உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 11, 2011

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 62 அதிரடிப்படை குழு அமைப்பு

கடலூர் : 

          தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் 62 அதிரடிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 600 துணை ராணுவ வீரர்களும், 110 தமிழ்நாடு சிறப்பு படைபோலீசார் கடலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்களை கொண்டு தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

                அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், ஓட்டுப்பதிவு முடிந்த பின் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரவதற்காக 188 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

              மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு மண்டலக் குழுவிலும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 2 துணை ராணுவ வீரர்கள், 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் முழுவதும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 58 அதிரடிப்படை குழுஅமைக்கப்பட்டுள்ளது.
                 இக்குழுவில் துணை ராணுவம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் தலா இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பகுதிகளில் விரைந்து செல்ல நடவடிக்கையாக துணை ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் என 10 பேர் கொண்ட நான்கு அதிரடிப்படை மாவட்ட தலைநகரான கடலூரில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Read more »

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு

விருத்தாசலம்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலத்திலிருந்து அந்தந்த தொகுதிகளுக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டது.  விருத்தாசலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறும் 14-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.  

               தற்போது தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தத் தொகுதி உதவித் தேர்தல் அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அதன்படி கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளுக்கு 2500 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 3475 பேலட் யூனிட்டுகள் உள்பட 5975 இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது.  வாக்குப் பதிவு இயந்திரங்களை தொகுதி உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் போது மாவட்ட ஆட்சியர் சீதாராமன், விருத்தாசலம் உதவித் தேர்தல் அலுவலர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.50 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருவிப்பு

கடலூர்:

             சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.5 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். கடலூர் மாவட்ட தேர்தல் ஏற்பாடுகளை வியாழக்கிழமை பிரவீண்குமார் ஆய்வு செய்தார். 

பின்னர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்  பேசியது:

             கடலூர் மாவட்டத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். தேர்தல் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்பு தருவிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வாக்குப் பதிவின் நேரம் பதிவாகாது.எனவே வாக்குப் பதிவு நேரம் பதிவாகும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1.5 லட்சம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

              கடலூர் மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கருவூலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்தேன்.வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் 1,000 வாக்குகள் பதிவு செய்து, காண்பிக்க இருக்கிறோம்.10 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இந்த வாக்குப் பதிவு, செய்து காண்பிக்கப்படும். 

            வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 கட்டமாக சோதனை செய்யப்படும். மின்னணு இயந்திரங்களில் பயிற்சி அளிக்க, முதல் கட்டமாக மாஸ்டர் டிரெய்னர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பாளர்கள்.தமிழகத்தில் 11.46 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புதிதாக 49,976 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போதைய சட்ட மன்றத்தின் ஆயுள் காலம் மே 13-ம் தேதி வரை உள்ளது.மே 10-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முந்தைய தேர்தல்களில் மார்ச் 1-ம் தேதி, தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

               தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதுபற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் 3 ஆண்டுகள் ஓரிடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் வேட்பாளர் பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டால், அது விளம்பரமாகக் கருதப்பட்டு, அதற்கான தொகை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றார் பிரவீண்குமார் .மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior