உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புறக்காவல் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறக்காவல் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 10, 2011

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மூடியே கிடக்கும் புறக்காவல் நிலையம்


மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்.
சிதம்பரம்;

       சிதம்பரம் பஸ் நிலையத்தில் போதிய போலீஸôர் இல்லாததால் புறக்காவல் நிலையம் மூடிக் கிடக்கிறது.  

             இதை திறக்க மாவட்ட காவல் நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  சிதம்பரம் பஸ் நிலையத்தில் நாகூரைச் சேர்ந்த பஸ் பயணியிடம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள துபாய் பணம் திருடப்பட்டது.  பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு, குழந்தைகளின் காலில் உள்ள வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பொருள்கள் ஆகியன திருடுபோகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  

           இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் சிதம்பரம் நகருக்கு தமிழகம் முழுவதிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.  இதேபோன்று சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள புறக்காவல் நிலையமும் மூடியே கிடக்கிறது. எனவே கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாம் போதிய காவலர்களை நியமனம் செய்து நகரில் பஸ் நிலையம், கோயில், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புறக்காவல் நிலையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 



Read more »

திங்கள், ஜூன் 20, 2011

கடலூர் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக்குறை

சிதம்பரம்:

          புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

            ரோந்து செல்ல காவலர்கள் இல்லாததால் திருட்டு, வழிபறி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன. தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் அனைவரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

         இதனால் காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களில் காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட பயிற்சி பெற்ற காவலர்களை காவல் நிலையங்களில் உள்ள காவலர் பணியிடங்களில் நியமனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

            இதனால் ரோந்து பணிக்கு கூட காவலர்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பயிற்சி பெற்று காத்திருக்கும் காவலர்களை காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என காவல்துறையினர் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.




Read more »

புதன், பிப்ரவரி 23, 2011

தமிழ் மணக்கும் நெய்வேலி நகர காவல் நிலையங்கள்!

நெய்வேலி:

                நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புற காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் தற்போது தூய தமிழில் பேசத் தொடங்கி இருப்பதால், அவை நகைச்சுவையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.விழுப்புரம் சரக டிஐஜியாக பொன்.மாணிக்கவேல்  பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் எவ்வாறு பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒலிபெருக்கி வாயிலாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

             மேலும் காவல் அதிகாரிகளை ஒலிபெருக்கி மூலம் பேசச் சொல்லி, ஒவ்வொரு குற்றத்துக்கு என்னென்ன பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டு, முறையாக சொல்லாத அதிகாரிகளை கடிந்து கொண்டார்.இதையடுத்து, அனைத்து காவலர்களும் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததையடுத்து, காவலர்கள் தூய தமிழில் பேசுவதற்கே கூச்சப்படுகின்றனர். 

              ஒலிபெருக்கியில் அமர்ந்திருக்கும் காவலர்கள், தூய தமிழில் பேசுவதற்கு தடுமாறுவதைக் கண்டு, சக போலீஸôர் அவர்களை நகைச்சுவையுடன் பார்க்கின்றனர். காவலர்கள் அனைவரும் தூய தமிழைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதால், காவல் நிலையம் செல்வோர், போலீஸôரின் பேச்சைக் கேட்டு கலக்கத்துடனே காவல் நிலையத்துக்கு செல்கின்றனர். போலீஸôர் தங்களை கிண்டல் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் போலீஸôரை அணுகுகின்றனர்.

               கம்பீரமான தமிழ் ஆர்வலர் ஒருவர் காவல் துறையில் தமிழை மணம் பரப்ப ஆசைப்படுகிறார். அவரது முயற்சியை நாம் பாராட்டுகிறோமோ இல்லையோ, அவரது முயற்சிக்கு முடிந்தவரையில் சக காவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர் : 

       கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை எஸ்.பி., திறந்து வைத்தார். கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வரும் புறக்காவல் நிலையம் கடைகள் இருக்கும் பகுதியில் இருப்பதாலும் அதற்கு முன்பாக பஸ்கள் நின்று மறைத்துக் கொள்வதால் அங்கு புறக்காவல் நிலையமே இல்லாதது போல் காணப்பட்டது.  பஸ் நிலையத்தை ஆய்வு செய்த எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படியும், எச்சரிக்கை அறிவிப்பு அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனையடுத்து பஸ் நிலையத் தில் நடுவில் உள்ள மணி கூண்டின் கீழ் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக ரூ.25 ஆயிரம் செலவில் புறக் காவல் நிலையமும், அருகில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இடத் தையும் பெயின்ட் அடித்து சீர் செய்தனர். அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் எஸ்.பி., கூறுகையில் "தாலுகா தலைநகரங்கள், நகரங்களில் உள்ள பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இக்காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை என்ற புகார் வந்ததன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் ஆய்வு செய்யப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 24 மணிநேரமும் செயல்படும் இம் மையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டி.எஸ்.பி., 9445490300, இன்ஸ்பெக்டர் 94454 90297, சப் இன்ஸ்பெக்டர் 9445490298 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior