உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புரிந்துணர்வு ஒப்பந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரிந்துணர்வு ஒப்பந்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 14, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கொல்கத்தா பாங்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி இயக்ககம் வாயிலாக வங்கி மேலாண்மை பட்டயப் படிப்புகளை வழங்க கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
          துணைவேந்தர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமி நிர்வாக மேலான் இயக்குநர் ஸ்ரீகலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், கே.பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், 
 
          அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் சமுதாயத்திற்கு பயன் அளிக்கக்கூடிய புதிய படிப்புகளை வழங்கி வருகிறது. இப்போது தொடங்கப்படவுள்ள வங்கி மேலாண்மை பட்டய படிப்பு, அரசு வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடியது. இதன் மூலம் வங்கிகளில் பணிபுரிவதற்கு தேவையான ஆற்றல்மிகு திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
 
 
 
 

Read more »

சனி, பிப்ரவரி 26, 2011

மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

            அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கவியல் துறை கல்வி பரிமாற்றம் செய்து கொள்ள அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  

           பல்கலைக்கழக துணைவேந்தர் விடுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மெக்சிகன் பல்கலைக்கழக உலக சுகாதார மைய இயக்குநர் டாக்டர் சோபியா மெஹ்ஜ்வேர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.  நிகழ்ச்சியில், மெக்சிகன் பல்கலை இணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் பாலகிருஷ்ணன், செயல் இயக்குநர் ராணிகோட்டா, மருத்துவப் புல முதல்வர் என்.சிதம்பரம், மருந்தாக்கவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                 இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் அமெரிக்க மருந்து முறைப்பணி நடைமுறைகளை அறிந்து கொள்ள முடியும்.  மேலும் நாட்டிலுள்ள மற்ற கல்வி நிறுவனங்களை விட சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் படிக்கும் டி.பார்ம் பிரிவு மாணவர்கள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவும், உயர் கல்வித் தரத்தையும், அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

புதன், செப்டம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகட்டும் திட்டத்துக்கு 19 கோடி செங்கல் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, 19 கோடி செங்கற்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

                கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்கான வீடுகளுக்கு செங்கல் வழங்குவது குறித்து, செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் நடப்பு ஆண்டில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டும் 19 கோடி செங்கற்கள் தேவை. இவற்றைத் தங்கு தடையின்றி வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் செங்கல் உற்பத்தியாளர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

           அவ்வாறு உற்பத்தி செய்யும் செங்கற்களில் ஓயயப என்று முத்திரை பதிக்க வேண்டும். நிலக்கரி சாம்பல் மூலம் சிமெண்ட் கற்கள் தயாரிப்பதற்கு, காதி கிராம தொழில் வாரியத்தில், மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 95 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு, குழுக்களுக்கு தலா 4 லட்சம் வீதம் 3.60 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 

                வீடுகள் கட்டும் பணியில் கம்பி கட்டும் தொழிலை மேற்கொள்ள 80 சுயஉதவிக் குழுக்களுக்கு, தலா 4 லட்சம் வீதம் 3.20 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேவையான செங்கல் வழங்கப்படும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, மகளிர் திட்ட அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், செப்டம்பர் 16, 2010

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொல்கத்தா ஒரியன் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்துடன் பட்டய வாணிப நடைமுறையில் புறதெôழில் மேலாண்மை என்ற படிப்பை வரும் நடப்பு கல்வியாண்டு முதல் வழங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது 

                        பல்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஒரியன் கல்வி நிறுவனத் தலைவர் மனிஷ்அகர்வால் ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து துணைவேந்தர் தெரிவித்தது: வாணிப நடைமுறையில் புறஅண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிற்சாலைகள் வளமான மற்றும் முழுமையான வளர்ச்சி கொண்ட தொழிற்சாலைகளும். இதுபோன்று முதன்மை தொழில் நிறுவனங்கள் தங்களது பிரதி அலுவலகங்களை புறதெôழில் பின்னணியில் இந்தியாவில் வழங்கி வருவதால் அதிக செலவுகள் சேமிக்கப்படுகின்றன. தெôழிற்சாலைகளின் இத்தகைய வேலைவாய்ப்பை பெறும் நேôக்கை கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என எம்.ராமநாதன் தெரிவித்தார். தெôலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், ஒரியன் கல்வி நிறுவன மண்டல மேலாளர் ராஜ்கேôத்தாரி, சென்னை ஹெச்.எம்.ஹெச் கல்வி நிறுவன இயக்குநர் கஜாலி உள்ளிட்டேôர் உடனிருந்தனர்.

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி ஒப்பந்தம்

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி ஐஏசிஎம் ஸ்மார்ட்லைன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பட்டவகுப்புகளை தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது.

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக புதுதில்லி ஐஏசிஎம் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் மற்றும் எம்எஸ்சி என்டர்பிரைஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி மேனேஜ்மெண்ட் பட்ட வகுப்புகள், வரும் 2011-ம் கல்வி ஆண்டு முதல் தொடங்க கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டது. 

                  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஐஏசிஎம் நிறுவனத் தலைவர் ரவீந்திரகாயல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாற்றம் செய்து கொண்டனர். தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், ஐஏசிஎம் நிறுவன சந்தீப்குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

முந்திரியிலிருந்து மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிப்பு



சிதம்பரம்:
 
            நமது நாட்டில் முந்திரி அதிகளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது முந்திரியிலிருந்து பல புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் முந்திரி பயிரிடும் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
            கேரள மாநில முந்திரி வளர்ச்சி நிறுவனம், பல புதுமையான முந்திரி மதிப்பு கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதிகளவு வணிகம், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் லாபத்தை ஈட்டி வருகிறது. |20 (20 கிராம்) முதல் |600 (1 கிலோ) வரையிலான மதிப்பு கூட்டப்பட்ட முந்திரிப் பொருள்கள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. 
 
 முந்திரி சூப் கலவை: 
 
                 முந்திரி தூள், காய வைக்கப்பட்ட காய்கறிகள், மிளகு, உப்பு, சர்க்கரை கொண்ட முந்திரி சூப் கலவை நுகர்வோரின் தேவைக்கேற்ப உடன்டியாக தயார் செய்து பயன்படுத்தலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள முந்திரி சூப் கலவை கேரள நுகர்வோர் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 
முந்திரி விட்டா: 
 
             முந்திரி விட்டா சிறிய குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சத்துள்ள பானமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், சர்க்கரை, தானிய மாவுடன் கலந்த கலவையுடன் முந்திரியும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பாக்கெட்களில் விற்பனை செய்யப்படும் முந்திரி விட்டா, குளிர் பானங்களை போல் பருகும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
 
முந்திரி பவுடர்: 
 
            முந்திரியை நன்றாக உலர்த்தி அரைத்து பவுடராக்கி, மக்காச் சோள மாவுடன் கலந்து முந்திரி பவுடர் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல சுவையாக உள்ள முந்திரி பவுடர் பாயசம், முந்திரி தேவைப்படும் சைவ மற்றும் அசைவ தயாரிப்புகள், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பவுடர் பயன்படுத்துவதால் சமையலில் முந்திரி அரைத்து பயன்படுத்தும் தேவை இல்லாமலும், குறைந்த நேரத்தில் சமையல் பணிகளை வீடுகளிலும், பெரிய விருந்துகளிலும் செய்யவும் முடிகிறது.
 
வாசனை முந்திரி துகள்கள்: 
 
            நன்றாக காய வைக்கப்பட்ட முந்திரி, உப்பு மற்றும் மிளகு கலந்து நேரடியாக உண்ணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படாத சுவையான பொழுது போக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
 
இது குறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 
 
               முந்திரியில் புதிய, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு அதிக லாபம் ஈட்டப்படுகிறது. தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பங்களைப் பெற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக வங்கிகளுடன் இணைந்து முந்திரியில் புதிய மதிப்பு கூட்டிய பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior