உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பூண்டியாங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூண்டியாங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 11, 2011

கடலூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் படு காயம்

 
கடலூர்:
 
            சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று  அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
 
               பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்தனர். பஸ் கண்ணாடிகளை உடைத்து பஸ்சுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்து புதுசத்திரம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். பஸ்சில் தீப்பிடித்து பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க பஸ் மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த விபத்தில் காரைக்கால் சாத்துபடுகையை சேர்ந்த டிரைவர் மோகன், சீர்காழியை சேர்ந்த மாற்று டிரைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 42 பேர் காயம் அடைந்தனர்.
 
            படுகாயம் அடைந்த டிரைவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்ற பயணிகள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
 
 

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்

கடலூர்:
 
                      தமிழகத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வேன்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பனனீர்செல்வம் தெரிவித்தார். 
 
 கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் கிராமத்தில் புதன்கிழமை பகுதிநேர ரேஷன் கடையைத் திறந்து வைத்து அமைச்சர் பேசியது:
 
                       ஒரு மாதத்துக்கு முன் மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இங்கு ரேஷன் கடை திறக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 1,17,057 பேருக்கு ரூ.326 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 700 பேருக்கு ரூ.2.5 கோடி செலவு செய்யப்படுகிறது.  ஏழை மக்களின் உயிர் காக்கும் சேவையைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், தற்போது 385 வாகனங்கள் உள்ளன. தொலைபேசி அழைப்பு வந்த 15 நிமிடத்தில் இவைகள் நோயாளியைச் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்க்கின்றன. இதை 5 நிமிடத்திலேயே கொண்டு வந்து சேர்க்கும் வகையில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, மேலும் 200 வாகனங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர்.விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, ஊராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர், கல்விக்குழுத் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடலூர் தனியார் மருத்துவமனையில் திட்டக்குடியைச் சேர்ந்த வீரமுத்து (72) என்பவருக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை, அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

Read more »

புதன், ஏப்ரல் 07, 2010

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்


கடலூர்: 

                    கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு மகள் புனிதரசி (24). இவர் வீட்டில் இருந்த படி பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டமூர்த்தியும் புனிதரசியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் புனிதரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்து கூறி மணிண்டன் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது புனிதரசியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஏமாற் றமடைந்த புனிதரசி நியாயம் கிடைக்கவேண்டி பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்த்த பெண் கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்களுடன் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத் தியதைத் தொடர்ந்து புனிதரசி உள்ளிட்டோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்ட மூர்த்தி மீது புகார் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior