உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 12, 2012

விருத்தாசலம் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவனுக்கு எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த விடை

விருத்தாசலம:

       விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் திங்கள்கிழமை நடந்த 12-ம் வகுப்பு ஆங்கிலத் தாள் தேர்வில், தனித்தேர்வர்கள் அறையில் செல்போனில் வினாவுக்குரிய விடை குறுஞ்செய்தியாக வந்ததால் மண்டல தேர்வுத் துறை துணை இயக்குநர் செல்போனை பறிமுதல் செய்தார்.

         விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் 387 பேர், தனித்தேர்வர்கள் 109 பேர் உள்பட மொத்தம் 496 பேரில் 479 பேர் தேர்வு எழுதினர். அப்போது மண்டல தேர்வுத்துறை துணை இயக்குநர் ராமச்சந்திரன் மாணவர்களை ஆய்வு செய்தார். இதில், தனித் தேர்வர்கள் எழுதிக்கொண்டிருந்த தேர்வறைக்குச் சென்றுள்ளார். அப்போது, தேர்வறை மேற்பார்வையாளரிடம் இருந்த மாணவனின் செல்பேசிக்கு வினாத்தாளுக்குரிய விடை குறுஞ்செய்தியாக வந்திருந்தது. செல்போனிலிருந்து குறுஞ்செய்தி ஒலி வருவதைக்கேட்டை துணை இயக்குநர் ராமச்சந்திரன், மேற்பார்வையாளரிடம் இருந்து செல்போனைக் கைப்பற்றி, பள்ளி தேர்வு முதன்மை கண்காணிப்பாளரும், தலைமை ஆசிரியருமான முருகேசனிடம் ஒப்படைத்தார்.

         குறுஞ்செய்தி வந்த செல்பேசியை சென்னை தேர்வுத் துறை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும் என துணை இயக்குநர் ராமசந்திரன் தெரிவித்தார். எனினும் செல்போனுக்கு உரிய தனித்தேர்வரிடம் செல்போன் இல்லாததால், அவர் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.











Read more »

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

விருத்தாசலத்தில் "பைக்கா" விளையாட்டு போட்டி துவக்க விழா

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன் றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது.

               விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., கலியபெருமாள், உதவி தலைமை ஆசிரியர் வீரராகவன், குமுதம் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் வரவேற்றார்.கல்விக்குழு உறுப்பினர் ராமு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். 927 மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். நேற்று கபடி, வாலிபால், கால் பந்து, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடந்தது. இன்று 12ம் தேதி தடகள விளையாட்டுப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Read more »

வியாழன், ஜூன் 24, 2010

விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வினாடி- வினா

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எல்.சி., சார்பில் மாணவர்களுக்கு வினாடி - வினா நிகழ்ச்சி நடந்தது.

                என்.எல்.சி., சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண் காட்சி நடைபெறும். இதில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த போட்டிகள் நடத் தப்பட்டு பரிசு வழங்கப்படும். இதற்கான வினாடி - வினா நிகழ்ச்சி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. ஆசிரியர்கள் வெங்கடேசன், உலகநாதன் போட்டியை நடத்தினர். சேப்ளாநத்தம், விருத்தாசலம் அரசு பள்ளிகள், பாத்திமா, சாரதா பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அசோகன், ராஜேஷ், மாதவி, ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.

Read more »

வியாழன், ஜூன் 17, 2010

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைவதால் அரசு அந்தந்த பள்ளிகளிலே பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல். சி., தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவும் பள்ளியில் நடக்கிறது. தலைமை ஆசிரியர் முருகேசன் பதிவினை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் வீரராகவன் தலைமையில் ஆசிரியர்கள் ராஜன், கிருஷ் ணகுமாரி, ஹேமலதா, விஜயலட்சுமி, மணிக்கொடி, உஷாகுமாரி, எழில்ராணி ஆகியோர் மாணவர்களின் சான்றிதழ் களை சரிபார்த்து பதிவு செய்தனர்.

Read more »

செவ்வாய், ஜூன் 15, 2010

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் யார்? 12 நாள் குழப்பம் தீர்ந்தது

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்ற குழப்பத்திற்கு நேற்று தீர்வு காணப்பட்டது.க டலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். இவர் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுடன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளிக்கு மாறுதலானார்.

                     இந்நிலையில், கடந்த 3ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவுடன் தனக்கு மனமொத்த மாறுதல் வந்துள்ளது என, விருத்தாசலம் பள்ளிக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட முயன்றார். தனக்கு எந்த தகவலும் இல்லை எனக் கூறி பிரகாசம் வருகைப் பதிவேட்டை மறைத்து வைத்தார். மறுநாளும் இதே பிரச்னை நீடித்ததால் யார் தலைமை ஆசிரியர் என, குழப்பம் நீடித்தது.

                 இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இருவருக்கும் கல்வித்துறை முறையாக இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப் பட்டதையடுத்து நேற்று காலை விருத்தாசலம் பள்ளி தலைமை ஆசிரியராக முருகேசன் பொறுப் பேற்றார். மருத்துவ விடுப்பில் சென்றுள்ள தலைமை ஆசிரியர் பிரகாசத்திற்கு இடமாறுதல் உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior