உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வருவாய்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருவாய்த்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 11, 2010

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உணவு இடைவேளை பிரசாரம்

திட்டக்குடி : 

           திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உணவு இடைவேளை பிரசாரம் மேற் கொண்டனர்.
 
            வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 30 சதவீதம் வழங்குதல் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக் குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உணவு இடைவேளை பிரசார இயக்கம் நடந்தது. வட்டத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங் கினார். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கோடி வரவேற்றார். ரத்தினகுமார், சிவா வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் எழிலன் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

கேட்பாரற்று கிடந்த ரேஷன் பொருட்கள் வருவாய்த் துறையினர் கைப்பற்றி விசாரணை

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே கேட்பாரற்று கிடந்த ரேஷன் பொருட்களை அதி காரிகள் கைப்பற்றினர்.
 
                  திட்டக்குடி தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் செழியன், உதவியாளர் இளவழகன் கொண்ட வருவாய்த்துறை குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராம பஸ் நிறுத்தத்தில் 50 லிட்டர் மண்ணெண்ணெய் பாரல் ஒன்றும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை அரிசியும் கேட்பாரற்று கிடந்தது. பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை பஸ் நிறுத்தத்தை சுற்றிலும் தீவிரமாக தேடினர். மர்ம நபர்கள் பொருட்களை விட்டு தப்பியோடியதால், அவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more »

திங்கள், பிப்ரவரி 22, 2010

பண்ருட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாட்டு தொழுவமாகிறது

பண்ருட்டி : 

           பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது.
 
                பண்ருட்டி  நகர வி.ஏ.ஓ. அலுவலகம்  களத்துமேடு பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., கோவிந்தசாமி கடந்த மார்ச் மாதம் எல்.என்.புரத்திற்கு மாற்றப்பட்டார். விழமங்கலம் வி.ஏ.ஓ., சையத் இப்ராகீம் பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., வாக கூடுதல்  பொறுப்பை கவனித்து வருகிறார். களத்துமேடு பகுதியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில்  அருகில் உள்ள திடீர்குப்பத்தில் சாராயம் குடித்துவிட்டு வருபவர்கள் அடிக்கடி  குடிபோதையில் நின்று தகராறு செய்வதும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் அலுவலக வாயில் முன் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். மழைக்காலங்களில் கட்டடத்தில் மழைக்கசிவு ஏற்பட்டதால்   கடந்த 4மாதங்களாக வி.ஏ.ஓ.சையத் இப்ராகீம் விழமங்கலத்தில் உள்ள அலுவலகத்திலேயே  பணியை தொடர்கிறார். இதனால் களத்துமேடு  அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அருகில் உள்ளவர்கள் அலுவலகம் முன் மாட்டுதொழுவமாக வைக்கோல் போர் வைத்து மாடு கட்ட துவங்கிவிட்டனர். ஆனால் பொதுமக்கள் பலர் வி.ஏ.ஓ.,அலுவலகம் பூட்டி கிடப்பதை பார்த்துவிட்டு நீண்ட அலைகழிப்புக்கு  பின் விழமங்கலம் சென்று சான்றிதழ் பெற வேண்டியுள்ளது.  நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்க வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.  இதனால் பொதுமக்கள் தான் பெரும் அலைகழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  பண்ருட்டி நகரத்திற்கு தனி வி.ஏ.ஓ., நியமிக்கவும், களத்துமேடு பகுதியில் வி.ஏ.ஓ.,அலுவலகம் தொடர்ந்து செயல்பட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior