உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பாலமான் வாய்க்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலமான் வாய்க்கால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 16, 2010

சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள முதலை


சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் ஆற்றில் புதன்கிழமை பிடிப்பட்ட 15 அடி நீள முதலை.
 
சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் மக்களை அச்சுறுத்திய 15 அடி நீள ஆண் முதலை புதன்கிழமை பிடிபட்டது. சிதம்பரம் நகரை கடந்து செல்லும் பாலமான் வாய்க்காலில் குளிக்கச் சென்றவர்களை முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் விஜயன் மேற்பார்வையில் நந்திமங்கலத்தைச் சேர்ந்த ராஜு தலைமையில் முதலை பிடிக்கும் குழுவினர் புதன்கிழமை 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அந்த முதலையை பிடித்தனர். முதலை 15 அடி நீளமும், 800 கிலோ எடையும் இருந்தது. பிடிபட்ட முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.

Read more »

திங்கள், மே 31, 2010

பாலமான் வாய்க்கால் ஆக்கிரமிப்பு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: 

              சிதம்பரம் அருகே பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டுவதை தடுக்க அரசுக்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவன தலைவர் மணிவண்ணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   சிதம்பரம் அடுத்த உசுப்பூர் சாரதாராம் நகரில் தனி நபர் பாலமான் வாய்க்காலை ஆக்கிரமித்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி பாதிப்பு ஏற் படும் அபாயம் உள்ளது.எனவே சம்மந்தப் பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றிட உரிய நடவடிக்கை எடுப்பதுடன், சாக்கடை மற்றும் செப்டிக்டேங்க் கழிவு நீரும் இந்த வாய்க்காலில் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மர்ம நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி சாக் கடை நீர் பாலமான் வாய்க்காலில் கலப்பதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior