உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதுப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கடலூர் பரங்கிப்பேட்டையில் மீனவர் கிராமங்கள் மோதல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/31bf54a0-c92a-4b90-99f5-e04119e6aa09_S_secvpf.gif
 
கடலூர்:

        பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்த மீனவ கிராமத்துக்கும், சாமியார்பேட்டை மீனவ கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. 
 
             சாமியார்பேட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் கடைகளில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். வாகனங்களின் கண்ணாடியையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.

                 இந்த மோதல் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சாமியார்பேட்டையை சேர்ந்த 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். சாமியார்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

                இதற்கிடையே சாமியார்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று  காலை லாரி, வேன்கள் மூலம் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். சாமியார்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து போலீசார் பெண்களை மிரட்டுவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரை சந்தித்து முறையிட வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

               இதையடுத்து அப்பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 5 பெண்களை மட்டும் கலெக்டரை சந்திக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி கலெக்டரை சந்திக்க 5 பெண்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 
 
 

Read more »

புதன், மார்ச் 02, 2011

பள்ளி பருவத்தில் போதை கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் பாதிப்பு

பண்ருட்டி : 

               தண்ணீர் இல்லாத காலி பாக்கெட்டில், "சொல்யூஷன்' ஊற்றி, சிறுவர்கள் போதையில் திளைக்கும் பழக்கத்தைத் தடுக்க, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

             சைக்கிள், "டியூப்' ஒட்ட பயன்படும் ஆல்கஹால் உள்ள, சொல்யூஷன் பேஸ்ட், பெவிகால், பைப்புகள் ஒட்ட பயன்படுத்தும் சொல்யூஷன், ஒயிட்னர் போன்றவற்றை, போதை பொருட்களாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் பள்ளிக்கு வரும் சிறுவர்கள், 200 மி.லி., காலி தண்ணீர் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி, அதைக் கசக்கி நுகரும் போது, நல்ல போதை தலைக்கேறுவதாக கூறுகின்றனர். 

           பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் செல்லும் பல மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் ரயில்வே ரோடு, மரங்கள் உள்ள பகுதியில், தண்ணீர் இல்லாத பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில், சொல்யூஷன் ஊற்றி போதை ஏற்றுகின்றனர். இது குறித்து பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாருக்கும், வியாபார பிரமுகர்களுக்கும் தெரிந்தும், இதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை. எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டிய சிறு வர்கள், தவறான பாதைக்கு செல்வதை தவிர்க்க போலீசார், வியாபாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.


Read more »

வியாழன், நவம்பர் 11, 2010

பண்ருட்டி பள்ளியில் 253 பேருக்கு இலவச சைக்கிள்

பண்ருட்டி:

                 புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் 253 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) அ.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிராம கல்விக் குழு தலைவர் எஸ்.சம்பத்குமார், தொரப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.அருணாசலம், திமுக நகர செயலர் கலியமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

Read more »

சனி, ஆகஸ்ட் 28, 2010

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு


மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.
 
பண்ருட்டி:
               பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவரை உடைத்து மழை நீரை உள்ளே திருப்பிவிட்டதால், பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
              புதுப்பேட்டை, பேட்டை வீதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.புதுப்பேட்டை சுற்று வட்டப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் சுண்ணாம்புக்கார குட்டையில் சென்று கலக்கும். இக்குட்டையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி புதுப்பேட்டை பகுதியில் பொது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. 
 
              மழைக் காலத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கும்.அண்மையில் பெய்த மழையால் புதுப்பேட்டை பகுதியில் மழை மற்றும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றதால், தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மழை நீரை வெளியேற்ற வேண்டி பள்ளியின் நுழைவு வாயில் அருகே உள்ள சுற்றுச் சுவரில் ஓட்டை போட்டு பள்ளி வளாகத்தினுள் மழை நீரை திருப்பி விட்டுள்ளனர்.
 
             இதனால் பள்ளி வளாகம் மழை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து ஏரி போல் காட்சி அளித்து, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிப்படைந்தனர்.தற்போது மழை முடிந்து 3 நாள்கள் ஆகியும் பள்ளி மைதானத்தில் தேங்கிய நீர் வற்றவில்லை. இதனால்  மாணவர்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள மழை மற்றும் கழிவுநீரில் மாணவர்கள் விளையாடுவதால் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 
 
                     "பள்ளி சுற்றுச் சுவர்களை உடைத்து மழை நீரை பள்ளி வளாகத்தினுள் திருப்பி விட்டுள்ளனர். இதுபோல் பலமுறை செய்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் நிற்பதால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. பைக்கா போட்டியும் நடத்தப்படவில்லை. பள்ளி சுகாதாரம் பாதிக்கப்பட்டு மாணவர் நலம் பாதிக்கப்படுகிறது. பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என வேதனையுடன் கூறினர்.

Read more »

சனி, ஆகஸ்ட் 14, 2010

கடலூரில் பெண் சிசு கிணற்றில் வீச்சு

கடலூர்: 
                 பெண் குழந்தையை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுப்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கண்ணன் நிலத்தில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ,  கிணற்றில் வீசியுள்ளனர்.  வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்களை தேடி வருகின்றனர்.

Read more »

வெள்ளி, ஜூலை 16, 2010

கடலூர் அருகே திருமணம் நிச்சயித்த வாலிபர் அரசு பஸ் மோதி பலி

கடலூர் : 
      
            கடலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் அரசு பஸ் மோதி இறந்தார். 

                கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளிதாஸ் (25). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், காளிதாஸ் நேற்று காலை புதுச்சேரி சென்று புதிய மோட்டார் பைக் வாங்கிக் கொண்டு, மாலை வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.இரவு 7.30 மணி அளவில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசு பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த காளிதாஸ் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior