உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 13, 2010

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி உற்சவம்

கடலூர்:

                      கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாக்களில் முதன்மையும், பெருமையும் கொண் டது மகா சிவராத்திரி விழா. பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் அருள்பாலிக்கும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கமேனி கொண்ட காலமே மகா சிவராத்திரி என்றும், அன்று இரவு நான்கு ஜாமத் திலும் சிவபெருமானை உமா தேவி வழிபட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.சிவராத்திரி என்பது துக் கங்களை போக்கி சுகம் கொடுப்பதாகும். அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை இந்து அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ஜெகன் னாதன், செயல் அலுவலர் மேனகா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர். 
 
திருவதிகை:

                    வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று (13ம்தேதி) காலை 6 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சரக் கொன்றைநாதர் சுவாமிக்கு பஞ்ச தீர்த்தங்களால் பக்தர் களே நேரடியாக அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய் யப்பட் டுள்ளது. மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் சுவாமிக்கு இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11மணிக்கு 2ம் கால பூஜையும், 2 மணிக்கு 3ம் கால பூஜையும், 4மணிக்கு 4ம் கால பூஜையும், நாளை விடியற்காலை தீபாராதனை நடக்கிறது.

Read more »

சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி துவக்கம் : பிரபல கலைஞர்கள் குவிந்தனர்

சிதம்பரம்:

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று (13ம் தேதி) துவங்குகிறது. பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் பரதம் ஆடுகிறார். நாட்டியாஞ் சலியில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் சிதம்பரம் வந்துள்ளனர். நடராஜ பெருமான் நாட்டி யமாடிய சிதம்பரத்தில், 1981ம் ஆண்டு அறக்கட்டளை துவங்கி, கடந்த 28 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது.

                       இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். மகா சிவராத்திரியான இன்று (13ம் தேதி) 29வது நாட்டியாஞ்சலி விழா துவங்கி, 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன், என்.எல்.சி., சேர்மன் அன்சாரி ஆகியோர் விழாவை துவக்கி வைக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியான இன்று சிவராத்திரி என்பதால், மாலை 5.30 மணிக்கு துவங்கி, மறுநாள் 14ம் தேதி காலை 5 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. நாட்டியாஞ்சலி இன்று துவங்குவதையொட்டி, கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Read more »

நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி


சிதம்பரம்: 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி விடிய, விடிய பூஜைகள் நடக்கிறது.பூலோக கைலாயமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி இன்று காலை கால பூஜைகள் முடிந்து பிறகு மாலை 5மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து விடிய, விடிய கால பூஜைகள், சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது.அதே போல் சிவதொண் டர்கள், பொதுமக்கள் விரதமிருந்து திருமுறை பாராயணம் பாடியபடி சிவஜோதி எடுத்து காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மகா சிவாலய தரிசனமும் நடக் கிறது.

                    நடராஜர் கோவிலில் இருந்து தரிசனத்தை துவக்கி நடைபயணமாக ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், கமலீஸ்வரன் கோவில், உமாபதி சிவமடம், சிவபுரி, திருக்கழிப்பாலை, உசுப்பூர், புலிமேடு, அக்னி லிங்கம், இமய லிங்கம், நிருதி லிங்கம், இளமையாக்கினார் கோவில், அழகேஸ்வரர் கோவில், நந்தனார் கோவில், துர்வாசர் மடம், அனந்தீஸ்வரர் கோவில், பிரம்பராயர் கோவில், சிங்காரத்தோப்பு, அவதூதசுவாமிகள் அரிஷ் டானம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மாணிக்கவாசகர் மடம் ஆகியவற்றை தரிசத்துவிட்டு குருநமச்சிவாயர் கோவிலில் சிவாலய தரிசனத்தை முடிக்கின்றனர். சிதம்பம் சைவ திருச்சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

13-ல் சிதம்பரம் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா மகா சிவராத்திரியான இம்மாதம் 13-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. தொடக்க நாளன்று பிரபல நாட்டியக் கலைஞர்களான பத்மா சுப்பிரமணியன், ஊர்மிளா சத்தியநாராயணன் உள்ளிட்டோர் நாட்டியமாடுவர். மகா சிவராத்திரயன்று மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அதிகாலை 5 மணி வரை நடைபெறும். மற்ற நான்கு நாள்களும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஏ.கே. நடராஜன், செயலர் ஏ. சம்பந்தம், துணைச் செயலர் ஆர். நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர். ராமநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior