உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பா.ம.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 11, 2010

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து போராடுவோம்: ராமதாஸ்




 
                  நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
 
                    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008-ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  ஆனால் நிலக்கரி நிறுவனம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதற்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், நிலக்கரி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  விபரீத நிகழ்வு எதுவும் நடப்பதற்கு முன்னர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இல்லையெனில், தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more »

விருத்தாசலத்தில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

                   விருத்தாசலத்தில் பா.ம.க. சார்பில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                     வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் செல்வராசு ஆகியோர் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை குறித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்துக்கு, விருத்தாசலம் நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார், பா.ம.க. நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பாபு, நகரத் தலைவர் சீனு, ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜவேல், உத்தண்டி, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணைச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Read more »

சனி, ஜூன் 05, 2010

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது புகார்



கடலூர்:

              விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் கொடுக்கப்பட்டது. 

                 கடலூர் முதுநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு, பண்ருட்டி எம்.எல்.ஏ.வும், பா.ம.க. அமைப்புச் செயலாளருமான தி.வேல்முருகன் வந்தார். அவரை வரவேற்க காலை 8 மணி அளவில் பா.மக.வினர் திருமண மண்டபம் எதிரில் திரளாக நின்று இருந்தனர். 

               குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றில் பங்கேற்பதற்காக, கடலூர் நகராட்சி துணைத் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளருமான தாமரைச்செல்வன், காரில் அந்த வழியாகச் சென்றார். அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சென்றனர். காரை விட்டு இறங்கிய தாமரைச்செல்வன், அங்கிருந்த நகராட்சி பா.ம.க. உறுப்பினர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திவிட்டு புறப்படத் தயாரானார். 

               அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கேலி செய்து, அநாகரிகமான வார்த்தைகளைப் பேசினராம். எனினும் தாமரைச்செல்வன் அங்கிருந்து சென்றுவிட்டார். இப்பிரச்சினை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சொக்கு என்ற புகழேந்தி, முதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸôர், சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Read more »

வியாழன், ஜூன் 03, 2010

சிதம்பரத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம் : 
                    
                   புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பசுமை தாயகம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகே துவங்கிய ஊர் வலத்தை பா.ம.க., மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன் துவக்கி வைத்தார். நகர தலைவர் அருள், பால்ஸ் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் அன்புச்செழியன் தலைமையில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை பகுதிகளில் பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. பசுமை தாயக நகர அமைப்பாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

Read more »

திங்கள், மே 17, 2010

சேத்தியாத்தோப்பு தனி தாலுகா பா.ம.க., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : 

          சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க அரசுக்கு பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட் டிபாபு அரசுக்கு அனுப்பியுள்ள மனு: 

                  சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள புவனகிரி, கம்மாபுரம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலக பணிகளுக்காக விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. பெரும் பாலான கிராம மக்கள் மூன்று பஸ் மாறி தான் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பண விரயம் மன உளைச்சல் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைந்த சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

போலீசை கண்டித்து நோட்டீஸ் : சேத்தியாத்தோப்பில் பரபரப்பு


சேத்தியாத்தோப்பு :

               திருட்டு சம்பவங்களுக் குப் போலீசார் துணைபோவதைக் கண்டித்து சேத்தியாத்தோப்பில் பா.ம.க. சார்பில்  போலீசை கண் டித்து நோட்டீஸ் ஒட்டப் பட்டது.
 
                 சேத்தியாத்தோப்பில் போலீசாரை கண்டித்து கரிவெட்டி கிராம பொதுமக்கள், பா.ம.க., கிளை சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'தமிழக அரசே நடவடிக்கை எடு! வேலியே பயிரை மேய்வதா? காவல்துறை திருட்டுக்குத்  துணை புரிவதா? கரிவெட்டியில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சேத்தியாத்தோப்பு காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு. இங்ஙனம் கிராம பொதுமக்கள், பா.ம.க. கிளை கரிவெட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியில் ஒட்டப்பட்ட இந்த நோட்டீஸ்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 22, 2010

மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை


சேத்தியாத்தோப்பு : 

         வீரமுடையாநத்தத்தில் மணல் திருட்டை தடுக்க கலெக்டருக்கு பா.ம.க., கோரிக்கை விடுத் துள்ளது.
 
இதுகுறித்து கடலூர் (தெ) மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட்டிபாபு கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                   புவனகிரி ஒன்றியம் வீரமுடையாநத்தம் ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக டிராக்டர்கள் மூலம் சில தனி நபர்கள் அரசின் அனுமதியின்றி மணல் எடுத்துச் செல் கின்றனர். இதுகுறித்து சிதம்பரம் வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட்டும் மணல் எடுப்பவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வாரியத்தின் மீது தனி கவனம் செலுத்தி அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

மலேசியாவில் தங்க அனுமதி: தமிழக அரசுத் தரப்பில் மெளனம்

             சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மீண்டும் மலேசியாவில் தங்கியுள்ளார். அவருக்கு அந்த நாட்டு அரசு ஒரு மாத காலத்துக்கு விசா அனுமதி தந்துள்ளது. மலேசியா விசா முடிவடைந்த நிலையில், அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் அவர் சென்னைக்கு வந்தார். இந்திய அரசு ஆறு மாத காலத்துக்கு விசா தந்ததன் அடிப்படையில் அவர் சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விமான நிலையத்துக்குச் சென்றபோது, தமிழக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு விமான நிலைய வளாகத்துக்குள் சென்றனர். இருந்தாலும் பார்வதி அம்மாளையும், அவருக்குத் துணையாக வந்த பெண்ணையும் நள்ளிரவில் மலேசியாவுக்கே அதிகாரிகள் திரும்ப அனுப்பி வைத்தனர்.

                  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த அதிபர் ராஜபட்ச இந்தியாவுக்கு வந்தால் கோவில்களில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்கும் நிலையில், பிரபாகரனின் தாயாருக்கு சிகிச்சைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. மத்திய அரசு விசா கொடுத்திருந்த நிலையில், பார்வதி அம்மாளை அனுமதிக்க கூடாது என்று தமிழக காவல் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனரா என்ற கேள்விக்கு மெüனமே பதிலாக இருக்கிறது.

                   சனிக்கிழமை முழுக்க இதுபற்றி பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதில் தமிழக அரசுக்கு சம்பந்தம் உண்டா, இல்லையா என்பது பற்றியோ, எதற்காக பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது பற்றியோ அரசுத் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பார்வதி அம்மாளுக்கு ஒரு மாத காலத்துக்கு அந் நாட்டு அரசு விசா அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கெனவே மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் அவர், தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்திய அரசு உதவிகள் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு, சிகிச்சைக்காக வந்தபோதுகூட, தமிழகத்தில் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடைக்கவில்லை என்ற பிரச்னை பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தமிழக அரசு இதனை செய்திருக்காது: ராமதாஸ்


              விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 
               விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். 
 
                    இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.
 
                        நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
 
தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்
 

மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:  
 
               இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய விவகாரம்: நெடுமாறன், வீரமணி, கிருஷ்ணசாமி கண்டனம்
 

          
               மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழ. நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
                    பிரபாகரனின் தாயார் பார்வதி 80 வயதை எட்டிய மூதாட்டி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். இலங்கைச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கு ஆளாகி, உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.அவர் இந்தியாவில் 6 மாதம் தங்கியிருக்க, வெள்ளிக்கிழமை காலையில்தான் இந்திய அரசு விசா வழங்கியது.  ஆனால், இரவில் சென்னை வந்த அவரை திருப்பி அனுப்பிவிட்டனர்.

                              பார்வதி வருவதை இந்திய அரசு விரும்பாவிட்டால், அவருக்கு விசா வழங்காமல் இருந்திருக்கலாம். காலையில் விசா வழங்கிவிட்டு, இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். இந்திய அரசு விசா வழங்கிய பிறகு, சிலரின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 22-ல் வைகோ, பழ. நெடுமாறன் உண்ணாவிரதம்: பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து வரும் 22-ம் தேதி சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள வைகோ, மேற்படி போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்:

பார்வதியிடம் முறைப்படியான விசா இருந்துள்ளது. அப்படியிருந்தும் அவரை சென்னையில் சிகிச்சை பெறக் கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பியதைவிட மனிதாபிமானமற்ற, கொடுஞ்செயல் வேறு இருக்க முடியாது.

                    இதற்கு மத்திய அரசோ அல்லது அதில் பணிபுரியும் அதிகாரிகளோ, யார் காரணம் என்றாலும்,  அது கண்டனத்திற்கு உரிய செயலாகும்.

க.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர்:

                   பிரபாகரனின் தாயார் என்பதைத் தவிர, வேறு எந்தக் குற்றமும் புரியாதவர் பார்வதி. அவர் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. எனவே, அவருக்கு சென்னையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர்ஜுன் சம்பத் கண்டனம்:

சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பியதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
           வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஊடுருவி இந்தியாவின் பொருளாதாரத்துக்கே ஆபத்து விளைவுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

             இதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளையின் மனைவியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயாருமான பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது கண்டனத்துக்குரியது. இது மனிதநேயமற்ற செயல். இதுபற்றி தமிழக முதல்வரோ, மனிதநேய அமைப்புகளோ பேசாமல் இருப்பதும் வருத்தத்துக்குரியது. இதுகுறித்து உரிய விளக்கத்தை தமிழக முதல்வர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

காவல் துறையினர் கருத்து

               பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு விண்ணப்பித்து இருந்ததாகவும் அதற்கு இந்திய அரசு அனுமதி அளித்திருந்ததாகவும் தெரிகிறது.

                  இந்நிலையில், வைகோ மற்றும் நெடுமாறன் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு போகாமல் இருந்திருந்தால் மற்ற பயணிகளை போல எந்த பிரச்னை இல்லாமல் அவர் சென்னைக்கு வந்து மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டிருக்கக் கூடும் என்று காவல் துறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.
 

Read more »

பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமணம்

 விருத்தாசலம் : 

              விருத்தாசலத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன் திருமணம் ராமதாஸ் தலைமையில் நடந்தது.
 
                   விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி மகன் திருமணம் நடந்தது. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் அருண் - காவியாவை வாழ்த்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணி, ஆரணி எம்.பி., கிருஷ்ணசாமி, வன்னியர் சங்க தலைவர் குரு, முன்னாள் எம்.பி., பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

downlaod this page as pdf

Read more »

போலீசாரை கண்டித்து போராட்டம் பா.ம.க., மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

 குறிஞ்சிப்பாடி : 

                           பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் வடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மோகன், விஜயகாந்தி, தட்சணாமூர்த்தி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரவேல் வரவேற்றார்.  மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் திருமால்வளவன் பேசினார். பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர்கள் சக்கரவர்த்தி, செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் குமார், ஒன்றிய தலைவர் எழிலரசி ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் 28ம் தேதி மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் சங்கம் நடத்தும் சித்திரா பவுர்ணமி விழாவில் கலந்து கொள்வது. வழிசோதனைபாளையத்தில் நடந்த கலவரத்தில் மோட்டார் கொட்டகைகளுக்கு தீ வைத்து கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்துவது. குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

downlaod this page as pdf

Read more »

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா: கருணாநிதி ருசிகரம்



 
"நான் பெரிய ஐயா;​ ஸ்டாலின் சின்ன ஐயா' என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் கூறினார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது,​​ தங்களது வாகனங்கள் கூட சோதனை செய்யப்பட்டதை முதல்வர் கருணாநிதி இவ்வாறு குறிப்பிட்டார். பென்னாகரம் இடைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதில் தங்களுக்குள்ள கருத்தை திமுக} பாமக ஆகியவை பேரவையில் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. 
 
இது தொடர்பாக பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:​​
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                 பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டன.​ முதல்வர்,​​ துணை முதல்வர்,​​ முன்னாள் முதல்வரின் வாகனங்களைக் கூட சோதனையிட்டனர்.அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்திருக்க வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு.​ காவல்துறை நினைத்திருந்தால் அதனைத் தடுத்திருக்கலாம்.
 
முதல்வர் கருணாநிதி:​​ 
 
                   தேர்தல் நேரத்தில் காவல் துறையினர் நடந்து கொண்ட முறைகள்,​​ உருவாக்கிய கட்டுப்பாடுகள்,​​ நடத்திய சோதனைகளுக்கு தமிழக அரசு பொறுப்பல்ல.​ தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு.
 
வேல்முருகன் ​(பாமக):​​
 
                    பல்வேறு தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்தாலும் எங்களின் அய்யா ​(ராமதாஸ்),​​ சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ வாகனங்களை மட்டும் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனை செய்தார்கள்.​ ஆனால்,​​ மற்றவர்களின் வண்டிகள் தொடர்ந்து சோதனை செய்யப்படவில்லை.​ சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியுள்ளனர்.
  
முதல்வர் கருணாநிதி:​​ 
 
            தொடர்ந்து ஏன் சோதனை செய்யப்படவில்லை என்று வேல்முருகன் கேட்கிறார்?​ மார்ச் 24}ம் தேதி நான் பென்னாகரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது எங்கள் கட்சியின் பெரிய அய்யாவாகிய என்னுடைய வண்டியையும்,​​ சின்ன அய்யாவாகிய ஸ்டாலின் வண்டியையும் சோதனை செய்தார்கள்.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                  அதனை நான் அறிவேன்.​ தீவிரவாதிகளைப் போல சோதனை நடத்தியதைத் தான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமைச்சர் எ.வ.​ வேலு:​​ பென்னாகரத்தில் எனது வண்டியைத்தான் முதன் முதலாக சோதனை செய்தார்கள்.​ ஒரே நாளில் மூன்று இடங்களில் அமைச்சரான எனது வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்கள்.
 
ஜி.கே.​ மணி ​(பாமக):​​ 
 
                     தேர்தல் ஆணையம் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்த அமைப்பாக இருந்தாலும் முதல்வரின் வாகனத்தைச் சோதனையிட வேண்டிய அவசியம் இல்லை.​ எங்கள் அய்யா ​(ராமதாஸ்),​​ மற்றும் சின்ன அய்யாவை ​(அன்புமணி ராமதாஸ்)​ சோதனை என்ற பெயரில் பலமுறை அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.

downlaod this page as pdf

Read more »

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?​​ அமைச்சருடன் பாமக வாக்குவாதம்



 
 
                 பென்னாகரத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது தொடர்பாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது 
 
இது குறித்து நடைபெற்ற விவாதம்:​​
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                சேலம் மாவட்டம் மேச்சேரியில் பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ எங்கள் மீது என்ன வெறுப்பு?​​
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                மேச்சேரியில் பாமக ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதாக வேல்முருகன் கூறினார்.​ பாமகவினர் தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.​ அதற்குப் பதிலாக திருப்பிக் கொடுத்துள்ளனர்.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              முதல்வர் இருக்கும் போதே மூத்த அமைச்சர் ஒருவர் திருப்பித் தாக்குவோம் என்கிற தொனியில் பேசுவது சரியல்ல.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
                 நான் நடந்ததைத்தான் குறிப்பிட்டேன்.​ 27}ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற போது,​​ தேர்தல் பணியாற்றும் சிலரை கட்டி வைத்து உதைக்குமாறு உங்களின் சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசியுள்ளார். 
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
              எந்த இடத்திலும் அவர் அப்படிப் பேசவில்லை.​ அமைச்சர் தவறான தகவலைத் தந்துள்ளார்.
 
ஜி.கே. ​ மணி ​(பாமக):​​ 
 
               தேர்தல் முறைகேடுகள் குறித்து பேச ஆரம்பித்தால் அது குறித்து தனி விவாதமே நடத்த வேண்டியிருக்கும்.​ மேச்சேரியில் திமுகவினரை பாமகவினர் தாக்கியதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.​ அவருக்கு தவறான தகவல் வந்துள்ளது. மார்ச் 25}ம் தேதிக்குப் பிறகு பென்னாகரத்தில் இருந்து வெளியூர் நபர்கள் வெளியேறிவிடுவார்கள்.​ அதன் பிறகு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம் என்ற அர்த்தத்தில் தான் "25}ம் தேதிக்கு பிறகு மாற்றம்' என்று சின்ன அய்யா ​(அன்புமணி ராமதாஸ்)​ பேசினார்.​ கட்டி வைத்து உதைக்குமாறு பேசவில்லை.
 
வேல்முருகன் ​(பாமக):​​ 
 
                   கட்டி வைத்து உதைக்குமாறு அன்புமணி ராமதாஸ் பேசியதாக வீரபாண்டி ஆறுமுகம் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
 
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்:​​ 
 
             பத்திரிகைகளில் வந்துள்ள செய்தியைத் தான் குறிப்பிட்டேன்.​ வேண்டுமானால் அதனைக் காட்ட தயாராக இருக்கிறேன்.
 
அவை முன்னவர் ​(க.​ அன்பழகன்):​​ 
 
             அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதை மறுத்து பாமகவினர் பேசியதும் பதிவாகியுள்ளது.​ எனவே,​​ அமைச்சர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டியதில்லை என்றார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
 
அப்போது, ​​ குறுக்கிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,​​ 
 
                 ""நான் பேசியது உண்மைதான்.​ ஆனாலும் நான் பேசியது பாமகவினரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்'' என்றார்.

downlaod this page as pdf

Read more »

ஜெ., தலைமையில் ஆட்சி: தம்பிதுரை நம்பிக்கை


கடலூர்: 

                      பணம் கொடுத்தால் வெற்றி பெறலாம் என்ற தி.மு.க., வின் திட்டத்தை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள் என அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை பேசினார். 

கடலூரில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர் கள் கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் எம்.பி., தம்பிதுரை பேசியதாவது: 

                     வரும் சட்டசபை தேர் தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஜெ., தலைமையில் ஆட்சி அமையும். பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பணம் கொடுத்து அவர்களை கேடயமாக பயன்படுத்தி கொண்டனர் ஆளும் கட் சியினர்.

                               பென்னாகரத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுவிடும் என்ற செய்தி தெரிய வந்ததாலேயே கருணாநிதி அங்கு பிரசாரத்திற்கு சென்றார். கடைசி இரண்டு நாளில் தி.மு.க- பா.ம.க., வினர் சூழ்ச்சி செய்து வாக்காளர்களுக்கு காசு கொடுத்து அ.தி. மு.க., வெற்றியை திசை திருப்பிவிட்டனர். இது திட்டமிட்ட சதி. இடை தேர்தலை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெ.,வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். காங்., கட்சியை தன் பக்கம் வைத்துக்கொண்டு வரும் பொது தேர்தலில் கருணாநிதி வெற்றி பெறலாம் என திட்டம் போடுகிறார். தி.மு.க., வுடன் கூட்டணி கூடாது என ராகுல் நினைக்கிறார். 1967ல் பணத்தால் வெற்றி பெறமுடியாது என காங்கிரசிற்கு தமிழக மக்கள் உணர்த் தினர் என பேசினார்.

downlaod this page as pdf

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

பென்னாகரம் இடைத்தேர்தலில் பா.ம.க., வுக்கு 2 வது இடம்;





தர்மபுரி: 

              பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் வெற்றி வெற்றார். இன்பசேகரன் பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரனை விட 36,424 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இறுதிச்சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 77 ஆயிரத்து 637 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 41 ஆயிரத்து 243 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 26 ஆயிரத்து 784 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 11 ஆயிரத்து 406 ஓட்டுக்களும் பெற்றனர்.

Read more »

வியாழன், மார்ச் 11, 2010

திரைப்பட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்



கடலூர்:

               கடலூர் திரைப்பட இயக்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

              தமிழகத்தில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள்,​​ இளம் தலைமுறையினரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில்,​​ ஊடகங்களின் பாலியல் செய்தி வன்முறை,​​ அரசியல் தலைவரின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய காட்சி ஊடகம் மீது தாக்குதல்,​​ பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் காரில் சோதனை,​​ முன்னாள் அமைச்சர் அன்புமணியின் காரை வழிமறித்துச் சோதனை,​​ பென்னாகரம் பா.ம.க.​ தேர்தல் பணிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

                கடலூர் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் திரைப்பட இயக்கத் தலைவர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ செயற்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து,​​ தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ திரைப்பட இயக்குநர்கள் தமிழாகரன்,​​ தங்க வெங்கடேசன்,​​ உதவி இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் திரைப்பட இயக்க நிர்வாகிகள் வேணுநாதன்,​​ பட்டுராஜா,​​ தனம் மணியரசு உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior