உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்காளர் அடையாள அட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள்

             உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள் எவை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஆவணங்கள் அனைத்தும் 31.12. 2009க்கு முன்னர் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள 13 ஆவணங்கள் விவரம்:

 1. பாஸ்போர்ட்  2. ஓட்டுநர் உரிமம். 

 3. வருமான வரி அடையாள அட்டை. 

 4. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.  

5. பொது நிறுவன வங்கிகள் மற்றும் தபால் அலுவலக பாஸ் புத்தகங்கள். விவசாயிகளுக்கான கிஸôன் பாஸ் புத்தகங்கள்.  

6. ஓய்வூதிய ஆவணங்கள் (ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், முன்னாள் ராணுவ வீரர்  ஓய்வூதிய ஆவணங்கள், விதவை ஓய்வூதியம் பெறுவதற்காக வழங்கப்பட்ட ஆணைகள் இதற்குள் வரும்.)  

7. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அடையாள அட்டைகள். 

 8. வீட்டு மனை பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்.  

9. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தோர் என்பதற்கான சான்றிதழ்கள்.  

10. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள்.

 11. ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமங்கள். 

 12. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டைகள். 

 13. மத்திய தொழிலாளர் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள். 

                இந்த ஆவணங்கள் அனைத்தும் புகைப்படத்துடன் கூடியதாகவும், 31.12.2009-க்கு முன்னர் பெறப்பட்டதாகவும் இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

 குடும்பத் தலைவரின் ஆவணம்:

               இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை குடும்பத் தலைவர் காட்டினால், அவரின் மொத்த குடும்பத்தாரும் தனித்தனியாக அடையாள அட்டைகள் காட்டாமல் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.









Read more »

வெள்ளி, மார்ச் 11, 2011

நிலுவையில் உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்

            தற்போது நிலுவையாக உள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,


             13-4-2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவைத்தேர்தலில் தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க ஏதுவாக 100 சதவீதம் பிழையற்ற புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க முனைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2010-ம் ஆண்டிலும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின்போதும் வாக்காளராக பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கடந்த மாதம் 12-ந் தேதி, 19-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

             தற்போது நிலுவையாக உள்ள அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த முகாம்கள் ஊரகப்பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும், நகர்ப்புறங்களில் நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் சென்னையைப் பொறுத்தவரையில் மண்டல அலுவலகங்களிலும் நடைபெறும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் மையங்களிலும் வழக்கமாக இந்த அட்டை வழங்கப்படும்.

               எனவே, 2010 மற்றும் 2011 வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தத்தின்போது பதிவு செய்துகொண்டு இதுவரை அடையாள அட்டை பெறாத வாக்காளர்கள் அனைவரும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அடையாள அட்டை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டையை தடுக்க ஆலோசனை

கடலூர்:
              கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 242 பேருக்கு செல்போனில் பேசுவதற்கான சிம்கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் சீத்தாராமன் கலந்து கொண்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சிம்கார்டுகளை வழங்கினார். 

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
                மாவட்ட எல்லையோரங்களில் இரட்டை வாக்காளர் அடையாள அட்டையை பயன் படுத்துவதை தடுக்கும் வகையில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநில கலெக்டர்களின் ஆலோசனை கூட்டம் புதுச் சேரியில் விரைவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளில் கிராமப் புறங்களில் 1,200 வாக்காளர் கள் உள்ள வாக்குச்சாவடி களையும், நகர்புறங்களில் 1,400 வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளையும் இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

               அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தர், தொழில் நுட்ப துறை தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பதட்டம் நிறைந்த 230 வாக்குச்சாவடிகளில் எம்.இ, எம்.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர்த்தி வெப் கேமரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்து இருக்கிறார்கள். இவற்றை ஒருங்கிணைந்து பயிற்சி அளிப்பதற்காக கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார்.

               அதேபோல மாவட்டத்தில் உள்ள 1,945 வாக்குச்சாவடிகளையும் நேரில் பார்வையிட்டு அங்கு கதவு, ஜன்னல்கள் முறையாக உள்ளனவா, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்ல வசதியாக சாய்தள வசதி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று 188 மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பார்வையாளர் கள் தங்குவதற்கு வசதியாக கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், பெண்ணாடம் ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

                மேலும் அங்கு கம்ப்யூட்டர், டெலிபோன், இன்டர்நெட் மற்றும் டி.வி. உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுக்கான படிவங்கள் வந்துள்ளன. அதை யாரிடம் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றி தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவுரை கடிதம் வந்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அந்த பணியை கண்காணிப் பார்கள். ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடங்கிய புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு 19-ந் தேதி விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

               வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்திருந்தாலோ, சேதம் அடைந்து இருந்தாலோ, புதிய வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதில், புதிய வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு, 19, 20-ம்  தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 001.சி படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவங்களுடன், வீட்டு முகவரிக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி, அஞ்சலக கணக்கு பாஸ் புத்தகம், பேன் கார்டு, அரசு அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன், சம்மந்தப்பட்ட குறு வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளரிடம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

               நகல் அட்டை மார்ச் 5, 6 தேதிகளில் அதே வருவாய் ஆய்வாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

புதன், பிப்ரவரி 16, 2011

வாக்காளர் அடையாள அட்டை சட்டசபைத் தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

               சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு: 

              வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர். 

              வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாறுதல் ஆகியவற்றிற்கு முறையே படிவங்கள் 6, 7, 8 ஏ அளிக்கப்படும் விண்ணப்பங்களும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும். விண்ணப்பங்களை இரு பிரதிகளாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிவங்கள் பதிவிறக்க 


Application for obtaining duplicate / Replacement EPIC  

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior