உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 03, 2011

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தால் என்ன செய்வது ?

          புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்தாலோ, சிதைந்த நிலையில் இருந்தாலோ அல்லது தரம் குறைந்த புகைப்படமாக இருந்தாலோ, கருவூலம் அல்லது சார்நிலை கருவூலத்தில் முகவரி சான்றுடன், "0001சி' படிவத்தில் புகைப்படத்துடன், 15 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மையத்தில் பணமாக செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கும், 15 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
            இதற்கு, அசல் அட்டை நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டைக்கு முகவரி சான்றாக, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், தற்போதைய தொலைபேசி ரசீது, பாஸ்போர்ட், வங்கி, தபால் நிலைய கணக்கு புத்தகம் ஆகியவற்றில் ஒன்றை காண்பிக்கலாம். வயது சான்றுக்கு, பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அல்லது பெற்றோரின் உறுதி ஆவணம் ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழக வாக்களர்களுக்கு ஓர் வேண்டுகோள்






தமிழக சட்டமன்றத் தேர்தலில் உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள். இலவசங்களை நம்பி ஏமாறவேண்டாம் வாக்களிப்பதற்கு முன் சிந்தியுங்கள். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49 -ஒவை பயன்படுத்துங்கள்.


Read more »

வியாழன், மார்ச் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் பிழைகள்

கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் மற்றும் விலாசங்கள் மாறியுள்ளதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு தற்போது அடை யாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் உள்ளவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெற்ற பலர் அதிர்ச்சியடைந்தனர். விண்ணப்பம் செய்தவரின் பெயருக்கு பதிலாக அவரது தந்தை பெயர் அல்லது வேறு ஒருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது.மேலும் விலாசங்கள் மாறியுள்ளது. 

             கடலூரில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி ரேவதி தனது அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அடையாள அட்டையில் ரேவதியின் படம் உள்ளது. ஆனால் பெயர் குறிப்பிட்டுள்ள இடத்தில் கருணாமூர்த்தி என ஆண் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று வழங்கப்பட்ட பலரின் அடையாள அட்டையில் பங்வேறு குழப்பங்கள் உள்ளதால் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டபோது உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் வாக்காளர் கள் அதிருப்தி அடைந்தனர்.

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் புதிதாக திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பெயர் திருத்தம், புதிய அடை யாள அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

           ஆர்.டி.ஓ., முருகேசன் 610 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தாசில்தார் சரவணன், தேர்தல் தாசில்தார் திருநாவுக்கரசு, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் மற்றும் அதிகாரிகள் விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்திற்கு சென்று வரும் 20ம் தேதி ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் உதவி அலுவலர்களுக்கான பயிற்சியை அளிக்க போதிய இட வசதி உள்ளதா என ஆய்வு செய் தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் 199 பதட்டமான வாக்குச் சாவடிகளில் லேப்படாப்,வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சீத்தாராமன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் லேப்டாப், வெப் காமிரா மூலம் நேரிடையாக கண்காணிப்பதற்கான செயல் விளக்கம்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

                  கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கல்யாணம், கணபதி, திருவேங்கடம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு, பிறகு கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                  கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் பணி 1.7.2010 முதல் 25.1.2011 வரை 1,88,898 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 427 அடையாள அட்டைகளும் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்படும். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக படிவம் 6-ல் இதுவரை 26,662-ம், பெயர் நீக்கம் செய்வதில் படிவம் 7-ல் 172-ம், பெயர் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ல் 3216-ம், தொகுதி விட்டு தொகுதி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் சோர்ப்பதற்கு படிவம் 8எ-ல் 1165-ம் பெறப்பட்டுள்ளது.

                இவை அனைத்தையும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யுமாறு சம்மபந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டால் ரூ. 15 செலுத்தி மாற்று அட்டை பெற்றுக் கொள்ளலாம். கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், பலகைகள், கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.  மேலும், பொதுமக்கள் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டாம், மருத்துவச்செலவிற்காக பணம் எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டும். 
              கடலூர் மாவட்டத்தில், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என 199 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அவற்றில் கல்லூரியில் கணினி பயின்ற மாணவர்களைக் கொண்டு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை லேப்டாப், வெப் காமரா மூலம் நேரிடையாக கண்காணிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 1200 மேல் வாக்காளர்களைக் கொண்ட 47 வாக்குச் சாவடிகளும், 1400-க்கு மேல் 2 வாக்குச்சாவடிகளும், 1500-க்குமேல் 7 வாக்குச் சாவடிகளும் ஆக 50 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

               கிராமப்புறங்களில் அரசின் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை கண்காணிப்பதற்கு 5 கிராமங்களுக்கு 1 துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 1 உதவி பொறியாளர் ஆகியோரை நியமித்து தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிப்பதற்கும் மகளிர் திட்டத்தின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

            அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்றி செயல்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக முதன் முறையாக வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவிற்கான விபரங்கள் அடங்கிய சீட்டினை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 15, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் 2 நாள் சிறப்பு முகாம்

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது. நகராட்சி அவலுவலகங்கள். ஊராட்சி ஒன்றிய அலவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

                  கடலூர் நகராட்சி அலுவலகத்திலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே  1-7-2010, 15-9-2010, 10-1-2011 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டில்களில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும், புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தால், இந்த முகாமில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மையில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க பதிவு செய்து கொண்ட பலரும், இந்த முகாமுக்கு வந்து அடையாள அட்டைகளைக் கோரியதால் பெரிதும் சலசலப்பு ஏற்பட்டது.

                 அறிவிக்கப்பட்ட காலத்தில் பெயர்களை சேர்க்காமல் இருந்து விட்டு, கடைசி நேரத்தில் பெயர்களை கொடுத்து உடனேயே அடையாள அட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க வேண்டிய நபர்கள், இன்னும் அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாகவே முகாம் அமைந்து இருந்தது. போதிய விழிப்புணர்வற்று இருப்பதால் பலர், தங்களது வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

                 மேலும் இந்த முகாமில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில், அச்சுப் பிழைகள் அதிகமாக இருந்ததாக வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர். பலருடைய பெயர்கள், தந்தை பெயர் உள்ளிட்டவை தவறாக அச்சிடப்பட்டு இருப்பதாகவும் வாக்காளர்கள் தெரிவித்தனர். இப்பிழைகளால் வாக்குப் பதிவின்போது, வாக்களிப்பதில் பிரச்னைகள் ஏற்பட்டு, வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடுமோ? என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.

Read more »

வெள்ளி, மார்ச் 11, 2011

நிலுவையில் உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

            தற்போது நிலுவையாக உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,


             13-4-2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவைத்தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக 100 சதவீதம் பிழையற்ற புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க முனைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2010-ம் ஆண்டிலும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின்போதும் வாக்காளராக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கடந்த மாதம் 12-ந் தேதி, 19-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

             தற்போது நிலுவையாக உள்ள அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்கள் ஊரகப்பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களில் நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் சென்னையைப் பொறுத்தவரையில் மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்களிலும் வழக்கமாக இந்த அட்டை வழங்கப்படும்.

               எனவே, 2010 மற்றும் 2011 வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது பதிவு செய்துகொண்டு இதுவரை அடையாள அட்டை பெறாத வாக்காளர்கள் அனைவரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அடையாள அட்டை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Read more »

புதன், மார்ச் 02, 2011

தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள்

        தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி, தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை 01.03.2011 அன்று வெளியிட்டார். 

அப்போது தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷிபேசுகையில்,

             தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கும் (ரிசர்வ்.), 2 தொகுதிகள் பழங்குடியினத்தவருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலையொட்டி மொத்தம் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 பேர்.

             தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 99.85 சதவீதம் பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை 100 சதவீதமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 5 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகள் ஆகும். அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

             புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டு போட முடியாது. இந்த அட்டை இல்லாத வாக்காளர்கள், அருகில் உள்ள தேர்தல் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Read more »

சனி, பிப்ரவரி 19, 2011

வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற ரூ.15 கட்டணம்: இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள்

          வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அதன் நகலை பெற 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             பல்வேறு காரணங்களால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அந்த அட்டையின் நகலை பெற இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து பிர்கா தலைமையிடங்கள், நகர் பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

             இதற்காக வருவோர், படிவம் 001சி மற்றும் நகல் அட்டைக்காக 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இவ்வாறு அட்டை கோருபவர்கள், சரியான நபர்களா என்பதை உறுதிப்படுத்த ஏதுவாக, அடையாளத்துக்கான சான்று, முகவரி சான்றுடன் வர வேண்டும். இதற்கென நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கட்டணத்துக்காக ரசீது வழங்குவர். 

                எனவே, கட்டணத்தை வங்கி பே ஆர்டர் அல்லது கருவூலத்தின் மூலம் செலுத்தத் தேவையில்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் 6ம் படிவத்திலும், பெயரில் மாற்றம் கோருவோர் 8ம் படிவத்திலும், அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோருவோர் 8-ஏ படிவத்திலும், இந்த முகாம்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு 19-ந் தேதி விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

               வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்திருந்தாலோ, சேதம் அடைந்து இருந்தாலோ, புதிய வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதில், புதிய வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு, 19, 20-ம்  தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 001.சி படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவங்களுடன், வீட்டு முகவரிக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி, அஞ்சலக கணக்கு பாஸ் புத்தகம், பேன் கார்டு, அரசு அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன், சம்மந்தப்பட்ட குறு வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளரிடம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

               நகல் அட்டை மார்ச் 5, 6 தேதிகளில் அதே வருவாய் ஆய்வாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

புதன், பிப்ரவரி 16, 2011

வாக்காளர் அடையாள அட்டை சட்டசபைத் தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

               சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு: 

              வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர். 

              வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாறுதல் ஆகியவற்றிற்கு முறையே படிவங்கள் 6, 7, 8 ஏ அளிக்கப்படும் விண்ணப்பங்களும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும். விண்ணப்பங்களை இரு பிரதிகளாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிவங்கள் பதிவிறக்க 


Application for obtaining duplicate / Replacement EPIC  

Read more »

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா: ரூ.15 ரூபாய் கட்டணத்தில் மீண்டும் டூப்ளிகேட் வாக்காளர் அட்டை

           வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா...15 ரூபாய்க்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன. 

             ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் உரிய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. "பெல்' நிறுவன அதிகாரிகள் முகாமிட்டு இப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சட்டசபை தேர்தலில் ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டையும் ஒரு ஆவணமாக உள்ளதால் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருந்தும் அதனை தொலைத்து விட்ட வாக்காளர்களுக்கு நகல் (டூப்ளிகேட்) வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

              இதற்காக ஆர்.டி.ஓ, தாலுகா அலுவலகங்கள், குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளில் இதற்கான விண்ணப்பங்கள் "001சி' வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15 ரூபாய் கட்டணத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அந்தந்த தேர்தல் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

படிவம் பதிவிறக்க:

Form 001C

Read more »

செவ்வாய், ஜனவரி 25, 2011

இன்று தேசிய வாக்காளர் தினம்: 11.5 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

           நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 

              இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தினத்தை வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. "வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்கத் தயார் என்பேன்!' என்ற முழக்கத்துடன் தேசிய வாக்காளர் தினம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 

            ஆளுநர் மாளிகையில் விழா: மாநில அளவிலான வாக்காளர் தின விழா, ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது. ஆளுநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து ஆளுநர் சிறப்பு உரையாற்றுகிறார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையையும் அவர் வழங்குகிறார். 
  
மாவட்ட அளவில்...

            மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரையும் ஏற்கவைக்கின்றனர். புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை மற்றும் பேட்ஜ்களை வழங்குகின்றனர்.  சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து நிலையிலான கூட்டங்களில் வலுவான ஜனநாயகம் அமைக்க பெண்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் உணர்த்தப்படும். 

           குடியரசுத் தினத்தன்று கூட்டப்படும் கிராம சபைக் கூட்டங்களின் அலுவல் பட்டியலில் வாக்காளர் உரிமைகள், கடமைகள் மற்றும் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல் என்ற சிறப்பு அலுவலும் அடங்கி இருக்கும்.  இந்த ஆண்டு 11.5 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக தகுதி படைத்துள்ளனர். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 29 ஆயிரம் அமைவிடங்களில் விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 

             எனவே, அவற்றில் சிறப்பு விருந்தினராக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருப்பார்.  வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் வாக்காளர் புகைப்பட அட்டை அளிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.  

Read more »

வியாழன், ஜனவரி 20, 2011

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் 16.5 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர்

கடலூர்:

 கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

                   2011-ம் ஆண்டிற்கான சுருக்குமுறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 10-01-2011-ல் வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 01-01-2011 தேதியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25-10-2010 முதல் 13-11-2010 வரை 56534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தற்பொழுது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

தொகுதி - திட்டக்குடி (தனி), ஆண்-87542, பெண்-86065,  மொத்தம் - 173607 
 
தொகுதி - விருத்தாசலம், ஆண்-98630, பெண்-94490, மொத்தம் - 193120 
 
தொகுதி - நெய்வேலி, ஆண்-83277, பெண்-78530, மொத்தம் - 161807 
 
தொகுதி - பண்ருட்டி, ஆண்-95037, பெண்-94331, மொத்தம் - 189368 
 
தொகுதி - கடலூர், ஆண்-88650, பெண்-88716, மொத்தம் - 177366 
 
தொகுதி - குறிஞ்சிப்பாடி, ஆண்-91543, பெண்-86807, மொத்தம் - 178350 
 
தொகுதி - புவனகிரி, ஆண்-104753, பெண்-100511, மொத்தம் - 205264 
 
தொகுதி - சிதம்பரம், ஆண்-94192, பெண்-92427, மொத்தம் - 186619 
 
தொகுதி -  காட்டுமன்னார்கோயில் (தனி), ஆண்-93009, பெண்-86624, மொத்தம் - 179633 
 
மொத்தம் ஆண்-836633, 
பெண்-808501, 
மொத்தம் - 1645134 
 
                   மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப் பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more »

வெள்ளி, ஜனவரி 14, 2011

கடலூர் மாவட்டத்தில் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு, 25-ந் தேதி அடையாள அட்டை வினியோகம்

கடலூர்:

            இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற புதிய வாக்காளர்களுக்கு வருகிற 25-ந் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

           தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புகைப்படத் துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்ற சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

            கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரிகளும், நகரங்களில் பில் கலெக்டர் களும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அடையாள அட்டைகளை வினி யோகித்து வருகின்றனர். இதற்கிடையே 1-1-2011-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு தயாரிக்கப்பட்ட துணை வாக்காளர் பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த துணை வாக்காளர் பட்டியலில் இடம் பெற் றுள்ள 49 ஆயிரத்து 976 வாக்காளர்களுக்குரிய அடையாள அட்டைகள் வருகிற 25-ந்தேதி நடை பெறும் தேசிய வாக்காளர் தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

               தேசிய வாக்காளர் தின விழாவை ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் கொண்டாடுமாறும், ஒரே பள்ளிக்கூடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிக்கும் சேர்த்து ஒரே இடத்தில் விழா நடத்துமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  அந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியரை முதன்மை விருந்தினராக அழைத்து அவர் மூலம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குமாறும், இந்த விழாவில் அரசியல் வாதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டாலும், அவர்களுக்கு மேடையில் இருக்கை வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Read more »

செவ்வாய், ஜனவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர் : 

            சுருக்கு முறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் நேற்று வெளியிட்டார். 

          தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி கடலூர் மாவட்டத்தில் 1.1.2011ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புகைப் படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல். நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் 25.10.2010 முதல் 13.11.2010 வரை 56 ஆயிரத்து 534 மனுக்கள் பெறப்பட்டு, கள விசாரணையின் அடிப்படையில் 49 ஆயிரத்து 976 மனுக்கள் தகுதியுடையவைகளாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டது. 

அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டு கூறியது: 

             மேற்காணும் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து தாலுகா, நகராட்சி, ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை மேற்காணும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

சனி, ஜனவரி 08, 2011

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

கடலூர் : 

          புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
 
இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 1ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் வெளியிடப்பட்டது. தற்போது புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி அனைத்து வட்டங்களிலும் நடந்து வருகிறது. பொது மக்கள் இதனை பயன்படுத்தி வாக்காளர் அடை யாள அட்டையை பெற்று பயனடைய வேண்டும். 

              இது குறித்து மேலும் விபரங்களுக்கு 04142- 230651, 230652, 230653, 230654, 232811 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Read more »

வியாழன், ஜனவரி 06, 2011

திட்டக்குடி தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்: தாசில்தார் தகவல்

திட்டக்குடி : 

            திட்டக்குடி தாலுகாவில் புதியதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

இது குறித்து தாசில்தார் கண்ணன், தேர்தல் துணை தாசில்தார் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

             திட்டக்குடி சட்டசபை தனி தொகுதிக்கான கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புதியதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை, அவர்களின் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு செ#திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புதன், ஜனவரி 05, 2011

சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை தயார்

சிதம்பரம் : 

            சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்கள் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தாசில்தார் காமராஜ் கூறுகையில், 

          "சிதம்பரம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர். அந்த மனுக்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் மூலமாகவும், நகராட்சியில் நகராட்சி அலுவலர்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. எனவே வாக்காளர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

Read more »

திங்கள், ஜனவரி 03, 2011

காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டைவழங்கும் பணி துவங்கியது

காட்டுமன்னார்கோவில்:

            காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.வரும் மே மாதம் சட்சபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைக்காக போட்டோ எடுக்கும் பணி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்கு முதல் கட்டமாக வந்துள்ள 3 ஆயிரத்து 819 வாக்காளர் அடையாள அட்டைகள் உரியவர்களுக்கு அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் மூலம் வழங்கப்படுகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior