உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பின்னத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பின்னத்தூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிதம்பரம் பகுதியில் சம்பா சாகுபடிக்கான விதை நெல், விற்பனைக்கு தயார்


சிதம்பரம்:
 
         சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்தது: 
 
        சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா பருவத்துக்கேற்ற தரமானச் சான்று விதை நெல் ரகங்களான பொன்மணி (இத 1009), பி.பி.டி. 5204, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 39, ஆடுதுறை 45 ஆகிய ரக விதை நெல்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த தாயி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.5 மானியத்தில் தற்போது விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது. 
 
               மேலும் பு.முட்லூர், கீழமணக்குடி, புதுச்சத்திரம், பூவாலை மற்றும் பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்  சங்கங்களிலும் சம்பா பருவத்துக்கேற்ற பி.பி.டி. 5204 நெல் விதை ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மானியத்தில் தற்போது விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை தங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

திங்கள், மே 17, 2010

சிதம்பரம் அருகே பின்னத்தூரில் காட்சி பொருளாக நிற்கும் 'ஹைமாஸ்'

கிள்ளை : 

               சிதம்பரம் அருகே பின்னத்தூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சிப் பொருளாக உள்ளது.

               பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஜமாத் நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று பின்னத்தூர் கிழக்கு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல், அரசு உயர் நிலைப்பள்ளி என நான்கு முனை சந்திப்பில் ஒருலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஹைமாஸ் விளக்கு அமைத்த சில தினங்கள் மட்டும் அப்பகுதி பிரகாசமாக இருந்தது.

                    இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்கை மாற்றி வேறு இடத்தில் அமைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள் ளதால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தற்போது ஹைமாஸ் விளக்கு அமைக்கப் பட்டுள்ள நான்குமுனை வீதி அருகில் இந்தியன் வங்கி, டி.என். சி.எஸ்.சி. நெல்கொள்முதல் நிலையம், தொலைபேசி கிளை அலுவலகம், ஜமாத் பள்ளிவாசல், அரபிக்கல்லூரி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகள் இருப்பதால் இரவில் யார் வருகின்றனர் எனத் தெரியாமல் அப்பகுதியினர் விரக்தியில் உள்ளனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள விளக்கை பொது மக்கள் நலன் கருதி சரி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

கால்நடை மருத்துவமனை திறப்பு

 கிள்ளை : 

         நக்கரவந்தன்குடியில் கால்நடை கிளை மருத்துவமனை திறக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் அப்பகுதி கால்நடைகளை பின்னத்தூர் அல்லது கவரப்பட்டு பகுதி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். நக்கரவந்தன் சுற்றுப்பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனை துவங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் கோட்ட கால் நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தட்சணாமூர்த்தி பரிந்துரையின் பேரில் புதிய கால் நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசு சார்பில்  உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 24ம் தேதி கிளை மருத்துவமனை துவக்க விழா நடந்தது. கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி வரவேற்றார். மருத்துவ அலுவலர் பூங்குழலி முன் னிலையில் ஊராட்சி தலைவர் குலசேகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். துவக்க நாளில் 75க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior