உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




முதுநகர் காந்தி பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதுநகர் காந்தி பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 07, 2011

கடலூரில் சாலையோர பூங்கா மற்றும் நீரூற்று பராமரிப்பின்றி காய்ந்து வரும் அவலம்

 கடலூர் : 

            கடலூர் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலையோர பூங்கா, நீரூற்று பராமரிப்பின்றி உள்ளது. 

         கடலூர் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி சாலையோரத்தில் 5 இடங்களில் பூங்கா மற்றும் நீரூற்றுகளை அமைத்தார். கடந்த 2004-05ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில் 6.75 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாபாலம் சிக்னல் அருகே நீரூற்று மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் ரசாயன கம்பெனிகள் இந்த பூங்காவை பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன. 

             அவற்றில் ஒரு சில ரசாயன கம்பெனிகள் முறையாக பராமரித்து வருகின்றன. அண்ணாபாலம் சிக்னல் அருகே எதிரெதிரே அமைக்கப்பட்ட பூங்காக்களில் ஜவான்ஸ் பவன் அருகே அமைக்கப்பட்ட பூங்கா டான்ஃபேக் நிறுவனம் பராமரித்து வந்தது. தற்போது அதிலிருந்த மின் மோட்டார் காணாமல் போனதைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள அழகான செடிகள், பூச்செடிகள் காய்ந்து வருகின்றன. நீரூற்றும் செயல்படவில்லை. எனவே பழுதாகியுள்ள நீரூற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.




Read more »

வியாழன், மே 05, 2011

கடலூர் முதுநகரில் பராமரிக்கப்படாத காந்தி பூங்கா

முதுநகர்:

         முதுநகர் காந்தி பூங்கா சரியாக பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது.

             முதுநகர் மக்களின் வார விடுமுறை நாட்களில் நேரத்தை செலவழிப்பதற்கு பொழுது போக்குவதற்கான இடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே இருந்த முதுநகர் காந்தி பூங்கா 11.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டதால் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் கூட்டம் அதிகரித்தது. 

             வார விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் அலை மோதியது. ஆனால் தற்போது முறையான பராமரிப்பில்லாததால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், பூங்காவிற்கு வருபவர்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், பெஞ்சுகள் பெரும்பாலானவை உடைந்து காணப்படுகிறது. பூங்காவில், விடுதலை போராட்டத்தில் சிறை சென்று சிறையிலேயே உயர் நீத்த 27 விடுதலை வீரர்களின் நினைவாக கல்வெட்டுடன் கூடிய நினைவு கோபுரம் அமைக்கப்பட்டது. 

            வரலாற்றுச் சுவடாக உள்ள இந்த நினைவு கோபுரமும் முறையாக பராமரிப்பில்லாமல் பொலிவிழந்து வருகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதை பார்ப்பதற்காக விரும்பி அழைத்து வரும் பெற்றோர்கள் தற்போது இந்த பூங்கா பக்கம் வருவதேயில்லை. நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior