உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதுத் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ்

             10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் புகைப்படத்துடன் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் (26.08.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தது,

         10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.  எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.






Read more »

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

பொதுத் தேர்விற்காக பிளஸ் 2 மாணவ, மாணவியர் விவரம் சேகரிப்பு

              தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியரின், "குரூப்' விவரங்களை, அரசு தேர்வுத்துறை கணக்கெடுத்து வருகிறது. 

              வரும் மார்ச்சில் நடைபெறும் பொதுத்தேர்வில், "குரூப்' வாரியாக தேவையான அளவிற்கு கேள்வித்தாள்களை அச்சடிப்பதற்கு வசதியாக, இந்த புள்ளிவிவரம் சேகரிக்கப்படுகிறது. தனித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சேர்க்கைப் பணிகள் முடிந்ததும், அடுத்த மாதம் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். தேர்வெழுதுவோர் பட்டியலை தயாரிப்பதற்காக, இந்த புள்ளிவிவரங்கள் எடுக்கப்படும். இந்த பட்டியல், டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு, பொதுத்தேர்வு எழுதுவோர் பட்டியல் இறுதி செய்யப்படும். 

              ஆசிரியர்களுக்கு பயிற்சி: சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து, இந்த பயிற்சியை அளிக்க உள்ளனர்.







Read more »

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

பிளஸ் 2 கணித தேர்வு வினாத்தாளில் அச்சுப்பிழை: 31 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது

            பிளஸ் 2 கணித பாட வினாத்தாளில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க, அரசு உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, 32 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என, திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

               பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி, அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. இத்தேர்வில், கணித பாட மாணவர்கள், வினாத்தாளில், ஏராளமான அச்சுப்பிழை இருந்ததாக தெரிவித்தனர். அச்சுப் பிழையால், கேள்விகளை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என, மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

                 இது குறித்த விவரம் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு சென்றது. இதையடுத்து, பிளஸ் 2 கணித பாட வினாத்தாளில் (தமிழ் மீடியம்) ஒரு மார்க் (பாகம் ஏ) கேள்வி எண்கள் 12, 13, 20, 26 மற்றும், 6 மார்க் கேள்வி எண்கள் 41, 47, 51, கேள்வி எண் 70ல் கேட்ட 10 மார்க் கேள்வி, அச்சுப்பிழையுடன் இருந்தன. இதனால், மாணவர்கள் கேள்விகளை புரிந்து கொள்வதில் சிரமம் அடைந்தனர். இக்கேள்வி எண்களை எழுதி, ஓரளவு விடை எழுதிய மாணவர்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டது. ஆங்கில மீடிய மாணவர்களுக்கும், 31 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Read more »

செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் :

             நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (28ம் தேதி) முதல் துவங்கி வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது.

           கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களை விட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.

             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அதிகாரிகள் தலைமையிலும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தலைமையிலும் தலா மூன்று பேர் கொண்ட 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை கண்காணித்து வருகின்றனர்.

Read more »

திங்கள், மார்ச் 28, 2011

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 9.5 லட்சம் பேர் பங்கேற்பு


அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 
 

 

                ஒன்பதரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், இன்று முதல் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,922 பள்ளிகள் மூலம், எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள், தேர்வெழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து 935 பேர் மாணவியர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்கள் 97 ஆயிரத்து 655 பேரும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதுகின்றனர்.

              சென்னையில் மட்டும் 272 பள்ளிகளில் இருந்து, 36 ஆயிரத்து 148 மாணவர்களும், புதுச்சேரியில் 226 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 529 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். சென்னையில், 223 மையங்களிலும், புதுச்சேரியில் 47 மையங்களிலும் தேர்வுகள் நடக்கின்றன. ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கும் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுகின்றனர்.

Read more »

செவ்வாய், மார்ச் 22, 2011

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்: கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கடலூர் : 

            கடலூர் சி.கே. பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதன்மை பெற தயாராகி வருகிறது என பள்ளி இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்தார். 

இதுகுறித்து பள்ளி இயக்குனர் சந்திரசேகர் அறிக்கை: 

         கேவின் கேர் நிறுவனம் நடத்தும் சி.கே. மேல்நிலைப் பள்ளியில் மிகவும் திறமை வாய்ந்த கல்வியில் ஈடுபாடு உள்ள நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதன்மை பெற தயார் படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
             விடுதி மாணவர்களுக்கு இரவு நேர சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஏ.சி., வசதி, மினரல் வாட்டர், சுத்தமான உணவுகளும் வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1 சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior