் கலந்தாலோசித்து போராட்ட நடவடிக்கையில் இறங்க தீர்மானித்துள்ளோம் என்றார் பெருமாள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சனி, ஏப்ரல் 17, 2010

என்எல்சி ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம்?

 நெய்வேலி:

                 என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இம்மாதம் 20-ம் தேதியும் நிறைவடைவதால், புதிய ஒப்பந்தம் ஏற்பட மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள் உள்பட 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளித் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதங்களாக பேச்சு நடத்தி வருகின்றனர். இப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், பேச்சு விவரங்களை அதில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் பெயரைக் குறிப்பிடாமல்  துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்துள்ளார். 

                      இதனால் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது. இந்நிலையில் தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. பேச்சு விவரங்களை கேட்டறிந்த சங்கத்தின் 2-ம் நிலை நிர்வாகிகள், என்எல்சி நிர்ணயித்த ஊதிய உயர்வு சதவீதத்தை ஏற்க மறுத்துனர். பின்னர் அடிப்படை சம்பளத்தில் 30 முதல் 35 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட தொமுச தலைமை நிர்வாகிகள், புதிய சதவீதத்தின் அடிப்படையில் பேச்சு நடத்துவது எனவும், நிர்வாகம் பணிய மறுத்தால் போராட்ட நடவடிக்கையில் இறங்குவது எனவும் முடிவு செய்துள்ளனர்.÷மற்றொரு சங்கமாக பாட்டாளித் தொழிற்சங்கம், தொமுச நிர்ணயித்த ஊதிய உயர்வு கோரிக்கையை காட்டிலும் கூடுதலாக 1 சதவீதம் கேட்டு அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என முடிவுசெய்யதுள்ளது. இந்நிலையில் தொமுச சட்டவிதிகளின்படி தற்போதய நிர்வாகிகளின் பதவிக்காலம் இம் மாதம் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இப்போதைய நிர்வாகிகள் நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தவேண்டுமெனில் தொமுச பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு தொமுச பேரவை ஒப்புதல் அளிக்குமா அல்லது  ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திய பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் எப்போது தேர்தல் நடத்துவது, எங்களுக்கு எப்போது புதிய ஊதியம் கிடைப்பது என்று தொழிலாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior