உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மது விலக்கு பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மது விலக்கு பிரிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 19, 2011

திட்டக்குடியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை: ரூ.10 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/f17bdb25-1425-4c99-a6d0-3aa66390807a_S_secvpf.gif
திட்டக்குடி:

               திட்டக்குடி பகுதியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

                   அதன்பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வதிஷ்டபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே மயான பாதையில் ஒரு தனியார் செங்கல் சூளை அருகில் ஒருவர் டாஸ்மார்க் மதுபான பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.

                போலீசாரை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவர் விட்டு சென்ற 72 பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். மேலும் விசாரணையில் தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது.  இந்த மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்க பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது கள்ளத்தனமாக விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டவையா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.








Read more »

திங்கள், மே 02, 2011

கடலூரில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி மகளிர் பேரணி


மதுவுக்கு எதிராக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய மகளிர் அமைப்புகள்.
 

கடலூர்:

              மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி கடலூரில், மகளிர் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  பல்வேறு பொதுநல அமைப்புகள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

             பேரணியை எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனத் தலைவர் எம்.பி. நிர்மல் தொடங்கிவைத்தார்.  மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து மகளிர் பேரணி புறப்பட்டு, புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. கடலூர் விழுப்புரம் மாவட்ட ஆர்.சி. பள்ளிகளில் மேலாளர் சிஸ்டர் அருள்புஷ்பம் தலைமை தாங்கினார். பிளஸ் தொண்டு நிறுவனத் தலைவர் எல்.எஸ்.அந்தோனிசாமி, அண்ணா கிராமம் ஒன்றிய மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவி டி.அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.எஸ்.வேலுமணி வரவேற்றார்.

              எக்ஸ்னோரா நிறுவனத் தலைவர் நிர்மல், எக்ஸ்னோரா தலைவர் சுலோச்சனா ராம சேஷன், இளைஞர் எக்ஸ்னோரா தலைவர் கே.அப்துல்கனி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன், போதகர் ராஜன் கோயில்பிள்ளை, அரிமா சங்கத் தலைவர் என்.சாயிராபானு உள்ளிட்ட பலர் பேசினர்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் கடலூரில் வரும் 15ம் தேதி ஏலம்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

           கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் இரண்டு சக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனம் மூன்று என மொத்தம் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இவ்வாகனங்கள் வரும் 12ம் தேதி முதல் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. கடலூர் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., கடலூர் கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுப்பவர்கள் வாகன உரிமையாளர்கள் என்றால் ஏலத் தொகையுடன் 12.5 சதவீதமும், இல்லாத பட்சத்தில் 4 சதவீத விற்பனை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புவோர் இரு சக்கர வாகனத் திற்கு 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன்பணமாக 15ம் தேதி காலை 8.30 மணிக்குள் மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

               ஏலம் எடுக்க வருபவர்கள் விலாசத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் கார்டு, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் புக், இவற்றில் ஏதேனும் ஒன்றை அசல் நகல், ஜெராக்ஸ் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரவேண்டும். 

மேலும் தகவல்களுக்கு 

கடலூர் ஏ.டி.எஸ்.பி., 04142-284353, 
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு 04142 297688, 
சிதம்பரம் 04144-230477,
பண்ருட்டி 94441-80458 

ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புதன், ஏப்ரல் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன: கலெக்டர்


கடலூர்: 

                            கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவினரால் கடந்த ஒரு ஆண்டில் 2,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவது போதுமானதாக இல்லை. இவர்களை வெளியில் உலவ அனுமதிப்பது சமூகத்திற்கு தீங்கு என்பதால் இம்மாதிரியானவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடந்த ஆண்டில் மட்டும் 20 பேரை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழும், 27 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

                    இம்மாதிரி தண்டனை வழங்குவது மட்டும் அரசின் நோக்கமல்ல. இவர்களில் மனம் திருந்தியோர் வாழ உடனடியாக அவர்களுக்காக நிதி ஆதாரம் தேடுவது கடினம். அதற் காக மனம் திருந்திய 55 குற்றவாளிகளுக்கு கறவைமாடு, மளிகைக் கடை, வண்டிமாடு, பெட் டிக்கடை உள்ளிட்ட சிறு வணிகங்களுக்காக 8.24 லட்சம் ரூபாய் அரசு கடன் வழங்கியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.3.5 லட்சத்திற்கு ஏலம்


கடலூர் : 

               மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் 3 லட் சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 60 வாகனங்கள் நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அதில் 56 இரு சக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் என 57 வாகனங்கள் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின்போது கூடுதல் எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன், கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சனி, ஏப்ரல் 24, 2010

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்


கடலூர்: 

               மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.
 
இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவில் கைப்பற்றப்பட்ட 60 வாகனங் களை ஏலம் எடுப்பவர்கள் இன்று 24ம் தேதி முதல் அலுவலக நேரத்தில் பார்வையிடலாம். 26ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி., கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி மைய பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது.

                          இரு சக்கர வாகனத்திற்கு 500ம், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன் பணமாக 26ம் தேதி காலை 8.30 மணிக்கு மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க வருபவர்கள் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகலையும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். 

          மேலும், தொடர்புக்கு ஏ.டி.எஸ்.பி., 04142-284353, என்ற தொலைபேசியும், பண்ருட்டி மது விலக்கு பிரிவு 297688 மற்றும் 04144-230477 என்ற எண்ணிற்கும் இன்ஸ்பெக்டர் 98423-14114 என்ற மொபைல் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior