உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மஞ்சகொல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஞ்சகொல்லை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 04, 2010

சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர்கள் விடுதி மருத்துவ குழுவினர் ஆய்வு

சிதம்பரம்: 

              சிதம்பரம் அடுத்த மஞ்சக்கொல்லை மாணவர் விடுதியில் கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். 

                  கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா உத்தரவிற்கிணங்க கிருஷ்ணாபுரம் அரசு மாணவர்கள் விடுதியில் மருத்துவ அலுவலர் சிவக்குமார், ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்கள் ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் வீரமணி, ரவிவர்மா, பழனிவேல், ஜெய்சங்கர், வசந்தி,வளர்மதி, சரசு, வீரமணி பங்கேற்றனர். ஏற்பாட்டினை விடுதி காப்பாளர் பன்னீர்செல் வம் செய்திருந்தார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழா

 சிதம்பரம் : 

            மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தண்டபாணி சுவாமி வீதியுலா நடந்தது.
 
              புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கடந்த 19ம் தேதி கொடியேற் றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் 27ம் தேதி தண்டாயுதபாணி சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று 28ம் தேதி சித்ரா பவுர்ணமி பெருவிழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறக்கட் டளையினர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வெள்ளி, ஏப்ரல் 16, 2010

கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

சிதம்பரம் : 

                    புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில்  நடந்தது.

                      சிதம்பரம் ஷிட்டோரியா இந்தியன் கராத்தேப் பள்ளி, புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் இணைந்து  புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் இருந்து பெருமாத்தூர் வரை  நடந்தது. நிகழ்ச் சிக்கு புவனகிரி ஒன்றிய வட்டார வளமைய மேற் பார்வையாளர் கலைச் செல்வன் தலைமை தாங் கினார். ஆசிரியர் சேரமான் வரவேற்றார். மாவட்ட தகவல் ஆவண காப்பு அலுவலர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கராத்தே நிபுணர் டாக்டர் இளங்கோவன் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். சிதம்பரத்தில் இருந்து தொடர் ஓட்டமாக பெருமாத்தூர் சென்ற கராத்தே மாணவர்கள், கல்வின் அவசியத்தை வலி யுறுத்தி பொது மக்களிடம்  துண்டு பிரசுரம் வழங்கினர். பின்னர் பள்ளி செல்லாக்குழந்தைகள் குறித்து கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில்  கராத்தே வீரர்கள் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்றனர்.


downlaod this page as pdf

Read more »

திங்கள், மார்ச் 22, 2010

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு குழுவினர்களுக்கு பயிற்சி


கடலூர் : 

             மாவட்டத்தில் கான்கிரீட் வீடு திட்டத்திற்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடவுள்ள குழுவினர்களுக்கு ஒன்றியம் வாரியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
 
             தமிழக அரசு அறிவித்துள்ள கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வீட்டு வசதி திட்டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி துவங் கப்பட உள்ளது. இதற்காக அந் தந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மக்கள் நலப்பணியாளர் மற்றும் ஊராட்சி உதவியாளர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவினர் குடிசை வீடுகளை கணக்கெடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
கடலூர்: 

              கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமில் 15 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு ஆர்.டி.ஓ., செல்வராஜ், பி.டி.ஓ.,க்கள் சீனிவாசன், மங்கலட்சுமியும், தூக்கணாம் பாக்கம் மற்றும் நடுவீரப்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற குழுவினர்களுக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)  தர்மசிவம், கடலூர் பி.டி.ஓ.,  பத்மநாபன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி பயிற்சி அளித்தனர்.


கம்மாபுரம்: 

               ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில் பங்கேற்ற 14 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு நில எடுப்பு தாசில்தார் முகுந்தன், பி.டி.ஓ., நடராஜன் பயிற்சி அளித்தனர். சி.கீரனூரில் நடந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, சுந்தர் பயிற்சி அளித்தனர்.
 

திட்டக்குடி: 

              இறையூரில் நடந்த முகாமில் பங்கேற்ற 17 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு விருத்தாசலம் ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், நல்லூர் ஒன்றிய ஆணையர் சந்திரகாசன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உதவி திட்ட மேலாளர் நாராயணன், உதவி ஆணையர்கள் வீரபாண்டியன், பிரேமா பயிற்சி அளித்தனர். நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்லபெருமாள், ஆணையர் ரவிசங்கர்நாத்தும், மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சையத்ஜாபரும், சிறுபாக்கத்தில் திட்டக்குடி தாசில்தார் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், ஆணையர் புஷ்பராஜ் பயிற்சி அளித்தனர்.
 

புவனகிரி: 

           மஞ்சகொல்லையில் நடந்த முகாமில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ.,க்கள் வாசுகி, திருமுருகனும், எறும்பூரில் நடந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், பி.டி.ஓ.,க்கள்  ஜமுனா, நீலகண்டன் பயிற்சி அளித்தனர்.
 
ஸ்ரீமுஷ்ணம்: 

               தேத்தாம்பட்டில் நடந்த முகாமில் பங்கேற்ற 13 ஊராட்சிகளை சேர்ந்த குழுவினர்களுக்கு காட்டுமன்னார்கோயில் பி.டி.ஓ., விஜயன், சிதம்பரம் உதவி செயற்பொறியாளர் அருண்மொழி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior