உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ராஜராஜன் 1000 நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜராஜன் 1000 நெல் சாகுபடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

தமிழகம் முழுவதும் இடுபொருட்கள் பெற விவசாயிகளுக்கு அரசு அடையாள அட்டை அறிமுகம்

நெல்லிக்குப்பம் : 

            தமிழக அரசு மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை எளிதாக பெற விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

             தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு "ராஜராஜன் 1000' நெல் நடவு, பயிறு வகை பயிர்களுக்கு இலவசம் மற்றும் மானிய விலையில் இடுபொருட்களும், சொட்டு நீர் உட்பட பல திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவற்றை பெற ஒவ்வொரு முறையும் பல்வேறு விவரங்களை விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளது. இதற்காக செலவு அதிகமாவதுடன், நேரமும் விரயமாகிறது. 
            இதனைத் தவிர்க்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை வழங்கி அதில் விவசாயி பெயர், வங்கி கணக்கு எண், நிலத்தின் சர்வே எண் போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் போதும், அதன் பிறகு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விவசாய டெப்போவில் இடுபொருட்களை பெற்றுக் கொள்ளலாம். 

              இதற்காக ஒவ்வொரு முறையும் அதிகாரிகளை பார்க்கத் தேவையில்லை. எளிதாக இடுபொருட்களை பெறமுடியும். மானிய தொகைகள் மற்றும் நிவாரண நிதிகளை இனி விவசாயிகள் வங்கிகளில் நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அண்ணாகிராமம் வட்டாரத்தில் 5,600 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை உதவி இயக்குனர் சம்பத்குமார் செய்து வருகிறார்.

Read more »

வெள்ளி, ஜனவரி 28, 2011

"ராஜராஜன் 1000" நெல் சாகுபடி முறைக்கு அரசு உதவி


(விருத்தாசலம்) நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் தச்சூரில் "ராஜராஜன் 1000' நெல் சாகுபடி முறையை பயன்படுத்தியுள்ள விவசாயிகள்.
 
விருத்தாசலம்: 

           கோமுகி அணை பாசன விவசாயிகள் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இம்முறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.  

இம்முறை குறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது: 

           தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகை பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி உதவியுடன், தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவளத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.  இம்முறையின் மூலம் விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் கோமுகி அணை பாசனப் பகுதிகளில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையை விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு களைக்கருவி, நடவு அடையாளக் கருவி, உரங்கள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.  

           ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் 1 ஏக்கருக்கு நாற்றங்கால் 40 ச.மீ. அளவும், 3 கிலோ விதையும் போதுமானது. ஆனால் நடைமுறை சாகுபடிக்கு நாற்றங்காலில் அளவு 320 ச.மீ. தேவைப்படுகிறது. மேலும் விதை சுமார் 16 முதல் 24 கிலோ வரை தேவைப்படும். ராஜராஜன் 1000 முறையில் நாற்று வயது 14 முதல் 15 நாள்களாகும். எனவே விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.  நடைமுறைப்படுத்த வேண்டிய நாற்றங்கால் முறை: 1 ஏக்கருக்கு மேற்கண்டபடி விதையும், அளவும் போதுமானது. 

           நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். இதில் மக்கிய தொழு உரத்தை தெளிக்கலாம். நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடைமேல் பாலித்தின் அல்லது பிரித்த உரச் சாக்குகளையோ பரப்ப வேண்டும். மீண்டும் 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணை நிரப்ப வேண்டும். விதைநேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு 1 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். 

             உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் முளைகட்ட வேண்டும்.  முளைகட்டிய பின் ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் விதையை பரவலாக விதைக்க வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் பள்ளங்களில் தண்ணீர் நிரப்பலாம். இதைத் தொடர்ந்து முளைத்த நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து வயலுக்கு எடுத்துச் செல்வது சிறப்பானதாகும். 

              இதனால் நாற்றுகளின் வேர்ச் சூழ்நிலை மாறாமல் நடப்பட வாய்ப்பிருப்பதால், செடிகள் பச்சை பிடிப்பது உடனடியாகத் தொடங்கும். நாற்றுகளை மண்ணோடு பத்தையாக எடுத்து முறம் அல்லது அட்டைப் பெட்டியில் வைத்து, நடவு இடத்தில் நடும்போது நாற்றுகளை பிரித்து நடலாம்.  ÷இம்முறையில் 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். இதில் அடையாளமிட்ட கயிறையோ அல்லது நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம். 1 குத்துக்கு 1 நாற்று என்ற விகிதம் முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நேக்காமலும், ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது. 

             இம்முறையில் பெரும்பாலும் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ரசாயன உரங்களோடு பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பயிருக்குத் தேவைப்படும் காலகட்டங்களில் அவற்றைப் பிரித்து இடவேண்டும். மேலும் இம்முறையை பயன்படுத்துவதால் ஆள் செலவு குறைகிறது. வயலில் நீரைத் தேக்க வேண்டிய அவசியமில்லை. அதிக தூர்கள் வரும். இதனால் அதிக கதிர்கள் மற்றும் மணிகள் உண்டாகும். இதனால் அதிக லாபம் பெறலாம் என அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல்களை கோமுகி நீர்பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலமாக தொடர்பு கொண்டு பெறலாம் எனவும் அவர் கூறினார்.

Read more »

புதன், அக்டோபர் 06, 2010

பரங்கிப்பேட்டை பகுதியில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு மானியம்

சிதம்பரம்:
 
             குறைந்த செலவில் கூடுதல் மகசூல் தரும் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் தெரிவித்துள்ளார்.​ ​
 
இதுகுறித்து ரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ ​
 
                      சிதம்பரம், ​​ பரங்கிப்பேட்டை பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.​ 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை நெல் மட்டும் போதுமானதாகும்.​ ஒரு ஏக்கருக்கு 1 சென்ட் என்ற அளவில் பாய் நாற்றங்கால் விதைப்பு செய்ய வேண்டும்.​ ​நடவுக்கு 13 முதல் 15 நாள் வயதுடைய இளம் நாற்றுக்களை குத்துக்கு ஒன்று வீதம் 22.5 செ.மீட்டருக்கு 22.5 செ.மீட்டர் என்ற அளவில் சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.​ 
 
                இதற்கு மார்க்கர் கருவியை பயன்படுத்தலாம்.​ நடவு வயலில் களை எடுக்க கோனோவீடர் எனும் களைக்கருவியை நட்ட 10-ம் நாள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் 4 முறை பயன்படுத்த வேண்டும்.​ இக்கருவியை பயன்படுத்துவதால் களைகள் கீழே தள்ளப்பட்டு மக்கி உரமாக பயிருக்கு கிடைப்பதுடன்,​​ நல்ல காற்றோட்டமும் பயிருக்கு கிடைக்கும்.​ ​இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தேவையானபோது தழைச்சத்தினை பயிருக்கு இட வேண்டும்.​ செம்மை நெல் சாகுபடியில் சாதாரண முறையை விட,​​ 25 சதவீத மகசூல் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.​ ​
 
                    ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் 5 கிராமங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத் தளைகள் அமைக்கப்பட்டுள்ளன.​ ஒவ்வொரு கிராமத்திலும் 25 ஏக்கர் பரப்பில் தொகுப்பாக இந்த செயல் விளக்கத்தளைகள் அமைக்கப்படவுள்ளன.​ அச்செயல் விளக்கத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.​ ​எனவே,​​ தங்களது நிலங்களில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடி செயல் விளக்கத்தளைகளை அமைக்க விரும்பும் விவசாயிகள்,​​ தங்கள் பகுதி வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தனசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior