உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதுச்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 25, 2012

ஆலப்பாக்கம் அருகே எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிர் இழப்பு

கடலூர்:

       கடலூர்  மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


       கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள்.  24.08.2012 காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக தனது தாயாருடன் காத்திருந்தாள். அப்போது அந்த வழியாக கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். கடலூர் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          செவ்விழி இறந்த தகவல் அறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி குழந்தைகள் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.






Read more »

சனி, ஜனவரி 07, 2012

சிதம்பரம் வேளங்கிராயன்பேட்டை கடற்கரை அருகே இளம் பெண் சடலம்

     சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேளங்கிராயன்பேட்டை கடற்கரையோரம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஆடையற்ற நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. இறந்து கிடந்த பெண் யார் எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.

           இளம்பெண்ணின் சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து இறந்து போன இளம்பெண் யார் என்றும், அவர் மானபங்கப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.















Read more »

திங்கள், ஜனவரி 02, 2012

பரங்கிப்பேட்டை அருகே 3 பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் மீனவர் மீது வழக்குப்பதிவு

பரங்கிப்பேட்டை:
 
                  புதுச்சத்திரம் அருகே மூன்று பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு சென்று வந்த மீனவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
         கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 50; மீனவர். இவர் போலி ஆவணங்கள் கொடுத்து மூன்று பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்து சிங்கப்பூர் சென்று வந்ததாக முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தினர். அதில் முருகன், முனியப்ப முருகன், முனியாண்டி முருகன் என மூன்று பெயர்களில் பாஸ்போர்ட் வாங்கி சிங்கப்பூர் சென்று வந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், நவம்பர் 30, 2011

சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை  காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

             நடுக்கடலில் வந்தபோது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது. இதில் வடிவேலு படகின் அடியில் சிக்கிக் கொண்டார்.   வடிவேலுவை ராஜலிங்கம் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜலிங்கம் கரைக்கு நீந்தி வந்து வடிவேலுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றொரு படகில் சென்று படகின் அடியில் சிக்கிக் கொண்ட வடிவேலுவை மீட்டனர். ஆனால் அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சிதம்பரம் தியாகவல்லியில் காதலனை கைபிடிக்க தர்ணா செய்யும் பெண்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/0f5b73c9-7748-4759-9faa-e56294e843ba_S_secvpf.gif
சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் மோகன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் தமிழரசி (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவருக்கும் திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

               தமிழரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்துருவிடம் கேட்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.   இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று காலை திருச்சோபுரத்தில் உள்ள சந்துரு வீட்டு முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனை கண்ட பொது மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று தமிழரசியிடம் விசாரணை நடத்தினர்.

Read more »

சனி, ஜூன் 11, 2011

கடலூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் படு காயம்

 
கடலூர்:
 
            சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று  அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
 
               பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்தனர். பஸ் கண்ணாடிகளை உடைத்து பஸ்சுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்து புதுசத்திரம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். பஸ்சில் தீப்பிடித்து பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க பஸ் மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த விபத்தில் காரைக்கால் சாத்துபடுகையை சேர்ந்த டிரைவர் மோகன், சீர்காழியை சேர்ந்த மாற்று டிரைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 42 பேர் காயம் அடைந்தனர்.
 
            படுகாயம் அடைந்த டிரைவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்ற பயணிகள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior