உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வருமான வரித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருமான வரித்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 26, 2012

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்

கடலூர் :

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து வருமான வரித்துறை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வருமானவரித்துறை சார்பில் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது.  நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் மாளிகையிலும், சிதம்பரம் அண்ணாமலை  நகர், விருந்தினர் மாளிகை சென்ட்ரல் ஹாலிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். கடலூர் மற்றும் விழுப்புரம் வருமான வரி அலுவலகங்கள் வரும் 28, 29ம்  தேதிகளில் விடுமுறை நாட்களிலும் செயல்படும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வருமான வரி படிவங்களை தாக்கல்  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read more »

திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் மாவட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு முகாம்கள்

கடலூர் : 

     வருமான வரித்துறை படிவங்கள் தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி துவங்குகிறது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி பிரதாப் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  வருமான வரித்துறை சார்பில் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம்  நெய்வேலி, சிதம்பரத்தில் நடக்கிறது. 

நெய்வேலி, வட்டம் 25, விருந்தினர் மாளிகையிலும், 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் ஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. 

             காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை செயல்படும் இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

சனி, ஜூலை 31, 2010

வருமான வரிக் கணக்கு: இன்று கடைசி

          தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சம்பளதாரர்கள் 2009-10-ம் நிதியாண்டுக்கு தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும்.  

            சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கவுண்ட்டர்கள் ஜூலை 28-ம் தேதி முதல் செயல்பட்டு  வருகின்றன. தாம்பரம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பளதாரர்களும் சிறப்புக் கவுண்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர்.  சென்னையில் கடந்த 3 தினங்களில் மட்டும் மொத்தம் 93,000 சம்பளதாரர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். 

                சிறப்புக் கவுண்ட்டர்கள் மூலம் மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மட்டும் 30,000 சம்பளதரார்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர்.  சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலக சிறப்புக் கவுண்ட்டர்களில் கடைசி நாளான சனிக்கிழமை (ஜூலை 31), காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பளதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குப் படிவத்தை அளிக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மாலை 6 மணி வரை வருமான வரிப் படிவங்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

புதன், ஜூலை 28, 2010

ரூ.4.35 லட்சம் கோடி வரி வசூலிக்க இலக்கு


கடலூர் : 

              ""நாடு முழுவதும் நடப்பாண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூல் செய்ய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது,'' என சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார். கடலூரில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை வருமான வரித்துறை தலைமை கமிஷனர் பத்தானியா தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு பின் அவர்  கூறியதாவது: 

               வருமான வரித்துறை கடந்த 1860ம் ஆண்டு துவங்கப்பட்டது. கடந்த 24ம் தேதி, 150ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினோம். இந்திய பொருளாதாரத்தில் வருமான வரித்துறை முதுகெலும்பாக உள்ளது. கடந்த ஆண்டு வருமான வரித்துறை மூலம் நாடு முழுவதும் நான்கு லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த தொகையில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் கடந்த ஆண்டு 400 கோடி ரூபாய் வருமான வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 500 கோடி ரூபாயாக உயர்த்தி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் ஜூலை 31ம் தேதிக்குள் ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும்.

               வரி செலுத்துவோருக்கு வசதியாக சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளன. இன்டர்நெட் வைத்திருப்பவர்கள், "இ' பைலிங் மூலம் வரி செலுத்தலாம். புதுச்சேரியில் 1.50 லட்சம் பேர் வரி செலுத்துவோர் உள்ளனர். நிறைய பேர் வரி செலுத்தாமல் உள்ளனர்; அவர்களை சர்வே எடுத்து வருகிறோம். எனவே, அவர்களாகவே முன்வந்து ரிட்டன்சை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சென்னை தலைமை கமிஷனர் பத்தானியா கூறினார்.

Read more »

வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டியில் வணிக வரித்துறை வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி : 

               பண்ருட்டியில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

             நகர வணிகவரித்துறை உதவி ஆணையர் பிரபுலிங்கம் தலைமை தாங்கினார். வணிகவரி அலுவலர் ராஜேஸ்வரி முன் னிலை வகித்தார். கூட்டத்தில் வணிகவரித் துறை சார்பில் இணைப்பு படிவம் 1ல் பில் எண், தேதி சேர்த்தல் குறித்தும், வியாபாரிகள் அனைவரும் வருமான வரித்துறை நிரந்தர கணக்கு எண் (பான்) வரும் ஜூலை 18ம் தேதிக்குள் எடுக்க வேண்டும். வரி பாக்கி செலுத்துவதற்கு சமாதான திட்டம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசினர். கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மதன்சந்த், சுரேஷ், உதவி வணிக அலுவலர்கள் சந்திரபோஸ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior