உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




முதியோர் உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 20, 2012

கடலூர் தாலுகாவில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி

நெல்லிக்குப்பம் :

      கடலூர் தாலுகா காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதிகளில் பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி நடந்தது.
 
 
      தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித் தொகைகள் தபால் நிலையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் காலதாமதம், முறைகேடுகளை தவிர்க்க பயோ மெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனாளியின் 10 கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட கார்டு வழங்கப்படும். வங்கியின் தொழில் பரிவர்த்தனை அலுவலர் அந்தந்த கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்கள். ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் இந்த நபர் எடுத்துவரும் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பயனாளிகள் சிரமம் தவிர்க்கப்படும் இதற்கான பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணியை வெள்ளப்பாக்கத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன் துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., பாஸ்கரன் உடனிருந்தார்.
 
 
 
 
 

Read more »

சனி, செப்டம்பர் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை பெற பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு

சிதம்பரம்:

            சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை பெற மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு  வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார்.

            இந்த முன்னோடி திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொளி (வீ டியோ கான்ஃபரன்ஸ்) மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசியது:

                 அரசின் முன்னோடி திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அரசு வழங்குகிற இந்த ஓய்வூதியத் தொகையை பயனாளிகள் பெறுவதற்கு இதுவரை சிரமங்கள் இருந்துவந்தன. இந்த புதிய முன்னோடி திட்டத்தின் மூலம் சிரமங்கள் நீக்கப்பட்டு பயனாளிகள் வசிக்கும் கிராமத்துக்கே வங்கி சேவையாளர்கள் நேரில் சென்று உதவித் தொகையை வழங்குகிறார்கள். எனவே ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த வாரமே பயனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கும். சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கும், உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என ஜெயலலிதா தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பேசியது: 

                  முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் மொத்தம் 161 கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் 10,530 பேர் பயன்பெறும் முன்னோடி திட்டமாகும்.  உடையார்குடி வங்கி மூலம் கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த இருதயமேரி என்ற பயனாளிக்கு ஸ்மார்ட் கார்டு மூலம் பணம் பெறும் திட்டத்தை முதல்வர் அனுமதியின் பேரில் தொடங்கப்படுகிறது என வே.அமுதவல்லி தெரிவித்தார்.

               விழாவில் பயனாளி இருதயமேரி தெரிவிக்கையில் இதுவரை ரூ.500 உதவித்தொகை பெற்று வந்த எங்களுக்கு முதல்வர் ரூ. ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. மேலும் கிராமம், கிராமமாக வந்து கைரேகை மூலம் பணத்தை பெறுவதற்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி என்றார்.  இவ்விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகமாறன், கோட்டாட்சியர் எம்.இந்துமதி. வட்டாட்சியர் விஸ்வநாதன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சந்திரா மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

              கடலூர் மாவட்டத்தில் இந்த முன்னோடி திட்டத்தின்கீழ் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் மூலம் 62 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மொத்தம் 10,530 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 




Read more »

சனி, ஆகஸ்ட் 13, 2011

காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் புகைப்படம் எடுக்கும் பணி

காட்டுமன்னார்கோவில் : 

             காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களை புகைப்படம் எடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். 

              காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு சமூக நல பாதுகாப்பு பிரிவின் கீழ் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் வரை 10 ஆயிரத்து 269 பேர் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்க வங்கிகளின் மூலம் நேரடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட தேசிய வங்கிகளில் அந்த பகுதியில் கணக்கு துவங்கப்படுகிறது.

               கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் இப்பணி துவங்கியுள்ளது. இப்பணியை கலெக்டர் அமுதவல்லி நேற்று ஆய்வு செய்தார். தாலுகா அலுவகத்திற்கு வந்த கலெக்டர், முதியோர் உதவித் தொகை பெற வங்கிகளில் கணக்கு துவங்குவதற்காக பணிகள் எந்த நிலையில் உள்ளது. அந்தந்த கிராமங்களில் முதியோர்களுக்கு புடைப்படம் எடுக்கும் பணி எப்படி நடந்து வருகிறது என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். குமராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஒன்றிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் உதவித்தொகை

 
கடலூர்:
 
                 தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதியோர் உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்கப்படும் கோப்பும் ஒன்று. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான முதியவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

              கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விவசாயக் கூலி ஆகியோர் 62 ஆயிரத்து 100 பேர் மாதத்திற்கு தலா ரூ.1000 பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இவர்களில் 16 ஆயிரத்து 527 பேர் ஆண்கள், 45 ஆயிரத்து 573 பேர் பெண்கள். மாதம் 1000 ரூபாய் கிடைப்பதால் முதியோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகின்றனர். 
 
கடலூர் மாவட்டம் பில்லாலி கிராமத்தில் வசித்து வரும் 75 வயதான பூங்காவனம் கூறியது:-

             இந்த தள்ளாத வயதில், தான் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் எனக்கு ஆதரவுதர யாரும் இல்லாத காரணத்தால் எனது வாழ்க்கையே பெரிய போராட்டமாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் எங்களை போல் கஷ்டபடுகிறவர்கள் மனக்குறையை தீர்க்கிற மாதிரி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி.

வரக்கால்பட்டு கிராமத்தில் 75 வயது முதியவர் நடேசன் கூறியது:-


             வயதானவர்களுக்கு 1000 ரூபாய் பென்சன் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்காங்க. ரூ.500 வாங்கினபோது வீட்டு செலவுக்கே போதாமல் இருந்தது. இனி எனக்கு வீட்டு செலவை பற்றி கவலை இல்லை இது மட்டுமின்றி இலவச அரிசி தருகிறார்கள். எங்களைபோல் வயதானவர்கள் கஷ்டத்தை போக்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா காலத்திற்கும் நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 
 
 

Read more »

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களில் பெண்களே அதிகம்

கடலூர்:

        தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
              வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண், முதிர் கன்னி மற்றும் ஊனமுற்றோர்களுக்கு தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் மாதம் தோறும் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் வரை 61 ஆயிரத்து 888 பேர் உதவித் தொகை பெற்று வந்தனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதியோர் உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் உதவி பெற ஏராளமானோர் முன் வந்துள்ளனர்.

                இதனால் ஜூன் மாதம் பயனாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 100 ஆக உயர்ந்தது. அதில் ஆண்கள் 16 ஆயிரத்து 527 பேரும், பெண்கள் 45 ஆயிரத்து 573 பேரும் இத்திட்டத்தில் உதவித் தொகை பெற்று வருகின்றனர். மேலும், ஆங்காங்கே நடைபெற்று வரும் மனுநீதி நாள் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டங்களில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 8ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 513 மனுக்களில் முதியோர் உதவித் தொகை கோரி 300க்கும் மேற்பட்ட மனுக்களாகும். உதவித்தொகை கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதால், வருவாய் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.



Read more »

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

திட்டக்குடியில் முதியோர் உதவித்தொகை கேட்டு போராடும் மூத்தக் குடிமக்கள்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/9a4c5eb3-6a10-45cb-a08d-780778dc7165_S_secvpf.gif
 

திட்டக்குடி:
 
          திட்டக்குடியை அடுத்துள்ள கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (92) விவசாயி இவரது மனைவி அஞ்சலை (75) இவர்களுக்கு குழந்தையில்லை. ஒரு கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.
 
            கடந்த 20 ஆண்டுகளாக இவரும், இவரது மனைவியும் இவரது வீட்டின் அருகில் பள்ளிக்கூடம், கோயில் உட்பட பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள். சுமார் 500 மரங்கள் வரை இவரால் நடப்பட்டுள்ளன. பராமரிப்பு பணியையும் செய்து வருகிறார்கள். தற்போது கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இருவரும் கடலூர் சென்று மாவட்ட கலெக்டர் அமுதவல்லியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

                அதில் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்து வரும் மரக்கன்றுகளே எங்களின் பிள்ளைகளாக உள்ளனர். ஆனால் அவற்றை பொது இடத்தில் நட்டு விட்டதால் நாங்கள் பயன்படுத்த இயலாது இந்த சூழ்நிலையில் கருணை அடிப்படையிலாவது முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior