உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




லால்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லால்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 01, 2011

காட்டுமன்னார்கோவில் அருகே நடுரோட்டில் பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு






காட்டுமன்னார்கோவில்: 

          கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, தனியார் பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

            கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து, நேற்று மதியம், காட்டுமன்னார்கோவிலுக்கு, தனியார் பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. குமராட்சி அருகே செல்லும்போது, பஸ்சின் முன் சக்கரத்தில் இருந்து, சத்தம் வந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், பேரிங் உடைந்தது தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் வரை சென்று விடலாம் என, டிரைவர் மீண்டும் பஸ்சை இயக்கினார். 

              லால்பேட்டை நெருங்கிய போது, பஸ்சின் முன் சக்கரம் கழன்று ஓடியது. இதனால் பலத்த சத்தத்துடன் பஸ் நடுரோட்டில் முன் பக்கம் சாய்ந்தபடி நின்றது. பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். கழன்ற சக்கரம், 300 மீட்டர் தூரம் ஓடி அருகில் உள்ள வயலில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை மிதமான வேகத்தில் ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நடுரோட்டில் பஸ் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வாகனங்கள் எள்ளேரி, லால்பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டன.



Read more »

செவ்வாய், மே 31, 2011

காட்டுமன்னார்கோவில் அருகே இலவச ஆட்டோ சேவை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:

             காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 

           அதனைத் தொடர்ந்து இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கி வைத்தார். அவசர காலத்தில் பொதுமக்கள் இந்த ஆட்டோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஏ. அருண்மொழிதேவன் தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ. பாண்டியன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே. மாரிமுத்து, ஒன்றிய பேரவைச் செயலாளர் ஜெயமணி, காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் எம்ஜிஆர்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லால்பேட்டை நகரச் செயலாளர் நஜீர்அகமது நன்றி கூறினார்.




Read more »

செவ்வாய், டிசம்பர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

  கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

 
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.

                கல்குணம், மருவாய், மருதூர், பூதங்குடி, எல்லைக்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள், பயிர்கள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

              அதனைத்தொடர்ந்து திருநாரையூர், கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, மெய்யாத்தூர், பூலாமேடு, குமராட்சி, சிவாயம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், குடிசைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மத்தியக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கூறியது:-

                   கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி மதிப்பிலான சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. 54 ஆயிரம் எக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2711 எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

                பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் பயிர் பாதிப்பு மற்றும் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். தமிழ் நாட்டில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

                தற்போது ரூ.117 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. அது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடலூர்
மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
 

             கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.368 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடியில் நிரந்தர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு என்.எல்.சி. உடன் இணைந்து கூட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

குண்டும், குழியுமான மானியம்ஆடுர் சாலை

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

             3 கி.மீ. நீள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி நடந்துகூட செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. இச்சாலை வழியே தினமும் ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்கிறது. இச்சாலையில் ராயநல்லூர், கொத்தங்குடி, நத்தமலை, நெய்வாசல், மானியம் ஆடூர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் லால்பேட்டை மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர்.

           இந்நிலையில் சாலை மிக மோசமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியுற நேரிடுகிறது. இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் நிலை உள்ளது. மழைக் காலத்துக்கு முன்னதாக இச் சாலையை சீரமைக்க, கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

சனி, ஜூலை 03, 2010

தேசிய லீக் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., கோர்ட்டில் ஆஜர்

கடலூர்; 

                தேசிய லீக் கட்சி பிரமுகர் தொடர்ந்த வழக்கில் காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர்.

              காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம். கோர்ட் டில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர். 

                இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால்பேட்டை வந்து, என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தாக்கியதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணைக்காக இருவரும் 2ம் தேதி கோர்ட் டில் ஆஜராக உத்தரவிட்டார்.அதன்படி இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ் பெக்டர் இருவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் வழக்கின் நகல் வழங்கிய நீதிபதி சண்முகநாதன், வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Read more »

சனி, ஜூன் 12, 2010

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

கடலூர் : 

                    காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையைச் சேர்ந்தவர் அகமதுல்லா. இவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி கடலூர் சி.ஜே.எம்., கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு உறுப்பினர் தேர்தலில் தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிராஜூதீனுக்கு முகவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பகல் 12 மணிக்கு நடந்த தகராறில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் முன்னிலையில் மனிதநேய கட்சியினர் 5 பேர் என்னை தாக்கினர்.

                     இரவு 11 மணிக்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என்னை தேடி லால்பேட்டை வந்து, அங்கிருந்த பெண்கள் பைஜூன்னிசா, முகமுதாபீபி ஆகியோரை ஆபாசமாக திட்டினர். பின்னர், என்னையும், எனது தம்பி அமீர் உல்கக்கையும் தாக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்கள் இருவரையும் சட்டையை கழற்றி லாக்கப் கம்பியில் வைத்து அடித்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் மீது அத்துமீறி நுழைந்து தாக்கியது (448), ஆபாசமாக திட்டியது (294), இரும்பு பைப்பால் தாக்கியது (324) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வழக்கு விசாரணைக்காக இருவரும் வரும் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக உத்திரவிட்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior