உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் அரசு மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 09, 2010

கைது செய்த நபரை விடுவிக்கக்கோரி மங்கலம்பேட்டை ஸ்டேஷன் முற்றுகை

விருத்தாசலம் : 

             மங்கலம்பேட்டையில் போலீசார் கைது செய்த நபரை விடுதலை செய்யக் கோரி கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

             விருத்தாசலம் மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (40). இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட். இவரிடம் விழுப்புரம் மாவட் டம் திருநாவலூர் பாண்டுரங்கன் (53) அவரது உறவினர்கள் நான்கு பேரை வெளிநாடு அனுப்புவது தொடர்பாக 1 லட்சத்து 40 ஆயிரம் பணமும், நான்கு பாஸ்போட்டுகளையும் கடந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொடுத்துள்ளனர்.

               பல மாதங்கள் ஆகியும் வெளிநாட் டிற்கு அனுப்பாததால் பாண்டுரங்கன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் 30 ஆயிரம் பணத்தையும், நான்கு பாஸ் போட்டுகளையும் கோவிந்தசாமி திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 6ம் தேதி பாண்டுரங்கன், சண்முகம் உள்ளிட்ட சிலர் கோணாங்குப்பம் கிராமத்திற்கு சென்று கோவிந்தசாமியிடம் மீதி பணத்தை கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கன், சண்முகம் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தசாமி, பாண்டுரங்கன் போலீஸ் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்தனர். பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கோவிந் தசாமியை நேற்று மாலை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

                இதை அறிந்த கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடினர். அப்போது போலீசார் கோவிந்தசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று மாலை 6.15 மணியளவில் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதை அறிந்த அக்கிராமத்தினர் ஜீப்பை வழிமறித்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு கோவிந்தசாமியை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் மங்கலம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

வெள்ளி, ஜூன் 25, 2010

நெய்வேலி அருகே சாலை விபத்துகளில் இருவர் பலி

கடலூர் : 

               நெய்வேலி அருகே இரண்டு சாலை விபத்துகளில் என்.எல்.சி., தொழிலாளர் உள்பட இருவர் இறந்தனர். நெய்வேலி தர்மல் 28வது வட்டம் இரண்டாவது மெயின் தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாலமுருகேசன்(33). இவர் டி.எஸ்.,இரண்டு பாப்லர் சொசையிட்டியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முதல் ஷிப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தர்மல் 1லிருந்து இரண்டிற்கு செல்லும் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் என்.எல்.சி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

               இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதே போன்று வடலூர் அடுத்த செங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (70). இவர் நேற்று காலை 11 மணியளவில் வீணங்கேணி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தார். உடன் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சனி, மே 29, 2010

கோவில் உண்டியல் வைப்பதில் மோதல் விருத்தாசலம் அருகே 30 பேர் படுகாயம்

விருத்தாசலம் :

                    கோவில் உண்டியல் வைப்பதில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பயர் காலனியைச் சேர்ந்தவர்கள் சேவியப்பர் என்ற இந்து கடவுள் கோவிலை கட்டி கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் ரோட்டிற்கு உள்ளே தள்ளி அமைந்திருந்ததால் அந்த கோவிலுக்கு அருகே ஒரு உண்டியலும், சாலை ஓரத்தில் ஒரு உண்டியலும் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று சாலை ஓரத்தில் உண்டியல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனையறிந்த ஊர் தரப்பினர் சாலை ஓரத்தில் துஷ்ட தேவதை சிலை இருப்பதால் அதன் அருகே உண்டியல் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காலனி மற்றும் ஊர்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

                         தகவல் அறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., ராஜசேகரன் மற்றும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இச்சம் வத்தில் போலீஸ்காரர் விக்னேஷ்வரன் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த செல்வராசு (60), சேகர் (40), பாலமுருகன், செல்லப் பாங்கி (30), அலமேலு (17) உட்பட 30 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாசில்தார் ஜெயராமன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி உண்டியல் வைப்பது குறித்து முடிவு செய்யலாம் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்கு தற்காலிக முடிவு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

செவ்வாய், மே 18, 2010

நரிக்குறவர்கள் மோதல் : துப்பாக்கி சூடு: வாலிபர் கைது


விருத்தாசலம் : 

              இரு சக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்ட நரிக்குறவர் சங்க தலைவரை, நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

               விருத்தாசலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). நரிக்குறவர் சங்கத் தலைவர். அதே காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது இளைய மகன் பாஷா (13). இவர் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனை பார்த்த பாண்டியன், பாஷாவை கண்டித்தார். இதுபற்றி பாஷா தனது அண்ணன் வடிவேலுவிடம் (23) கூறினார். உடன் வடிவேல் எப்படி என் தம்பியை திட்டலாம் என பாண்டியனிடம் தகராறு செய்தார்.

                  இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், வடிவேலுவின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். கோபமடைந்த வடிவேல் வேட்டைக்கு செல்ல, லோடு செய்து தயாராக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பாண்டியனை சுட்டார். இதில் பாண்டியனின் கழுத்து, கன்னம் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுடுவதை தடுக்க முயன்ற, விஜய் என்பவரின் மனைவி கொளஞ்சிக்கும் காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்குப் பதிந்து விருத்தாசலம் போலீசார் வடிவேலுவை கைது செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior