உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மத்திய கூட்டுறவு வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மத்திய கூட்டுறவு வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2011

கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் கடன் வழங்கிய கூட்டுறவு வங்கிக்கு கேடயம்

கடலூர் : 

               சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்கிய மத்திய கூட்டுறவு வங்கிக்கு அமைச்சர் கேடயம் வழங்கினார். 

               கடலூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களில் 8,196 குழுக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், 1,662 குழுக்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் உறுப்பினர்களாக உள்ளது. 2009 - 10ம் நிதியாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 3,548 குழுக்களில் உள்ள 60,316 உறுப்பினர்களுக்கு 2.484.21 லட்சம் ரூபாயும், 510 குழுக்களில் உள்ள 9,180 உறுப்பினர்களுக்கு 350.91 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளது. மாநிலத்திலேயே அதிகளவில் கடன் வழங்கியதை பாராட்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் மிருணாளினிக்கு கேடயம் வழங்கி பாராட்டினா

Read more »

வெள்ளி, மார்ச் 05, 2010

ஊனமுற்றோர்களுக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு

கடலூர் : 

                 கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் இணைந்து, ஊனமுற்றோருக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு நிகழ்ச்சி கடலூரில் நடந்தது.

                 மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வங்கி மேலாளர் முத்துக்குமரன் வரவேற்றார். தனி அலுவலர் மிருணாளினி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்தார்.இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடைவர்களாவர். மேலும் 40 சதவீதம் ஊனமுடையவர்களாக இருக்க வேண்டும். உதவிப் பொதுமேலாளர் மோகன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior