உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 04, 2012

நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி 36 இடங்களில் 1,260 பேர் கைது


கடலூர் : 

    நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி மாவட்டத்தில் 36 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த 372 பெண்கள் உள்ளிட்ட 1,260 பேரை போலீசார் கைது செய்தனர்.


      தமிழகத்தில் பன்னாட்டு தொழிற்சாலைகள் வருகை, வீடுகளில் மின் உபயோகம் அதிகரிப்பு காரணங்களால் மின்சாரம் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாத காரணத்தினால் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு வினியோகித்து வருகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் கடந்த இரண்டாண்டாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தினசரி 2 முதல் 4 மணி நேரமாக இருந்த மின்வெட்டு கடந்த மூன்று மாதங்களாக தினசரி 10 முதல் 12 மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.


     மின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை சமாளிக்க மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.,யில் உற்பத்தி செய்யப்படும் 2,490 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக பொதுத்துறை சமூக கடமை (கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) என்ற முறையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என இந்திய கம்யூ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் நேற்று மாவட்டத்தில் 36 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.


      கடலூரில் நகர செயலர் குளோப் தலைமையில் 10 பெண்கள் உட்பட 70 பேரும்,        சிதம்பரத்தில் மாநில நிர்வாக்குழு மணிவாசகம், மாவட்ட நிர்வாகக்குழு சேகர் தலைமையில் 20 பெண்கள் உட்பட 29 பேர், புவனகிரியில் நகர செயலர் சீனுவாசன் தலைமையில் 38 பேர், பரங்கிப்பேட்டையில் நகர செயலர் வல்லரசன் தலைமையில் 19 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

      விருத்தாசலத்தில் நகர செயலர் மேத்யூ தலைமையில் 27 பேர், கருவேப்பிலங்குறிச்சியில் வட்டசெயலர் கலியபெருமாள் தலைமையில் 35 பேரும், திட்டக்குடியில் செல்வராஜ் தலைமையில் 5 பெண்கள் உட்பட 30 பேரும், ஆவினங்குடியில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தலைமையில் 2 பெண்கள் உட்பட 19 பேரும், மங்களூரில் குமார் தலைமையில் 11 பெண்கள் உட்பட 24 பேர், ராமநத்தத்தில் ராமலிங்கம் தலைமையில் 20 பேர், பெண்ணாடத்தில் நல்லூர் ஒன்றிய துணைச் செயலர் கருப்புசாமி தலைமையில் 22 பேர், முருகன்குடியில் வேல்முருகன் தலைமையில் 16 பேரும், வேப்பூரில் நல்லூர் ஒன்றிய நிர்வாகக்குழு அருள்மணி தலைமையில் 24 பெண்கள் உட்பட 49 பேர் மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டியில் வட்டச் செயலர் துரை தலைமையில் 83 பேரும்,


          திருவதிகையில் குணசேகரன் தலைமையில் 50 பேர், அண்ணாகிராமத்தில் திருமலை தலைமையில் 22 பேரும், புதுப்பேட்டையில் பாஸ்கர் தலைமையில் 37 பேரும், அங்குசெட்டிப்பாளையத்தில் பன்னீர்செல்வம் தலைமையில் 54 பேரும், காடாம்புலியூரில் குணசேகரன் தலைமையில் 28 பேரும், கொள்ளுக்காரன்குட்டையில் மாவட்ட குழு சரவணன் தலைமையில் 73 பேர், ஸ்ரீமுஷ்ணத்தில் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமையில் 54 பேரும், சோழதரத்தில் மாவட்ட குழு ராஜ் தலைமையில் 25 பெண்கள் உட்பட 62 பேரும், நாச்சியார்பேட்டையில் பட்டுசாமி தலைமையில் 15 பெண்கள் உட்பட 32 பேரும், நடுவீரப்பட்டில் 68 பேரும், காட்டுமன்னார்கோவிலில் 68 பேர், கடம்பூரில் 45 பேர், மேல்பழஞ்சநல்லூரில் 14, டி.நெடுஞ்சேரியில் 23 பேர் என மாவட்டத்தில் 36 இடங்களில் நடந்த மறியலில் 372 பெண்கள் உட்பட 1,260 பேர் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தன













Read more »

புதன், ஜனவரி 04, 2012

தானே புயலில் நெய்வேலி நகரில் 5 லட்சம் மரங்கள் இழப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/002e52dd-ebb7-4079-9972-8fdcddfff51e_S_secvpf.gif


நெய்வேலி:

            என்.எல்.சி. நிறுவனம் அமைந்துள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் எங்கு பார்த்தாலும் மரங்களாக காட்சி அளிக்கும். தானே புயல் அந்த மரங்களை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டிவிட்டது. டவுன்ஷிப் பகுதியில் மட்டும் 5 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இனி அந்த மரங்களை உருவாக்க 10 ஆண்டுகள் வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

           தென்மாநிலம் முழுவதற்கும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மின்சாரம் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இப்போது நெய்வேலி நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கி றது. டவுன்ஷிப் பகுதியில்மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.

              மீண்டும் சீரமைக்க 3000 மின்கம்பங்கள் தேவைப்படுகிறது. ஆனால் மின் கம்பங்கள் கிடைக்க வில்லை. 300 மின்கம்பங்கள் மட்டுமே தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு 28 ஆயிரம் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. மின்சாரம் இல்லாமல் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். புயல் வீசப்போவது தெரிந்ததும் நெய்வேலியில் உள்ள பல்வேறு ராட்சத எந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டனர். இதனால் புயலால் இந்த எந்திரங்கள் பாதிக்கப்படவில்லை. எந்திரங்கள் பாதித்திருந்தால் மின் உற்பத்தி தடைபட்டிருக்கும். ஆனால் அந்த நிலைமை ஏற்படவில்லை













Read more »

புதன், செப்டம்பர் 07, 2011

நெய்வேலியில் இலவச மின்சாரத்துக்காக போராடும் மக்கள்


நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் மின் கம்பியில் கொக்கிப் போட்டு முறைகேடாக பெறப்பட்டுள்ள மின் இணைப்புகள்.

நெய்வேலி:

                நெய்வேலி தாண்டவக்குப்பம் பகுதியில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இலவச மின்சாரம் கேட்டு அவ்வப்போது சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.  

                நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். அவர்கள் நிறுவன ஊழியர்கள் என்பதால் நிர்வாகம் தரை வாடகை ரூ.1 மட்டும் வசூலித்து, சலுகை விலையில் மின் இணைப்பு மற்றும் இலவச குடிநீர் வழங்கி வந்தது.  இந்நிலையில் தாண்டவன்குப்பம் பகுதியில் என்எல்சி-யின் சுரங்க விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அப்பகுதியில் வசித்துவந்த ஊழியர்களுக்கு நெய்வேலி நகரப் பகுதியில் நிறுவன குடியிருப்பை வழங்கியது. 

              இதையடுத்து என்எல்சி ஊழியர்கள் நகரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் அப்பகுதியில் என்எல்சி நகர நிர்வாம் மேற்கொண்ட சேவைப் பணிகளை நிறுத்திக் கொண்டது.  இந்நிலையில் என்எல்சி ஊழியர்கள் அல்லாதோர் சிலர் தாண்டவன்குப்பம் பகுதியில் தற்காலிக குடிசை அமைத்து வசித்துவந்தனர். அவ்வாறு வசித்த வந்தவர்கள், நெய்வேலி தெர்மல் - மந்தாரக்குப்பம் சாலை மார்க்கத்தில் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பிகளில் முறைகேடான வகையில் மின் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 

               இதையடுத்து அவ்வாறு முறைகேடான மின் இணைப்பில் ஈடுபடுவோர் மீது என்எல்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் செய்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நிர்வாகம் அவ்வழியே செல்லும் மின் இணைப்பை துண்டித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அண்மைக் காலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்மையில் ஒரு இளைஞர் என்எல்சி அனல் மின் நிலைய கூலிங் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து என்.எல்.சி. நகர நிர்வாக மின் பராமரிப்பு அலுவலர்கள் கூறுகையில்,

            என்எல்சி-யில் பணிபுரியும் ஊழியர்களிடம் மின் உற்பத்திக்கான செலவினங்களை கருத்தில் கொண்டு கட்டண அடிப்படையில் மின் இணைப்பு வழங்கி வருகிறோம். அதேபோன்று மாநில அரசுக்கும் அனல்மின் நிலைய கட்டுமான மதிப்பீட்டின் அடிப்படையில் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறோம். மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை என்கின்றனர். 

             ஆனால் காவல்துறை தரப்பிலோ, "இவ்வுளவு நாள்கள் அவர்களை தங்கவும், மின் திருட்டைக் கண்டும் காணாமல் இருந்தும் அனுமதித்தவர்கள் தற்போது திடீரென புகார் கொடுப்பது ஏன்? பொதுமக்களையும் போலீûஸயும் மோதவிட்டுப் பார்க்கிறார்களா? அப்பகுதியில் மின் இணைப்பு தரமுடியாது, அந்த இடத்தை நிறுவனத்திற்கு தொடர்பில்லாத வேறு சிலர் ஆக்கிரமித்துள்ளனர் எனக் கூறும் நிர்வாகம், அவ்விடத்தை அகற்ற தயங்குவதேன்?' என்கின்றனர்.  

இதுகுறித்து தாண்டவன்குப்பம் பகுதி மக்களின் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், 

               சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்துவரும் இவர்கள் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.  தற்போது இவ்விடத்தை காலி செய்யச்சொல்லும் நிர்வாகம், எங்களுக்கு மாற்றுஇடம் வழங்க வேண்டும். இல்லையேல் மாற்றுஇடம் வழங்கும் வரை இப்பகுதிக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் வழங்கவேண்டும். இதுகுறித்து அமைச்சர் செல்வி ராமஜெயத்திடம் முறையிட்டுள்ளோம். அவரும் எங்களது நிலைக்குறித்து நிறுவனத் தலைவரை சந்தித்து விளக்கியுள்ளார். மேலும் தமிழக முதல்வரின் பார்வைக்கும் எங்களது கோரிக்கையை கொண்டு சென்றுள்ளார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் வரை மின் இணைப்பு வழங்கவேண்டும் என்றார் ராஜேந்திரன். 







Read more »

புதன், ஜூலை 13, 2011

கடலூர் மாவட்டத்தில் சூரியசக்தி மின் திட்டங்களுக்கு கூடுதல் வங்கி கடன்

கடலூர்:

             சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு, வங்கிகள் கூடுதல் கடன் வழங்க முடிவு செய்துள்ளன. எனவே இந்த வாய்ப்பை சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கேட்டுக் கொண்டார். 

            சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி, 20 ஆண்டுகள் நிறைவு அடைவதை யொட்டி, கருத்தரங்கம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நபார்டு வங்கி இந்தக் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. 

கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:  

              அரசின் திட்டங்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடைகின்றன. தொழில் தொடங்குவதற்கு சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அவர்கள், தொழில் தொடங்காமலேயே தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சுயஉதவிக் குழுக்கள் வங்கிக் கடன்களைப் பெற்று, தொழில்களைத் தொடங்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், வாங்கிய கடன்களை ஒழுங்காக வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தும் வகையில், சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.  இந்தியாவில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில், ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. வரும் ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் தமிழகம் முதல் இடத்துக்கு வரவேண்டும்.

             தற்போதைய சூழ்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்களுக்கு, வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வந்து உள்ளன. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான 17 தொழில்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க உள்ளன. சுயஉதவிக் குழுக்களும் இத்தகைய தொழில்களைத் தொடங்க கடன்களை பெற்று முன்னேற வேண்டும் என்றார் ஆட்சியர்.  கருத்தரங்கத்துக்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் எம்.சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

                 கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன். மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளர் மகாலிங்கம், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் உத்தமர்லிங்கம் ஆகியோர் பேசினர். நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் ராஜகோபாலன் வரவேற்றார். முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் ஜே.டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.







Read more »

சனி, ஜூன் 18, 2011

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் பரிதவிக்கும் மக்கள்

இருளில் நெய்வேலி - மின்சாரம் இல்லாமல் 

பரிதவிக்கும் மக்கள்


பின் குறிப்பு :

"உழுதவன் கணக்குப் பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தால் மின்சாரம் கூட கிடைக்காது "






 

Read more »

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

என்.எல்.சி.க்கு வைகோ பாராட்டு


மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

               "இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையைப் படைத்து வருகிறது.

                கடந்த நிதி ஆண்டில் 1788 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்து சிறப்பான இடத்தைப் பெற்றதுடன் ரூ. 1,247 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் சாதனை புரிந்து உள்ளது.
எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் நவரத்னா என்னும் ரத்தினக்கல் இந்திய அரசால் பொறிக்கப்பட்டு இருக்கிறது.

               பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புமிக்க உயரிய நவரத்னா விருதைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் அதிபர், இயக்குனர்கள் மற்றும் என்.எல்.சி. வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. மென்மேலும் வளர்ந்து மகாரத்னா விருதையும் பெற்றிட வாழ்த்துவதுடன், என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனமாக ஒளிவீசித் திகழ்ந்திட மதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior